Unnamed: 0
int64
0
1.34k
Book
stringclasses
75 values
Chapter
stringlengths
25
48
Content
stringlengths
252
17.1k
Url
stringlengths
47
62
0
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 1 – திருவிவிலியம்
கடவுள் உலகைப் படைத்தல் 1 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, 2 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. 3 அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். 4 கடவுள...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-1
1
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 2 – திருவிவிலியம்
1 விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. 2 மேலும், கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். 3 கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில், கடவுள்...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-2
2
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 3 – திருவிவிலியம்
மனிதனின் கீழ்ப்படியாமை 1 ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது. 2 பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். 3 ஆன...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-3
3
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 4 – திருவிவிலியம்
காயினும் ஆபேலும் 1 ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் “ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்” என்றாள். 2 பின்பு, அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான். 3 சில நாள்கள் சென்றன. காயின் நில...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-4
4
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 5 – திருவிவிலியம்
ஆதாமின் வழிமரபினர் (1 குறி 1:1-4) 1 ஆதாமின் வழிமரபின் அட்டவணை பின்வருமாறு: கடவுள் மனிதரைப் படைத்தபொழுது அவர்களைத் தம் சாயலில் உருவாக்கினார். 2 ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘மனிதர்’ என்று பெயரிட்டார். 3 ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உர...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-5
5
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 6 – திருவிவிலியம்
மனிதரின் தீச்செயல் 1 மண்ணில் மனிதர் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் புதல்வியர் பிறந்தபொழுது, 2 மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர். 3 அப்பொழுது ஆண்டவர், “என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை. அவன் வெறும் சதைதானே!...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-6
6
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 7 – திருவிவிலியம்
வெள்ளப்பெருக்கு 1 அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன். 2 தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடியையும். 3 வானத்துப் பறவைகளி...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-7
7
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 8 – திருவிவிலியம்
வெள்ளப்பெருக்கின் முடிவு 1 கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே, மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்; வெள்ளம் தணியத் தொடங்கியது. 2 பேராழத்தின் ஊற்றுகளும், வானங்களின் மதகுகளும் மூடப்பட்டன; வானத்திலிருந்து மழை பெய்வது நின்றது. 3 மண்ணுலகில...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-8
8
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 9 – திருவிவிலியம்
நோவாவுடன் கடவுளின் உடன்படிக்கை 1 கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள். 2 மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 3 நடமாடி உயிர்வாழும் அனைத்து...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-9
9
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 10 – திருவிவிலியம்
நோவா புதல்வரின் வழிமரபினர் (1 குறி 1:5-23) 1 நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து ஆகியோரின் வழிமரபினர் இவர்களே. வெள்ளப் பெருக்குக்குப்பின் அவர்களுக்குப் புதல்வர் பிறந்தனர். 2 எப்பேத்தின் புதல்வர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மெசேக்கு, தீராசு. 3 கோமேரின் புதல்வர்: அஸ்கனாசு, இரிபாத்து, தோகர்மா. 4 யாவானின் ...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-10
10
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 11 – திருவிவிலியம்
பாபேல் கோபுரம் 1 அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. 2 மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர். 3 அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, “வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்” என்றனர். அவர்கள் செங்கல்லைக...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-11
11
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 12 – திருவிவிலியம்
ஆபிராமின் அழைப்பு 1 ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். 2 உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். 3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-12
12
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 13 – திருவிவிலியம்
ஆபிராம், லோத்து பிரிதல் 1 ஆகவே, ஆபிராம் தம் மனைவியுடனும் தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். 2 அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார். 3 நெகேபிலிருந்து பெத்தேல் வரை படிப்படியாகப் பயணம் செய்து பெத்தெலுக்கும் ஆயிக்கும் இ...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-13
13
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 14 – திருவிவிலியம்
ஆபிராம் லோத்தை மீட்டல் 1 அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும் கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது, 2 அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர். 3 அவர்கள் அனை...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-14
14
