text stringlengths 19 132k |
|---|
புளூட்டோ (Pluto, வழமையான குறியீடு: 134340 புளூட்டோ; சின்னங்கள்: மற்றும் ) அல்லது சேணாகம் என்பது கதிரவ அமைப்பில் (ஏரிசுவை அடுத்து) இரண்டாவது பெரிய குறுங்கோளும் கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் ஒன்பதாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுப... |
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவ... |
சாக்கிரட்டீசு (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) பண்டைக் கிரேக்கத்தின், ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ... |
பிளேட்டோ (Plato, (/ˈpleɪtoʊ/; Greek: Πλάτων Plátōn, பழமையான உச்சரிப்பு [plá.tɔːn] கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் வல்லுனர். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவத் தர்க்கங்களை எழுதியுள்ள... |
அரிசுட்டாட்டில் (ஆங்கிலம்: Aristotle) (கி. மு. 384 - கி. மு. 322) ஒரு கிரேக்க மெய்யியலாளரும் பல் துறைப் புலமையாளரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, அளவையியல்(தருக்கம்), சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பலதுறை அறிவு பொதிந்திருக்கும். பிளேட்டோவும், இவரும் மே... |
நெப்போலியன் என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன:
முதலாம் நெப்போலியன் - நெப்போலியன் பொனபார்ட், பிரான்ஸ் நாட்டையாண்ட மன்னன்
இரண்டாம் நெப்போலியன் - நெப்போலியன் பொனபார்ட்டின் மகன், ரோம் மன்னன்
மூன்றாம் நெப்போலியன் - பிரான்ஸ் நாட்டின் தலைவன் (1849-1852), பிரான்ஸ் மன்னன் (1852-1870)
நெப்போலியன் - தமிழ் திரைப்பட நட... |
லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர... |
ஞாயிறு, கதிரவன் அல்லது சூரியன் (Sun) என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள விண்மீன் ஆகும். இது கிட்டத்தட்ட கோள வடிவில் இருக்கும் சூடான பிளாசுமா ஆகும். இதன் உட்புற வெப்பச்சலன இயக்கமானது இயக்கவியல் செய்முறை மூலம் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றல் மூலமாகக் கதிரவன் விளங்கி வருகிறது. புவி... |
விண்வீழ்கல் அல்லது உற்கை (meteorite) என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண... |
[[படிமம்:Lspn comet halley.jpg|right|250px|கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பொலிவான வளிம், தூசிச் சீறல்கள் தெரிகின்றன.]]
வால்வெள்ளி (comet) பனிக்கட்டியாலான சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். இது சூரியனுக்கு நெருக்கமாக கடக்கும்போது சூடாகி வளிமங்களை வெளியிடும். இந்நிகழ்வு வளிமவீசல் அல... |
சிறுகோள் அல்லது (Asteroid ) என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள் வட்டமையாத கோள்களினும் மிகச் சிறியனவாகிய. வால்வெள்ளியின் பான்மையேதும் இல்லாத, சூரியக் குடும்ப உருவாக்கத்தின்போது கோள்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படாத முற்கோளாக்க வட்டின்(protoplanetary disc) எச்சங்களாய வான்பொருள்கள் ஆ... |
விண்மீன், உடு, நாள்மீன், அல்லது நட்சத்திரம் (star) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு வளிகளாலும் பிளாசுமாகளினாலும் ஆக்கப்பட்டுள்ளன. பூமிக்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிம... |
லெகோ (LEGO)
பார்பி பொம்மை (Barbie Doll)
டெடி கரடிக்குட்டி (Teddy Bear)
ரூபிக்ஸ் கியூப் (Rubik's Cube)
போளை (Marbles)
தொலைக் கட்டுப்பாட்டு விளையாட்டுப் பொருட்கள்
விளையாட்டு ஆயுதங்கள்
விளையாட்டு இசைக் கருவிகள்
பம்பரம்
மாதிரித் தொடர்வண்டி
பந்து
பொம்மை
பொம்மை வீடு
ஆடு குதிரை
விளையாட்டுப் பொருட்கள் |
லெகோ என்பது, டென்மார்க்கைச் சேர்ந்த விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். பிளாஸ்டிக்கினாலான ஒன்றுடனொன்று பொருத்தக்கூடிய குற்றிகளைத் தயாரிப்பதன் மூலம் பெரிதும் அறியப்பட்ட நிறுவனம் இது.
"லெகோ" எதிர் "லெகோஸ்"
லெகொ நிறுவனத்தின் பிரபல விளையாட்டுப்பொருளான பொருத்தும் பிளஸ்டிக்குற்றிகளைக் குறிப்பதற்கும் பலர் "லெக... |
டெடி கரடிக்குட்டி (Teddy bear) என்பது குழந்தைகளுக்கான பஞ்சாலான ஒரு விளையாட்டுப் பொருளாகும். இது குழந்தைகளை மகிழ்விக்கப் பயன்படுகிறது. உலகின் முதல் டெடி கரடி அருங்காட்சியகமானது இங்கிலாந்தில் 1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டெடி என்ற பெயர் அமெரிக்க குடியரசுத் தலைவரான தியோடோர் ரூஸ்வெல்ட் அவர்களின் நினைவாகப் பெயரிடப்பட்டத... |
ரூபிக்கின் கனசதுரம் (ரூபிக்ஸ் கியூப், Rubik's Cube) அங்கேரிய சிற்பியும், கட்டிடக்கலைப் பேராசிரியருமான ஏர்னோ ரூபிக் என்பவரால் 1974ல் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பொறிமுறைப் புதிர் ஆகும். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது சிறு சதுரங்கள், ஆறு வித்தியாசமான வண்ணங்களால் இது உருவாக்கப்பட்டது. பொதுவாக இதில் வெள்ளை வண்ணத்தின் எதிர்ப்... |
பெரும்பாலான மொழிகள், ஏதாவதொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எல்லாம் ஒரு பொதுமொழியிலிருந்தே தோன்றின. இத்தகைய பொதுமொழிகள் பல இன்று வழக்கிழந்து போய்விட்டன. அவற்றிலிருந்து தோன்றித் தற்போது வழக்கிலுள்ள மொழிகள் மூலமாகவே மேற்படி குடும்பப் பொது மொழிகளின் தன்மைகளை அறிந்து கொள்ள ... |
இந்திய-ஐரோப்பிய மொழிகள் (Indo-European languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய மொழி, பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம், ஜெர... |
இந்தோ-ஈரானிய மொழிகள் வழக்கிலிருக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுள், கிழக்கு எல்லையில் உள்ளவையாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் சார்ந்த மிகப் பழைய பதிவுகளில் இம் மொழிகளுக்கு நல்ல இடம் உண்டு. யூரல்களின் தென்பகுதியைச் சூழவுள்ள பகுதிகளில் இவை தோற்றம் பெற்றன. இவர்கள் கஸ்பியன் கடலின் கிழக்கிலும், தெற்கிலும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாக... |
பாளி (Pali) எனப்படுவது ஒரு மத்திய இந்தோ-ஆரிய அல்லது பிராகிருத மொழியாகும். பௌத்த சமயத்தின் பழம்பெரும் நூல்களைக் கொண்ட மொழி என்ற சிறப்பையும் பெருமையையும் கொண்டது. தேரவாத பௌத்தத்தின் சமய நூல்கள் இம்மொழியில் எழுதப்பட்டிருப்பதன் காரணமாக இம் மொழி மிகவும் பிரபலமானது.
பாளி பல்வேறு வரிவடிவங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. தேவநாக... |
சிங்களம் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான மக்களான சிங்களவர்களால் பேசப்படும் மொழியாகும். இது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவிலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் திராவிட மொழியான தமிழிலிருந்... |
<table border="1" cellpadding="2" cellspacing="0" align="right" width="300">
Urdu (اردو)
பேசப்படுவது:பாகிஸ்தான், இந்தியா மற்றும் 19 வேறு நாடுகள்
பேசுபவர்கள் தாய்மொழி: 10.4 கோடி
மொத்தம்: 48 கோடி
பொதுபகுப்பு:இந்திய-ஐரோப்பியம்
இந்திய-ஈரானியம்
இந்திய-ஆரியம்
மத்திய வலயம்
உருது
உத்தியோகபூர்வ நிலை
அரசகரும மொழி:பாக... |
பண்பாடு (கலாச்சாரம் அல்லது கலாசாரம்) என்பது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.