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 15 – திருவிவிலியம்
ஆபிராமுடன் கடவுளின் உடன்படிக்கை 1 இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.” 2 அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நக...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-15
15
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 16 – திருவிவிலியம்
ஆகாரும் இஸ்மயேலும் 1 ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். 2 சாராய் ஆபிராமிடம், “ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்” என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் க...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-16
16
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 17 – திருவிவிலியம்
ஆபிரகாமுடன் கடவுளின் உடன்படிக்கை-விருத்தசேதனம் 1 ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு. 2 உனக்கும் எனக்குமிடையே ஓர் உடன்படிக்கையை நான் ஏற்படுத்திக்கொள்வேன்; உன்னை மிகமிகப் பெருகச் செய்வேன்” என்றார். 3 அப்பொழுது ஆபிர...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-17
17
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 18 – திருவிவிலியம்
ஆபிரகாமுக்கு மகன் வாக்களிக்கப்பெறல் 1 பின்பு, ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், 2 கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூட...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-18
18
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 19 – திருவிவிலியம்
சோதோமின் தீச்செயல் 1 மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர் சோதோமுக்கு வந்தனர். அப்பொழுது நகரின் நுழை வாயிலில் லோத்து உட்கார்ந்திருந்தார். அவர் அவர்களைக் கண்டவுடன் எழுந்து சந்திக்கச் சென்று தரைமட்டும் தாழ்ந்து அவர்களை வணங்கினார். 2 பிறகு, “என் தலைவர்களே, அருள்கூர்ந்து உங்கள் அடியானின் இல்லத்திற்கு வாருங்கள். உங்கள் கால்க...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-19
19
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 20 – திருவிவிலியம்
ஆபிரகாமும் அபிமெலக்கும் 1 ஆபிரகாம் அங்கிருந்து புறப்பட்டு நெகேபுக்குச் சென்று காதேசுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து, பின்னர் கெராரில் தங்கினார். 2 அப்போது ஆபிரகாம் தம் மனைவி சாராவைத் தம் சகோதரி என்று சொல்லிக் கொண்டமையால், கெரார் மன்னனாகிய அபிமெலக்கு ஆளனுப்பி அவரை அழைத்துவரச் செய்தான். 3 இரவில் ஆண்டவர் அப...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-20
20
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 21 – திருவிவிலியம்
ஈசாக்கின் பிறப்பு 1 ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார். 2 கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். 3 ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, ...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-21
21
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 22 – திருவிவிலியம்
ஈசாக்கைப் பலியிட ஆபிரகாமுக்குக் கட்டளை 1 இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் “இதோ! அடியேன்” என்றார். 2 அவர், “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி ...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-22
22
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 23 – திருவிவிலியம்
சாராவின் இறப்பு-மூதாதையரின் கல்லறை 1 சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே. 2 கானான் நாட்டிலுள்ள எபிரோன் என்ற கிரியத்து அர்பா நகரில் சாரா இறந்தார். அவருக்காகப் புலம்பி அழுவதற்காக ஆபிரகாம் சென்றார். 3 பிறகு, சடலம் இருந்த இடத்தைவிட்டு அவர் எழுந்து இத்தியரிடம் சென்று சொன்னது: 4 “நான் உங்களிடையே அந்...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-23
23
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 24 – திருவிவிலியம்
ஈசாக்கு-ரெபேக்கா திருமணம் 1 ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஆண்டவர் அவருக்கு அனைத்திலும் ஆசி வழங்கியிருந்தார். 2 ஒருநாள் அவர் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, “உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, 3 விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல்...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-24
24
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 25 – திருவிவிலியம்
ஆபிரகாமின் ஏனைய வழிமரபினர் (1 குறி 1:32-33) 1 ஆபிரகாம் கெற்றூரா என்ற பெயருடைய வேறொரு பெண்ணை மணந்து கொண்டார். 2 அவர் அவருக்குச் சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இசுபாக்கு, சூவாகு என்பவர்களைப் பெற்றெடுத்தார். 3 யோக்சான், சோபாவையும் தெதானையும் பெற்றான். தெதானின் புதல்வர் ஆசூரிம், லெத்தூசிம், இலயுமிம் ஆவர். 4 மிதியானி...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-25
25
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 26 – திருவிவிலியம்
கெராரில் ஈசாக்கின் வாழ்க்கை 1 முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர, மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று. ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார். 2 அப்போது ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “எகிப்து நாட்டிற்கு நீ போகாமல், நான் உனக்குக் காட்டும் நாட்டிலே தங்கியிரு. 3 அந்நாட்டில் ...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-26
26
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 27 – திருவிவிலியம்
ஈசாக்கு யாக்கோபுக்கு ஆசிவழங்குதல் 1 ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, “என் மகனே” என்றார்; ஏசா, “இதோ வந்துவிட்டேன்” என்றான். 2 அவர் அவனை நோக்கி, “இதோ பார்; எனக்கு வயதாகிவிட்டது. சாவு எந்நாள் வருமோ என்றறியேன். 3 இப்பொழுது உன் கருவிகளான வில்லையும் அம...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-27
27
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 28 – திருவிவிலியம்