பண்பாடு ஒரு பலக்கியக் கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழு... |
பின்வருவது வகைப்படுத்தப்பட்ட விளையாட்டுகளின் பட்டியல் ஆகும். இது விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இன்னும் பல விளையாட்டுகளை இதிலே சேர்த்துக்கொள்ள முடியும். இதிலுள்ள சில விளையாட்டுகள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளுள் அடங்கக்கூடியனவெனினும் ஒரு ப... |
வட மாகாணம் (Northern Province) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வட கோடியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் மேற்கிலுள்ள தீவுகள் மற்றும் தலை நிலத்தின் ஒரு பகுதியான வன்னி என அழைக்கப்படும் பகுதியும் சேர்ந்து இம்மாகாணத்தை உருவாக்குகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவ... |
இலங்கையின் கிழக்கு மாகாணம் (Eastern province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் தலைநகர் திருகோணமலை ஆகும். மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் பெரிய நகர் ஆகும். தமிழீழத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இம் மாகாணமானது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள... |
தொலைத்தொடர்பு (Telecommunication) என்பது ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் (இருவழித் தொடர்பு உட்பட) கடத்துகின்ற ஒரு நுட்பமாகும். தொலைத்தொடர்பு என்ற சொல், வானொலி, தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, தரவுத் தொடர்பு, கணினி வலையமைப்பு போன்ற எல்லாத் தொலைதூரத் தொடர்புகளையும் உள்ளடக்குகின்றது.
தொலைத்தொடர்பு முறைமையொன்... |
அரசர்களின் விளையாட்டு என கருதப்படும் சதுரங்கம் அல்லது செங்களம் அல்லது வல்லாட்டம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டுக்குத் தமிழில் ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு. ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய... |
டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1 ஒரு உலகப் பிரசித்தி பெற்றசெஸ் விளையாட்டாகும்.
செஸ் விளையாடும் கணினியொன்று வழக்கமான சுற்றுப்போட்டி விதிகளின்கீழ் (விசேடமாக நேரக் கட்டுப்பாடு) அக்காலத்திய உலக சம்பியன் ஒருவரை வென்ற முதலாவது விளையாட்டு இதுவாகும்.
டீப் புளூ காரி காஸ்பரோவை வெல்வதற்காக ஐபிஎம்-இனால் உருவாக்கப்பட்டதா... |
எட்டுக்கோடு சிறுவர்களால் விளையாடப்படுகிறது. விசேடமாகச் சிறுமிகளே பெரும்பாலும் விளையாடுவது வழக்கம். இது பொதுவாக வெளியிலேயே விளையாடப்படுவதாயினும், இட வசதி இருந்தால், உள்ளக விளையாட்டாகவும் விளையாடப்படலாம். இந்த விளையாட்டை விளையாடுபவர்களுடைய எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. பங்கேற்பவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனிப் போட்டியாளராகவே ... |
கேரளக் கட்டிடக்கலை என்பது இந்தியாவின் தென் மாநிலங்களிலொன்றான கேரளாவில் உருவாகி வளர்ந்த கட்டிடக்கலைப் பாணியாகும். இந்தியாவின் பெரும்பாலான கட்டிடக்கலைப் பாணிகளோடு ஒப்பிடும்போது கேரளக் கட்டிடக்கலை தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. இப்பாணியில் மரம், ஓடு என்பவற்றின் தாராள உபயோகமும், கூரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதன்... |
பெங் சுயி (சீனம்: 风水 ஃபங் ஷுவெய் அல்லது ஃபங் ஷுயி, என்னும் "காற்று நீர்") என்பது சூழலுடன் இசைந்து வாழ்வது தொடர்பாக சீனாவில் புழக்கத்திலிருக்கும் பாரம்பரிய அறிவுத்துறையாகும். இது இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம் போன்றதாகும். வாஸ்து சாஸ்திரத்திலிருந்தே பெங் சுயி தோன்றியிருக்கக்கூடுமென்றும் கருதப்படுகிறது. தற்காலத்தில் பெங் ச... |
மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும், கட்டடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் ச... |
இராபர்ட் வெஞ்சூரி (Robert Venturi, சூன் 25, 1925 – செப்டம்பர் 18, 2018) பிலடெல்பியாவைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் ஒரு சிறந்த கட்டிடக்கலைஞராக மட்டுமன்றி, திறமையான எழுத்தாளராகவும், ஓவியராகவும், ஆசிரியராகவும், ஒரு தத்துவஞானியாகவும்கூட விளங்கினார். ஒரு கட்டிடக்கலைஞன் என்றவகையில், பழக்கங்களினால் வழிநடத்தப்படுவத... |
நாற்சார் வீடு என்பது, நடுவில் கூரையிடப்படாத திறந்த வெளியைச் சுற்றி அறைகளும், கூடங்களும் அமைத்துக் கட்டப்படும் வீடுகளாகும். நடுவிலுள்ள இத் திறந்த வெளி முற்றம் என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நடுவில் முற்றம் அமையக் கட்டப்படுகின்ற வீடுகள் உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. எனினும் அவற்றிடையே பல விதமான வேறுபாடுகள் உள்ளன... |
நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் என்றும் அழைக்கப்படும் சாதியினர் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட சாதியினர் பிரிவில் உள்ளனர். இவர்கள் நகரத்தார் என்றும் அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டின் தற்போதைய சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 76 ஊர்களைப் பூர்வீகமாகக் கொண்ட வணிகச்... |
மேல் மாகாணம் அல்லது மேற்கு மாகாணம் (Western Province, ) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்று. இலங்கையில் மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நிருவாக அலகுகளாக இருந்து வந்த போதும், 1987 இல் இலங்கை யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதே இவற்றுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைத்தது. இதன் மூலம் மாகாணசபைகள் அமைக்கப... |
இலங்கையின் ஒன்பது மாகாணப் பிரிவுகளில் மத்திய மாகாணமும் ஒன்று. இது இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கண்டி இதன் தலை நகரமாகும். இது மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
இலங்கை
கண்டி இராச்சியம் |
வடமத்திய மாகாணம் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் பெரும்பகுதியும் நாட்டின் உலர்வலயப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகரங்களான அனுராதபுரம், பொலநறுவை என்பன இம் மாவட்டத்திலேயே உள்ளன. எனினும் இப் பகுதிகள் மிகக்குறைந்த சனச் செறிவுள்ள பகுதிகளாகவே இன்று காணப்படுகின்றன... |
தென் மாகாணம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கே, கீழ் மாகாண எல்லை வரையுள்ள இலங்கைத் தீவின் தென் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சபரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகள... |
இலங்கையின் மாகாணப் பிரிவுகளில் ஒன்றான வடமேல் மாகாணம் குருநாகல், புத்தளம்
சிலாபம் ,கம்பஹா ஆகிய நிர்வாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. வட மாகாணத்துக்கும், மேல் மாகாணத்துக்கும் இடைப்பட்ட மேற்குக் கடற்கரையை அண்டி அமைந்துள்ள இது, மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம், வட மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் ஆகியவற்றை எல... |
சப்ரகமுவா மாகாணம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேல் மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், தென் மாகாணம் ஆகிய 5 மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
இலங்கை
சபரகமுவா மாகாணம், இலங்கை
கண்டி இராச்சியம் |
ஊவா (Uva, ) இலங்கையில் பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாகானத்தின் தலைநகர் பதுளை ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மத்திய மாகாணம், தென் மாகாணம், கிழக்கு மாகாணம், ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள்தொகை 1,2... |
பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டிடக்கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக, பிறிட்ஸ்கர் குடும்பத்தால் நடத்தப்படும் ஹையாத் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். கட்டிடக்கலைத்துறைக்கான உலகின் முன்னணிப் பரிசு இதுவே. இது 1977ல், ஜே ஏ. பிறிட்ஸ்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பெரிதும் நோப... |
ஜர்ன் ஓபெர்க் ஊட்சன் (Jørn Oberg Utzon, ஏப்ரல் 9, 1918 - நவம்பர் 29, 2008), டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஓபெரா மண்டபத்தை வடிவமைத்தவர். மேலும் கோப்பன்ஹேகன் நகருக்கு அருகில் உள்ள பாக்ஸ்வெர்ட் தேவாலயம், குவைத் நாடாளுமன்றக் கட்டடம்... |
கௌதம புத்தர் (Gautama Buddha) என்பவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நே... |
இலங்கையில் பல அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளே ஆட்சியில் இருந்து வந்துள்ளன. தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் எந்த ஒரு கட்சியும் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில், சிறிய கட்சி... |
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகஸ்ட் 29, 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட சோல்பரி ஆணைக்குழுவின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக... |
இலங்கைத் தமிழரசுக் கட்சி (Illankai Tamil Arasu Kachchi, ITAK, முன்னாள் சமஷ்டிக் கட்சி, Federal Party) இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசியற் கட்சியாகும். இக்கட்சி 1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்... |
1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை சேர்ந்து தமிழர் கூட்டணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கின. மேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோர் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட... |
பாரதிய சனதா கட்சி (மொழிபெயர்ப்பு: இந்திய மக்கள் கட்சி; சுருக்கமாக பா. ச. க) இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பா... |
இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress; சுருக்கமாக இதேகா பொதுவாக காங்கிரசு கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885-இல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழு... |
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சிய... |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (; அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஓர் இந்திய பிராந்திய அரசியல் கட்சியாகும்.திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனால் (எம்.ஜி.ஆர்.) 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில... |
யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்... |
மின்னணுவியல் (Electronics) மின்னணுக்கள் அல்லது மின்னன்கள் வழி மின் ஆற்றலைக் கட்டுபடுத்தும் அறிவியல் புலமாகும். இலத்திரனியல் அல்லது மின்னணுவியல் மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்குப் பயன்படும் அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். மின்னணுவியல்... |
மலேசியா (மலாய்: Malaysia; ஆங்கிலம்: Malaysia) ( ); என்பது தென்கிழக்காசியாவில் கூட்டாட்சி; அரசியல்சட்ட முடியாட்சி கொண்ட ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும்; மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ளது. மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாக, தென்சீனக் கடலினால் பிரிக்கப்பட்டு உள்ளது.
மல... |
தொழிற்றுறை (industry) என்பது கிடைக்கும் வள ஆதாரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய துறை ஆகும். புவியில் மனிதர்களின் தொழிலைப் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே தீர்மானிக்கின்றன. அவற்றுள் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்தல், வணிக... |
உயிரியல் என்பது வாழ்க்கை மற்றும் உயிரினங்கள் பற்றிய இயற்கை அறிவியலாகும். உயிரியலில் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு அல்லது படிமலர்ச்சி, பரம்பல், உயிரியல் வகைப்பாடு போன்றவை ஆராயப்படுகின்றன.. இப்புலம் உயிரினங்களுடைய இயல்புகளையும் நடத்தைகளையும், எப்படி தனிப்பட்ட உயிரினங்களும்,... |
கட்டிடம் அல்லது கட்டடம் (Building) என்பது பல கூறுகளை இணைத்து உருவாக்கப்படும் ஒன்றாகும். மனிதனால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் நிலத்துடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.
கட்டிடம் ஒரு தனிக் குடியிருப்பாளரை மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கூரை மட்டும் கொண்ட ஒரு குடிசையாகவோ அல்லது வெப்பநிலை, காற... |
கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்கள் பொதுவாகக் கட்டிடப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன. பல்வேறு வகையான கட்டிடப் பொருட்கள் இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ளன. மிகப்பழைய காலத்தில் கட்டிடம் கட்டப்படும் இடங்களுக்கு அண்மையில் கிடைக்கக் கூடிய பொருட்களையே கட்டிடங்கள் கட்டப் பயன்படுத்தினார்கள். போக்குவரத்து வசதிகள்... |
கண்ணாடி என்று பொதுவாகக் குறிப்பிடும்போது இது, சாளரங்கள், போத்தல்கள், மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றின் உற்பத்தியில் பயன்படுவதும்; கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. தொழில்நுட்ப அடிப்படையில், கண்ணாடி என்பது குளிர்ந்து பளிங்காகாமல் திண்மமாகிய கனிமப... |
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளைக் குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையி... |
பென்குயின் (வரிசை: Sphenisciformes, குடும்பம்: Spheniscidae) என்பது நீரில் வாழும் பறக்காத பறவை ஆகும். இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றது. இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்தும் திறன் பெ... |
தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி (Ostrich, Struthio camelus) வாழும் பறவைகளுள் மிகப்பெரியது ஆகும். இது 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. பறக்காத ரடீட் எனப்படும் ஒப்பீட்டளவில் பழமையான பறவைக் குழுவைச் சேர்ந்தது.