1 ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனுக்கு ஆசி வழங்கிக் கட்டளையிட்டுக் கூறியது: “நீ கானானியப் புதல்வியருள் எவளையும் மணந்து கொள்ளாதே. 2 புறப்பட்டு, பதான் அராமுக்குப்போய், உன் தாயின் தந்தையாகிய பெத்துவேல் வீட்டிற்குச் செல். அங்கு உன் தாய்மாமன் லாபான் புதல்வியருள் ஒருத்தியை மணந்துகொள். 3 எல்லாம் வல்ல இறைவன் உனக்கு ஆசி வழங்கி, நீ...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-28
28
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 29 – திருவிவிலியம்
லாபான் வீட்டை யாக்கோபு வந்தடைதல் 1 யாக்கோபு கீழ்த்திசை மக்களின் நாட்டை நோக்கிக் காலெடுத்து வைத்துப் பயணமானார். 2 இதோ! வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே கிடை போட்டிருந்த ஆட்டுமந்தைகள் மூன்றையும் கண்டார். அந்தக் கிணற்றிலிருந்துதான் மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டப்படும். அதன் வாய் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது....
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-29
29
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 30 – திருவிவிலியம்
1 தாம் யாக்கோபுக்குப் பிள்ளை பெறவில்லையே என்று ராகேல் தம் சகோதரியின் மேல் பொறாமை கொண்டார். அவர் தம் கணவனை நோக்கி, “நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும். இல்லையேல் செத்துப் போவேன்” என்றார். 2 யாக்கோபு அவர் மீது சினம் கொண்டு, “நான் என்ன கடவுளா? அவரல்லவா உனக்குத் தாய்மைப் பேறு தராதிருக்கிறார்” என்றார். 3 அப்பொழுது ராகேல் “இதோ...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-30
30
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 31 – திருவிவிலியம்
யாக்கோபு லாபானிடமிருந்து தப்பியோடல் 1 லாபானின் புதல்வர், “நம் தந்தைக்குரிய யாவற்றையும் யாக்கோபு கைப்பற்றி அவருடைய சொத்தைக்கொண்டே, இந்தச் செல்வத்தை எல்லாம் சேர்த்துக்கொண்டான்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதை யாக்கோபு கேட்டார். 2 லாபானின் மனமும் முன்புபோல் இல்லை என்று யாக்கோபு கண்டார். 3 ஆண்டவர் யாக்கோபை நோக்கி, “உன் ம...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-31
31
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 32 – திருவிவிலியம்
1 பின்னர், யாக்கோபு தம் பயணத்தைத் தொடர்ந்தார். கடவுளின் தூதர்கள் வழியில் அவரைச் சந்தித்தார்கள். 2 யாக்கோபு அவர்களைக் கண்டபோது, ‘இதுதான் கடவுளின் படை’ என்று கூறி, அந்த இடத்திற்கு ‘மகனயிம்’ என்று பெயரிட்டார். 3 பின்பு, யாக்கோபு ஏதோம் நாட்டிலுள்ள சேயிர் பகுதியில் வாழ்ந்து வந்த தம் சகோதரன் ஏசாவிடம் தூதரை அனுப்பினார். 4 அவர...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-32
32
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 33 – திருவிவிலியம்
யாக்கோபு-ஏசா சந்திப்பு 1 யாக்கோபு தம் கண்களை உயர்த்திப் பார்க்க, ஏசா நானூறு ஆள்களோடு வருவதைக் கண்டார். உடனே அவர் லேயாவிடமும் ராகேலிடமும் இரு வேலைக்காரிகளிடமும் பிள்ளைகளைப் பிரித்து ஒப்படைத்தார். 2 முதல் வரிசையில் வேலைக்காரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும், இரண்டாம் வரிசையில் லேயாவையும், அவருடைய பிள்ளைகளையும், இறுதியில்...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-33
33
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 34 – திருவிவிலியம்
தீனாவுக்கு ஏற்பட்ட அவமானம் 1 யாக்கோபுக்கு லேயா பெற்றெடுத்த மகளான தீனா அந்நாட்டு மகளிரைப் பார்க்க வெளியே புறப்பட்டுப் போனாள். 2 இவ்வியனான ஆமோரின் மகனும் அந்நாட்டின் தலைவனுமான செக்கேம் அவளைக் கண்டு தூக்கிச்சென்று அவளுடன் உறவு கொண்டு சிறுமைப்படுத்தினான். 3 யாக்கோபின் மகள் தீனாவிடம் அவன் மனம் மேலும் ஈர்க்கப்பெற, அவன் அப்பெ...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-34
34
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 35 – திருவிவிலியம்
பெத்தேலில் கடவுள் யாக்கோபுக்கு ஆசி வழங்குதல் 1 அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி, “நீ எழுந்து பெத்தேலுக்குப் போய் அங்கே குடியிரு. உன் சகோதரன் ஏசாவிடமிருந்து தப்பியோடியபோது உனக்குத் தோன்றின இறைவனுக்கு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தை எழுப்பு” என்றார். 2 யாக்கோபு தம் வீட்டாரையும் அவரோடிருந்த அனைவரையும் நோக்கி, “உங்களிடம் உள்ள ...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-35
35
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 36 – திருவிவிலியம்
ஏசாவின் வழிமரபினர் (1 குறி 1:34-37) 1 ஏதோம் என்ற ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே. 2 ஏசா கானான் நாட்டுப் பெண்களில் இத்தியன் ஏலோனின் மகள் ஆதாவையும் இவ்வியன் சிபெயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமாவையும், 3 இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பாசமத்தையும் மணந்து கொண்டார். 4 ஏசாவுக்கு ஆதா எலிப்பாசைப் பெற்றெடுத்தாள். ப...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-36
36
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 37 – திருவிவிலியம்
யோசேப்பும் அவர் சகோதரரும் 1 கானான் நாட்டில் தம் தந்தை தங்கியிருந்த நிலப்பகுதிகளில் யாக்கோபும் வாழ்ந்து வந்தார். 2 யாக்கோபின் குடும்ப வரலாறு இதுவே; யோசேப்பு பதினேழு வயது இளைஞனாய் இருந்தபோது, தம் தந்தையின் மறு மனைவியரான பிலகா, சில்பா என்பவர்களுடைய புதல்வர்களான தம் சகோதரரோடு மந்தை மேய்த்துக் கொண்டிருந்தார். அவர் தம் சகோதர...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-37
37
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 38 – திருவிவிலியம்
யூதாவும் தாமாரும் 1 அக்காலத்தில் யூதா தம் சகோதரர்களை விட்டுப் பிரிந்து ஈரா என்ற பெயருடைய அதுல்லாமியனிடம் சென்றார். 2 அங்கே சூவா என்ற கானானியன் ஒருவனின் மகளைக் கண்டு, அவளை மணமுடித்து, அவளோடு கூடி வாழ்ந்தார். 3 அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஏர் என்று பெயரிட்டாள். 4 அவள் மீண்டும் கருவுற்று, ஒரு மகனைப் ப...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-38
38
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 39 – திருவிவிலியம்
போத்திபாரின் வீட்டில் யோசேப்பு 1 யோசேப்பு எகிப்து நாட்டிற்கு கொண்டு போகப்பட்டபோது, பார்வோனின் மெய்க்காப்பாளர் தலைவனும் படைத்தலைவனுமான போத்திபார் என்ற எகிப்தியன் அவரை, அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மயேலரிடமிருந்து விலைக்கு வாங்கினான். 2 ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எனவே, அவர் சிறப்புற்றவராகத் தம் எகிப்தியத் தலைவனின் ...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-39
39
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 40 – திருவிவிலியம்
கைதிகளின் கனவுகளும் யோசேப்பின் விளக்கங்களும் 1 இவை நிகழ்ந்தபின், எகிப்து மன்னனுக்கு மது பரிமாறுவோனும், அப்பம் தயாரிப்போனும் தங்கள் தலைவனாகிய எகிப்திய மன்னனுக்கு எதிராகக் குற்றம் செய்தனர். 2 பார்வோன் தன் மது பரிமாறுவோரின் தலைவனும் அப்பம் தயாரிப்போரின் தலைவனும் ஆகிய இரு அதிகாரிகள் மீதும் கடும் கோபம் கொண்டு, 3 காவலர் தலைவ...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-40
40
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 41 – திருவிவிலியம்
பார்வோனின் கனவுகளும் யோசேப்பின் விளக்கமும் 1 இரண்டு முழு ஆண்டுகள் கழிந்தபின், பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன் நைல் நதிக் கரையில் நின்று கொண்டிருந்தான். 2 அப்பொழுது அழகிய கொழுத்த ஏழு பசுக்கள் நதியிலிருந்து கரைக்கு வந்து கோரைப்புற்களிடையே மேய்ந்து கொண்டிருந்தன. 3 அவற்றைத் தொடர்ந்து, நலிந்து மெலிந்த வேறு ஏழு பசு...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-41
41
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 42 – திருவிவிலியம்
யோசேப்பின் சகோதரர் தானியம் வாங்க எகிப்திற்கு வருதல் 1 எகிப்தில் தானியம் கிடைப்பதைப் பற்றி யாக்கோபு கேள்விப்பட்டு, தம் புதல்வர்களை நோக்கி, “நீங்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்? 2 இதோ! எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்படுகிறேன். நாம் பஞ்சத்தால் சாகாமல் உயிரோடிருக்குமாறு, நீங்கள் அங்குச் சென்...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-42
42
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 43 – திருவிவிலியம்
பென்யமின் எகிப்துக்குச் செல்லல் 1 நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது. 2 எகிப்திலிருந்து வாங்கி வந்திருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. அவர்கள் தந்தை அவர்களை நோக்கி, “நீங்கள் திரும்பிப் போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்” என்றார். 3 அதற்கு யூதா, “அந்த ஆள் உங்கள் இளைய சகோதரனை உங்களுடன் அழைத்து...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-43
43
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 44 – திருவிவிலியம்
காணாமற்போன வெள்ளிக் கோப்பை 1 பின்னர், யோசேப்பு தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, “அவர்களுடைய கோணிப்பைகளில் அவர்கள் தூக்கிச் செல்லுமளவு தானியம் நிரப்பி, அவனவன் பணத்தைப் பையின் வாயில் வைத்துக் கட்டிவிடு. 2 இளையவனது கோணிப்பை வாயில் எனது வெள்ளிக்கோப்பையையும், தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் வைத்துக் கட்டிவிடு” என்று...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-44
44
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 45 – திருவிவிலியம்
யோசேப்பு தம்மைத் தெரியப்படுத்துதல் 1 அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், “எல்லோரும் என்னைவிட்டு வெளியே போங்கள்” என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும் பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை. 2 உடனே அவர் கூக்குரலிட்...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-45
45
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 46 – திருவிவிலியம்
யாக்கோபு தம் குடும்பத்துடன் எகிப்து செல்லல் 1 பின்பு, இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார். 2 அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, “யாக்கோபு! யாக்கோபு!” என்று அழைத்தார். அவர், “இதோ அடி...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-46
46
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 47 – திருவிவிலியம்
1 பின்பு, யோசேப்பு பார்வோனிடம் போய், “என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடு மாடுகளோடும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது அவர்கள் கோசேன் பகுதியில் தங்கியிருக்கிறார்கள்” என்று அறிவித்தார். 2 மேலும், தம் சகோதரரில் ஐந்து பேரைப் பார்வோன் முன்பாகக் கொண்டுவந்து நிறு...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-47
47
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 48 – திருவிவிலியம்
எப்ராயிம், மனாசேக்கு யாக்கோபு ஆசி வழங்குதல் 1 இந்நிகழ்ச்சிகளுக்குப்பின், “உம் தந்தை உடல் நலமின்றி இருக்கிறார்” என்று யோசேப்புக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், தம் இரு மைந்தர்களாகிய மனாசேயையும் எப்ராயிமையும் அழைத்துக் கொண்டு சென்றார். 2 “இதோ உம் மகன் யோசேப்பு உம்மைக் காண வந்திருக்கிறார்” என்று அறிவிக்கப்பட்டவுடன், யா...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-48
48
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 49 – திருவிவிலியம்
1 யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழவிருப்பதை நான் அறிவிக்கப் போகிறேன். 2 கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள். 3 ரூபன்! நீயே என் தலைமகன்; என் ஆற்றல் நீயே; என் ஆண்மையின் முதற்கனி ந...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-49
49
தொடக்கநூல்
தொடக்கநூல் அதிகாரம் – 50 – திருவிவிலியம்
1 அப்பொழுது யோசேப்பு, தம் தந்தையின் முகத்தின் மீது விழுந்து அழுது அவரை முத்தமிட்டார். 2 பின்பு, தம் தந்தையின் உடலை மருத்துவ முறையில் பாதுகாப்புச் செய்யும்படி தம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர். 3 இதற்கு நாற்பது நாள்கள் தேவைப்பட்டன. ஏனெனில், ஒரு சடலத்திற்கு முறையான பா...