இக் குழுவைச் சேர்ந்த ஏனையவை ரியாக்கள், எமுக்கள், கசோவரிகள் எக்காலத்திலும் அறிந்தவரை மிகப்பெரிய பறவையா... |
கிவி (Kiwi) என்பது நியூசிலாந்தில் வாழும், அப்டெரிக்ஸ் (அப்டெரிகைடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரே இனம்) இனத்தைச் சேந்த சிறிய, பறக்காத, ஏதாவதொரு வகைப் பறவையைக் குறிக்கும். ஒரு வீட்டுக் கோழியின் அளவைக் கொண்ட கிவிகளே வாழுகின்ற றட்டைட்களில் மிகச் சிறியனவாகும். இவை கசோவரிகள் அல்லது மோவாக்களுக்கு நெருக்கமான உறவையுடையனவாகக் கருதப்... |
75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஆக்கு அல்லது பெரிய ஓக் (Great Auk) பிங்குயினஸ் இம்பென்னிஸ் (அல்லது அல்கா இம்பென்னிஸ்), எல்லா ஆக்குகளிலும் பெரியதாகும். அற்றுப்போன இனமான இந்தப் பெரிய ஆக்குகள் வேல்சு மொழியில், அவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து, "வெண் தலை" எனப் பொருள்படும் பென் க்வின் (pen gwyn) என அழைக்கப்... |
மயில் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற, இந்திய மயில் (Indian peafowl, [Pavo cristatus]) அல்லது நீல மயில் இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவைகளில் ஒன்றாகும். இது பசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவையான மயிலின் இரு பேரினங்களுள் ஒன்றான, பேவோ (Pavo) பேரினத்தினுள் அடங்கும், cristatus என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு பறவ... |
இலங்கைக் காட்டுக்கோழி (Srilankan Junglefowl)(கல்லசு இலபாயெட்டீ) பேசண்ட் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டும் வாழக்கூடிய அகணிய உயிரி ஆகும். இது வீட்டில் வளர்க்கும் கோழிகளை உருவாக்கிய காட்டுக்கோழியான, இந்தியாவின் சிவப்புக் காட்டுக்கோழி எனப்படும் கல்லசு கல்லசு சிற்றினத்திற்கு நெருங்கிய உறவுள்ளது.
இ... |
எண் கணிதம் (Arithmetic) என்பது கணிதத்தின் ஒரு பிரிவு (அல்லது அதன் முன்னோடி) ஆகும். இது எண்களின் மீது செய்யப்படும் செய்முறைகளின் அடிப்படை இயல்புகளை விளக்குகிறது. வழமையான செய்முறைகள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பனவாகும். வர்க்கம், வர்க்கமூலம் போன்ற உயர்நிலைச் செய்கைகளும் இவற்றுடன் சேர்க்கப்படுவதுண்டு. எண்க... |
ஆந்தை,() ஸ்ட்றைஜிபோர்மெஸ் வரிசையைச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 200 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும்.
ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் facial disk என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், ... |
செனிகல் குடியரசு (Republic of Senegal) மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில் அத்லாந்திக் சமுத்திரமும், வடக்கில் மௌரித்தானியாவும், கிழக்கில் மாலியும், தெற்கில் கினியாவும், கினி-பிசாவும் எல்லைகளாக உள்ளன. செனிகல் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கத்தாலும் காம்பியா நாட்டைச் சூழ, கடற்கரை... |
கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன. ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (Rose Ringed parakeet).
உணவு
விதைகளும்,... |
காகம் (crow) என்பது கோர்வசு பேரினத்தினைச் சார்ந்த பறவையாகும். "காகம்" என்ற சொல் கோர்வசு பேரினத்தின் பல சிற்றினங்களைக் குறிக்கின்ற ஒரு பொதுப்பெயராக உள்ளது. கோர்வசு பேரினத்திலுள்ள பல்வேறு சிற்றினங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
கோர்வசு அல்பசு - பைட் காகம் (மத்திய ஆப்பிரிக்க கடற்கரைகள் தென்னாப்பிரிக்காவுக்கு)
கோர்வசு பென... |
கரியன் காகம் (Carrion Crow), கோர்வஸ் கொரோனேயை Raven இலிருந்து அதன் அளவாலும், Hooded காகத்திலிருந்து அதன் உடல் நிறத்தாலும் வேறுபடுத்தி அறியமுடியும். எனினும், இதற்கும் Rookக்குமிடையே வேறுபாடு காண்பதில் அடிக்கடி குழப்பம் உண்டாவதுண்டு. காகத்தின் சொண்டு கனமானதாக இருப்பதால் கட்டையாகத் தோற்றும். முதிர்ந்த Rook இல் மூக்குத் து... |
சாதாரண மைனா [Common myna (Acridotheres tristis)] அல்லது நாகணவாய் என்பது தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் நாகணவாய் இனமாகும். இது மனிதக் குரலில் அளவம் (குரல்போலி) செய்யக்கூடியது என்பதால் 'பேசும் மைனா' எனவும் அழக்கப்படுகிறது.