https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-50
50
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 1 – திருவிவிலியம்
எகிப்தில் இஸ்ரயேலரின் அடிமைவாழ்க்கை 1 யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை: 2 ரூபன், சிமியோன், லேவி, யூதா; 3 இசக்கார், செபுலோன், பென்யமின்; 4 தாண், நப்தலி, காத்து, ஆசேர். 5 யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர்.*யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தா...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-1
51
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 2 – திருவிவிலியம்
மோசேயின் பிறப்பு 1 இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார். 2 அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்; அது அழகாயிருந்தது என்று கண்டாள்; மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். 3 இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீ...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-2
52
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 3 – திருவிவிலியம்
மோசேயின் அழைப்பு 1 மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். 2 அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-3
53
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 4 – திருவிவிலியம்
மோசே பெற்ற வியத்தகு ஆற்றல் 1 மோசே மறுமொழியாக, “இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்; என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள். ஏனெனில், ‘ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை’ என்று சொல்வார்கள்” என்று கூறினார். 2 ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். ‘ஒரு கோல்’ என்றார் அவர். 3 ‘அதைத்தரையில் விட்டெறி’ ...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-4
54
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 5 – திருவிவிலியம்
பார்வோன்முன் மோசேயும் ஆரோனும் 1 பின்னர், மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து அவனை நோக்கி, “பாலைநிலத்தில் எனக்கொரு விழா எடுக்குமாறு என் மக்களைப் போகவிடு என இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைத்துள்ளார்” என்று அறிவித்தனர். 2 அதற்குப் பார்வோன், “யார் அந்த ஆண்டவர்? அவரது பேச்சைக் கேட்டு இஸ்ரயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த ...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-5
55
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 6 – திருவிவிலியம்
1 ஆண்டவர் மோசேயை நோக்கி, “நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய்; என் கைவன்மை கண்டு அவன் அவர்களைப் போக விடுவான்; தன் நாட்டிலிருந்து துரத்தியும் விடுவான்” என்றார். மோசேயின் அழைப்பு 2 கடவுள் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்: 3 “நானே ஆண்டவர். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ‘ஆண்டவர்’ என்ற என் பெயரா...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-6
56
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 7 – திருவிவிலியம்
1 ஆண்டவர் மோசேயை நோக்கி, “பார், நான் உன்னைப் பார்வோனுக்குக் கடவுளாக வைத்துள்ளேன். உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான். 2 நான் உனக்குக் கட்டளை இடுவதையெல்லாம் நீ எடுத்துச் சொல்வாய். பார்வோன் தன் நாட்டினின்று இஸ்ரயேல் மக்களைப் போகவிடும்படி அவனிடம் உன் சகோதரன் ஆரோன் பேசுவான். 3 நான் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்து...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-7
57
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 8 – திருவிவிலியம்
தவளைகள் 1 ஆண்டவர் மோசேயை நோக்கிக் கூறியது: “நீ பார்வோனிடம் போய் அவனிடம், ‘ஆண்டவர் கூறுகிறார்: எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு‘. 2 அவர்களை அனுப்ப நீ மறுத்தால், இதோ நானே உன் நிலப்பகுதியையெல்லாம் தவளைகளால் தாக்கப்போகிறேன். 3 தவளைகள் நைல்நதியை நிரப்பி, பின்னர் உன் வீட்டிற்குள்ளும், உன் படுக்கை அறைக்குள்ளும்...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-8
58
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 9 – திருவிவிலியம்
கால்நடைகள் சாவு 1 மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீ பார்வோனிடம் சென்று அவனிடம் சொல்; எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: எனக்கு வழிபாடு செலுத்துவதற்காக என் மக்களைப் போகவிடு! 2 நீ அவர்களைப் போகவிடாமல் இன்னும் தடைசெய்தால், 3 நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள், ஆடுகள் ஆக...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-9
59
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 10 – திருவிவிலியம்
வெட்டுக்கிளிகள் 1 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ பார்வோனிடம் போ. நான் அவன் மனத்தையும் அவன் அலுவலரின் மனத்தையும் கடினப்படுத்தியதன் நோக்கம்: 2 என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும், எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவ...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-10
60
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 11 – திருவிவிலியம்
தலைமகன் சாவு முன்னறிவிப்பு 1 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, “பார்வோன் மேலும் எகிப்தின் மேலும் இன்னும் ஒரு கொள்ளை நோய் வரச்செய்வேன். அவன் உங்களை முற்றிலும் போகவிடுவதோடு இங்கிருந்து உங்களைத் துரத்தி விரட்டிவிடுவான். 2 எனவே மக்கள் கேட்கும்படி அறிவியுங்கள். ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவனிடமிருந்தும் ஒவ்வொருத்தியும் தனக்...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-11
61
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 12 – திருவிவிலியம்
பாஸ்கா-கடந்து செல்லல் 1 எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: 2 உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! 3 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்ற...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-12
62
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 13 – திருவிவிலியம்
தலைமகன் அர்ப்பணம் 1 ஆண்டவர் மோசேயை நோக்கி உரைத்தது; 2 “தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்; இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை” என்றார். புளிப்பற்ற அப்ப விழா 3 மோசே மக்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து நீங்கள் வெ...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-13
63
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 14 – திருவிவிலியம்
செங்கடலைக் கடத்தல் 1 ஆண்டவர் மோசேயிடம், 2 “இஸ்ரயேல் மக்கள் திரும்பிச் சென்று மிக்தோலுக்கும் பாகால் செபோனின் அருகிலுள்ள கடலுக்கும் இடையே அமைந்த பிககிரோத்துக்கு எதிரே கடல் அருகில் பாளையம் இறங்கும்படி அவர்களிடம் சொல். 3 பார்வோன் இஸ்ரயேல் மக்களைக் குறித்து, பாலைநிலம் குறுக்கிட்டதால் அவர்கள் இன்னும் நாட்டிற்குள்ளேயே அலைந்து...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-14
64
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 15 – திருவிவிலியம்
மோசேயின் வெற்றிப்பாடல் 1 அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடிய பாடல் வருமாறு: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். 2 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-15
65
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 16 – திருவிவிலியம்
மன்னா, காடை 1 இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கிடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது. 2 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ம...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-16
66
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 17 – திருவிவிலியம்
பாறையிலிருந்து தண்ணீர் (எண் 20:1-13) 1 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் ஆண்டவர் குறித்த ஒழுங்கின்படி சீன் பாலை நிலத்திலிருந்து பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் இரபிதிம் வந்தபோது அங்குப் பாளையம் இறங்கினர். மக்கள் குடிக்க அங்குத் தண்ணீர் இல்லை. 2 இதனால் மக்கள் மோசேயிடம் வாதாடி, ‘குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்’ ...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-17
67
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 18 – திருவிவிலியம்
இத்திரோ-மோசே சந்திப்பு 1 மிதியானின் அர்ச்சகரும் மோசேயின் மாமனாருமாகிய இத்திரோ என்பவர் கடவுள் மோசேக்கும் அவர் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் செய்தது அனைத்தையும், ஆண்டவர் இஸ்ரயேலை எகிப்தினின்று வெளியேறச் செய்ததையும் கேள்வியுற்றார். 2 மோசே முன்பு அனுப்பிவைத்திருந்த அவர் மனைவி சிப்போராவையும், இரு புதல்வர்களையும் அவர் மாமனார...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-18
68
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 19 – திருவிவிலியம்
சீனாய் மலையருகில் இஸ்ரயேலர் 1 எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த மூன்றாம் மாதம் முதல் நாளில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலைநிலத்தைச் சென்றடைந்தனர். 2 இரபிதீமிலிருந்து பயணம் மேற்கொண்ட அவர்கள் சீனாய் பாலைநிலத்தை வந்தடைந்து, பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர். 3 ஆனால், மோசே ...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-19
69
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 20 – திருவிவிலியம்
கடவுள் தந்த கட்டளைகள் (இச 5:1-21) 1 கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: 2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். 3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. 4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவா...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-20
70
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 21 – திருவிவிலியம்
அடிமைகள் (இச 15:12-18) 1 அவர்களுக்கு நீ அளிக்க வேண்டிய நீதிச்சட்டங்கள் பின்வருமாறு; 2 நீ ஒரு எபிரேய அடிமையை வாங்கினால், அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் அடிமை வேலை செய்வான். ஏழாம் ஆண்டு அவன் எதுவும் தராமல் விடுதலை பெற்று வெளியேறுவான். 3 தனித்து வந்திருந்தால் தனித்து வெளியேறுவான்; மனைவியோடு வந்திருந்தால் அவனுடைய மனைவியும் அவனோட...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-21
71
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 22 – திருவிவிலியம்
ஈடுதருதல் பற்றிய சட்டங்கள் 1 ஆட்டையோ மாட்டையோ ஒருவர் திருடி வெட்டி விட்டால் அல்லது விற்றுவிட்டால் ஒரு மாட்டுக்கு ஐந்து மாடு என்றும், ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடு என்றும் ஈடுகட்டுவார். 2 திருடர் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டுத் தாக்குண்டு இறந்து போனால் அவருக்காக இரத்தப்பழி இல்லை. 3 கதிரவன் உதித்தபின் இது நிகழ்ந்திருந்தா...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-22
72
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 23 – திருவிவிலியம்
நீதியும் இரக்கமும் 1 பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம். 2 கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே. வழக்கின்போது கும்பலைச் சார்ந்து கொண்டு நீதியைத் திரித்துச் சான்று சொல்ல வேண்டாம்! 3 எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே. 4 உன் பகைவரின...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-23
73
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 24 – திருவிவிலியம்
உடன்படிக்கை 1 ஆண்டவர் மோசேயிடம், “ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோருடனும், இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களுடனும் ஆண்டவரிடமாய் ஏறிவாருங்கள்; தொலையில் நின்று தொழுதுகொள்ளுங்கள். 2 மோசே மட்டும் ஆண்டவர் அருகில் வரலாம்; ஏனையோர் அருகில் வரலாகாது; மக்கள் அவரோடு மலை மேலேறி வரக்கூடாது” என்று கூறினார். 3 எனவே, மோசே மக்களிடம் வந்து ஆண்டவர்...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-24
74
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 25 – திருவிவிலியம்
திருத்தலத்திற்கான காணிக்கை (விப 35:4-9) 1 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: 2 இஸ்ரயேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு. தன்னார்வம் கொண்ட ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் எனக்காகக் காணிக்கை பெற்றுக்கொள்ளுங்கள். 3 நீங்கள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காணிக்கைகளாவன; பொன், வெள்ளி, வெண்க...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-25
75
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 26 – திருவிவிலியம்
சந்திப்புக் கூடாரம் (விப 36:8-38) 1 மேலும், திருஉறைவிடத்தைப் பத்து மூடு திரைகளைக் கொண்டு செய்வாய். அவை முறுக்கேறி நெய்த மெல்லிய நார்ப் பட்டாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய். 2 மூடு திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழம், அகலம் நான்கு முழம். ஒர...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-26
76
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 27 – திருவிவிலியம்
பலிபீடம் (விப 38:1-7) 1 சித்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். நீளம் ஐந்து முழம், அகலம் ஐந்து முழமாகப் பலிபீடம் சதுரவடிவமாய் இருக்கட்டும். அதன் உயரமோ மூன்று முழம். 2 அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள் அமைப்பாய். கொம்புகளும் பலிபீடத்தின் பாகமாகவே விளங்கும். பின் அதை வெண்கலத்தால் மூடு. 3 பின்னர், அதைச் சார்ந்த சாம்பல் சட்டி...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-27
77
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 28 – திருவிவிலியம்
குருக்களின் உடைகள் (விப 39:1-7) 1 எனக்குக் குருத்துவப்பணி புரிவதற்காக உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோரையும் இஸ்ரயேல் மக்கள் நடுவிலிருந்து அழைத்துவா. 2 உன் சகோதரன் ஆரோனுக்காக மாண்பும், அழகும் பொருந்திய திருவுடைகள் செய்வாய். 3 திறமையால் நான் நிரப்பியுள்ள வல்லுநர்கள் எல்லாரிடமும்...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-28
78
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 29 – திருவிவிலியம்
ஆரோனையும் அவன் புதல்வர்களையும் திருநிலைப்படுத்தும் முறை (லேவி 8:1-36) 1 எனக்குக் குருத்துவப் பணி புரிய நீ அவர்களைத் திருநிலைப்படுத்துவதற்காக அவர்களுக்கு இவ்வாறுசெய். ஓர் இளங்காளையையும் குறைபாடற்ற இரு செம்மறிக்கிடாய்களையும் தேர்ந்தெடு. 2 சிறந்த கோதுமை மாவினால் புளிப்பற்ற அப்பம், எண்ணெயில் பிசைந்த புளிப்பற்ற நெய்யப்பம், ...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-29
79
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 30 – திருவிவிலியம்
தூபபீடம் (விப 37:25-28) 1 நறுமணப்பொருள் எரிக்குமாறு ஒரு பீடம் செய். சித்திம் மரத்தால் அதனைச் செய்வாய். 2 நீளம் ஒரு முழம் அகலம் ஒரு முழம் என்று அது சதுரமாக அமையட்டும்; அதன் உயரம் இரு முழம்; கொம்புகளும் அதனுடன் ஒன்றிணைந்தவையாக இருக்கட்டும். 3 அதன் மேல்பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-30
80
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 31 – திருவிவிலியம்
கூடாரக் கலைஞர்கள் (விப 35:30-36:1) 1 ஆண்டவர் மோசேயிடம், 2 “யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகனான ஊரியின் மகன் பெட்சலேல் என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள்ளேன். 3 ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன். 4-5 இதனால் அவன் பொன், வெள்ளி, வெண்கல வேலை செய்...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-31
81
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 32 – திருவிவிலியம்
பொற்கன்று (எண் 9:6-29) 1 மோசே மலையினின்று இறங்கிவரத் தாமதித்ததைக் கண்ட மக்கள் ஆரோனைச் சுற்றிக் கூட்டம் கூடி அவரை நோக்கி, “எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. நீர் முன்வந்து எங்களை வழிநடத்தும் தெய்வங்களை எங்களுக்கு உருவாக்கிக்கொடும்” என்றனர். 2 ஆரோன் அவர்களை நோக்கி, “உங்கள...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-32
82
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 33 – திருவிவிலியம்
ஆண்டவரின் கட்டளை 1 ஆண்டவர் மோசேயை நோக்கி, “எகிப்து நாட்டிலிருந்து நீ நடத்தி வந்த மக்களுடன் இங்கிருந்து புறப்பட்டுச் செல். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோருடன் அவர்கள் வழிமரபினருக்குத் தருவதாக நான் வாக்களித்த அந்த நாட்டிற்குச் செல். 2 நான் ஒரு தூதரை உனக்குமுன் அனுப்பிக் கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வி...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-33
83
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 34 – திருவிவிலியம்
திருச்சட்டக் கற்பலகைகள்-இரண்டாம் பிரதி (இச 10:1-5) 1 ஆண்டவர் மோசேயை நோக்கி, “முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முன்னைய பலகைகளின்மேல் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளின் மேல் எழுதுவேன். 2 முன்னேற்பாடு செய்து கொண்டு, காலையிலேயே சீனாய் மலைமேல் ஏறிச்செல். அங்கே மலையுச்சியில் என்முன் வந...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-34
84
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 35 – திருவிவிலியம்
ஓய்வுநாள் பற்றிய ஒழுங்கு முறைகள் 1 மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, “நீங்கள் கடைப்பிடிக்கும்படி ஆண்டவர் கட்டளையாகத் தந்துள்ள வார்த்தைகள் இவைகளே: 2 ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ, ஆண்டவருக்காக நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டிய புனிதமான ‘சாபாத்து’; அன்று வேலை செய்பவன் எ...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-35
85
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 36 – திருவிவிலியம்
1 பெட்சலேலும் ஒகொலியாபும் மேலும் தூயக அமைப்பு வேலையனைத்தையும் செய்யத் தெரியுமாறு ஆண்டவரிடமிருந்து அறிவுக் கூர்மையும் தொழில்திறமையும் பெற்றிருந்த கலைஞர் யாவரும், ஆண்டவர் கட்டளையிட்டபடி வேலை செய்யட்டும். மக்களின் தாராள காணிக்கைகள் 2 அவ்வாறே மோசே பெட்சலேலையும், ஒகொலியாபையும், ஆண்டவரிடமிருந்து அறிவுக்கூர்மை பெற்றவரும் உள்ள...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-36
86
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 37 – திருவிவிலியம்
உடன்படிக்கைப் பேழை செய்தல் (விப 25:10-22) 1 பெட்சலேல் சித்திம் மரத்தால் ஒரு பேழை செய்தார். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழம். 2 அவர் அதன் உள்ளும் புறமும் பசும்பொன்னால் வேய்ந்தார்; அதைச்சுற்றிலும் பொன்தோரணம் பொருத்தினார். 3 அவர் இரு வளையங்களை ஒரு பக்கத்திற்கும், இரு வளையங்களை மறு பக்கத்திற...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-37
87
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 38 – திருவிவிலியம்
எரிபலிபீடம் செய்தல் (விப 27:1-8) 1 சித்திம் மரத்தால் அவர் ஓர் எரிபலிபீடம் செய்தார். அது நீளம் ஐந்து முழமும் அகலம் ஐந்து முழமுமாகச் சதுரவடிவமாயிருந்தது. அதன் உயரமோ மூன்று முழம். 2 அதன் நான்கு மூலைகளிலும் அவர் கொம்புகளை அமைத்தார்; கொம்புகள் அதனோடு ஒன்றிணைந்திருந்தன; அதை வெண்கலத்தால் மூடினார். 3 அவர் பலிபீடத்தின் துணைக்கல...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-38
88
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 39 – திருவிவிலியம்
குருக்களுக்கான உடைகள் செய்தல் (விப 28:1-14) 1 நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறத் துகிலால் நெய்த மெல்லிய ஆடைகள் தூயதலத் திருப்பணிக்காகச் செய்யப்பட்டன. ஆண்டவர் மோசேக்கு அளித்த கட்டளைப்படி ஆரோனுக்காகத் திருவுடைகள் செய்யப்பட்டன. 2 பொன்னையும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையு...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-39
89
விடுதலைப் பயணம்
விடுதலைப் பயணம் அதிகாரம் – 40 – திருவிவிலியம்
கூடாரத்தை எழுப்புதலும் அர்ப்பணமும் 1 ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்: 2 “முதல் மாதத்தில், முதல் நாள், சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத்தை நீ எழுப்புவாய். 3 அங்கே உடன்படிக்கைப்பேழையை வைத்து அதனைத் திருத்தூயகத் திரையால் மறைத்துவிடு. 4 பின்னர், மேசையைக் கொண்டுவந்து, உரியவாறு ஒழுங்குபடுத்து. மேலும், விளக்குத் தண்...
https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-40
90
லேவியர்
லேவியர் அதிகாரம் – 1 – திருவிவிலியம்
எரி பலிகள் 1 ஆண்டவர் மோசேயை அழைத்துச் சந்திப்புக் கூடாரத்திலிருந்து அவரோடு பேசினார். 2 இஸ்ரயேல் மக்களோடு நீ பேசி அவர்களுக்குச் சொல்ல வேண்டியது; உங்களில் ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சை செலுத்த வந்தால், மாட்டு மந்தையிலிருந்தோ ஆட்டு மந்தையிலிருந்தோ கால்நடையை ஒப்புக்கொடுப்பார். 3 அவரது நேர்ச்சை எரிபலி எனில், மாட்டு மந்தையிலிர...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-1
91
லேவியர்
லேவியர் அதிகாரம் – 2 – திருவிவிலியம்
தானியப் படையல்கள் 1 ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக உணவுப்படையல் செய்ய வந்தால், அவர் படையல் மெல்லிய மாவாய் இருக்கட்டும். அவர் அதன் மேல் எண்ணெய் வார்த்து சாம்பிராணிப் பொடி தூவி, 2 அதை ஆரோனின் புதல்வராகிய குருக்களிடம் கொண்டு வருவார். குரு அந்த எண்ணெய், சாம்பிராணி கலந்த அந்த மாவில் கை நிறைய எடுப்பார். நினைவுப் படையலாக அதைக...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-2
92
லேவியர்
லேவியர் அதிகாரம் – 3 – திருவிவிலியம்
நல்லுறவுக் காணிக்கைகள் 1 ஒருவரது நேர்ச்சை நல்லுறவுப் பலியாய் இருந்தால், அது அவரது மாட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்தப்படும். காளையாகவோ பசுவாகவோ இருந்தால், அவர் பழுதற்ற ஒன்றை ஆண்டவருக்கு முன்பாகக் கொண்டு வருவார். 2 நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்துச் சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் அதனைக் கொல்லவேண்டும்...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-3
93
லேவியர்
லேவியர் அதிகாரம் – 4 – திருவிவிலியம்
அறியாமல் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியது; ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்றையேனும் மீறிப் பாவம் செய்தால் அவர் செய்யவேண்டியது; 3 அருள்பொழிவு பெற்ற குரு பாவம் செய்து மக்கள்மீது குற்றப்பழி வந்தால், தான் செய்த பாவத்தை முன்னிட்டுப் பழுதற்ற...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-4
94
லேவியர்
லேவியர் அதிகாரம் – 5 – திருவிவிலியம்
பாவக் கழுவாய்க்கான காணிக்கைகள் 1 ஒருவர் ஒரு காரியத்தைக் கண்டோ கேட்டோ அதற்குச் சாட்சியாளராய் இருந்தும், அதுபற்றிச் சான்று கூறப் பணிக்கும் பொதுக்கட்டளையைக் கேட்டும், அதை அறிவிக்காமல் இருந்து பாவத்திற்கு உட்பட்டால், அவரே இத்தீச்செயலுக்குப் பொறுப்பாவார். 2 ஒருவர் தீட்டான எதையும் — செத்துத் தீட்டான காட்டு விலங்கையோ, செத்துத...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-5
95
லேவியர்
லேவியர் அதிகாரம் – 6 – திருவிவிலியம்
1 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது: 2 தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த அல்லது பணையமாய் வைக்கப்பட்டிருந்த பொருளை ஒருவர் தம் இனத்தாரிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டோ, அவரிடமிருந்து ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ, தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ, 3 காணாமற்போனதைக் கண்டெடுத்தும் அதை மறுத்துப் பொய்யாணையிட்டோ — இவற்றைப் போன்ற பா...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-6
96
லேவியர்
லேவியர் அதிகாரம் – 7 – திருவிவிலியம்
1 குற்றப்பழி நீக்கும் பலிபற்றிய கட்டளை இதுவே; அது மிகத்தூயது. 2 எரிபலி அடிக்கப்படும் இடத்திலேயே குற்றப்பழி நீக்கும் பலியும் அடிக்கப்படவேண்டும். அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கவேண்டும். 3 அதன் கொழுப்பு முழுவதையும், அதன் கொழுப்பு வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும், 4 இரு சிறுநீரகங்களையும் அவற்றின்ம...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-7
97
லேவியர்
லேவியர் அதிகாரம் – 8 – திருவிவிலியம்
ஆரோன், அவர்தம் மகன்கள் ஆகியோரின் திருநிலைப்பாடு (விப 29:1-37) 1 ஆண்டவர் மோசேயிடம், 2 “நீ ஆரோனையும் அவனுடன் அவன் புதல்வரையும் வரவழைத்து, உடைகளையும் திருப்பொழிவு எண்ணெயையும், பாவம்போக்கும் பலிக்காக ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் மற்றும் ஒரு கூடையில் புளிப்பற்ற அப்பங்களையும் கொண்டு வரச்செய். 3 மக்கள் கூட்டமைப...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-8
98
லேவியர்
லேவியர் அதிகாரம் – 9 – திருவிவிலியம்
ஆரோன் பலி செலுத்தல் 1 மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவர் புதல்வரையும் இஸ்ரயேலின் பெரியோர்களையும் வரவழைத்தார். 2 அவர் ஆரோனிடம் கூறியது: “நீ பாவம் போக்கும் பலியாக ஊனமற்ற காளைக்கன்றையும் எரிபலியாக ஊனமற்ற ஓர் ஆட்டுக்கிடாயையும் தேர்ந்தெடுத்து ஆண்டவர் திருமுன் கொண்டு வா. 3 இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்ல வேண்டியது: ஆண்டவர் திரு...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-9
99
லேவியர்
லேவியர் அதிகாரம் – 10 – திருவிவிலியம்
நாதாபு, அபிகூ ஆகியோரின் பாவம் 1 ஆரோனின் புதல்வர்களான நாதாபும் அபிகூவும் தம் தூபக் கலசத்தை எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் இட்டு ஆண்டவர் கட்டளைக்கு எதிராக நெருப்பைக் கொண்டு சென்றனர். 2 உடனே, ஆண்டவரிடமிருந்து நெருப்பு விரைந்தெழுந்து அவர்களை விழுங்கியது. அவர்கள் ஆண்டவர் முன்னிலையிலேயே மடிந்தனர். 3 அப்பொழுது மோசே ஆர...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-10