வகைப்பாடு
இது இரண்டு துணையினங்களாக அங்கிகரிக்கப... |
கொராசீபோர்மெஸ்கள், மீன்கொத்திகள், கொண்டலாத்தி, தேனீ உண்ணிகள், காடைகள், இருவாய்ச்சிகள் என்பவற்றை உள்ளடக்கிய, வழக்கமாகப் பல நிறம் கொண்ட பறவைகளாகும்.
இந்த வரிசை ஒரு கலவை போலத் தெரிகின்றது. டி. என். ஏ. பகுப்பாய்வு புழக்கத்துக்கு வந்தபின்னர், பல குழுக்கள் திருத்தப்பட்ட பட்டியல் ஒழுங்குகளில் வைக்கப்படுகின்றன.
பறவைகள் |
மைனா ஸ்டார்லிங் (ஸ்ட்டேண்டிடே) குடும்பத்து பறவையாகும். பசரீன் பறவைகள் குழுவைச் சேர்ந்த இவை, இயற்கையாகக் கிழக்காசியாவில் மட்டுமே வாழ்கின்றன, எனினும் இவற்றின் பல வகைகள், வட அமெரிக்காவுக்கும், சாதாரண மைனா தென்கிழக்கு அவுஸ்திரேலியாவுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மைனாக்கள் வலுவான பாதங்களைக் கொண்ட, நடுத்தர அளவிலான பசரீன... |
மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் த... |
நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்... |
இந்திய மொழித் திரைப்படங்களில், பாடல்களின் பங்கு இன்றியமையாத ஒன்று. அதுபோலத் தான் அப்பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர்களின் பங்கும். இவர்களுள் ஒருசிலர் சிறந்த பாடகர்களாகவும் விளங்குகின்றனர்.
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்
1930களில்
1940களில்
1950களில்
1960களில்
1970களில்
1980களில்
1990களில்
2000களில்
2010க... |
இந்துக் கோயில்கள்
இந்தியக் கோவில்கள்
பிருஹதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், தமிழ்நாடு
மீனாட்சியம்மன் கோவில், மதுரை, தமிழ்நாடு
இலங்கைக் கோவில்கள்
திருக்கேதீஸ்வரம்
திருக்கோணேஸ்வரம், திரிகோணமலை
கதிர்காமக் கந்தன் ஆலயம், கதிர்காமம்
நல்லூர்க் கந்தசுவாமி கோவில், நல்லூர்
செல்வச் சந்நிதி, தொண்டமனாறு
வைத்தீஸ்வரர் ஆலயம், வண்ணார... |
கைலாயமாலை என்பது யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர் தான் பயன்படுத்திய முதனூல்களில் ஒன்றாகக் கைலாய மாலையையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறை... |
யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வைத்திலிங்கம் செட்டியார் என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துத் தமிழரசர் காலத்துக்குப் பின், இந்துக் கோயில்கள் அனைத்தும் போத்துக்கீசரால் இடித்துத் தள்ளப்பட்டபின்னர், சுமார் 160 ஆண்டுகள் கழித்துக் கட்டப்பட்ட முதல் கோயில்களில் இதுவு... |
சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்க... |
வேதங்கள் (Vedas) என்பவை பொதுவாக இந்து சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். பொ.ஊ.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்துக்களின் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தது என்று பண்டித பால கங்கா... |
பன்னம் (அல்லது வித்திலியம், Fern) என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் தெரிடொ-'வைட்டே (Pteridophyte) என்று அழைப்பர். தெரிடொ-ஃபைட்டா (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் நிலைத்திணை வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை பூக்கும் தாவரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்... |
தோட்டக்கலை (Gardening) என்பது வீட்டுக்கு அருகில், முகப்பிலோ பின்னாலோ தாவரங்களை நட்டு வளர்க்கின்ற நடைமுறையாகும். தோட்டங்களில் அழகூட்டும் தாவரங்கள் அவற்றின் பூக்கள், இலைகள், அல்லது ஒட்டுமொத்தத் தோற்ற வனப்பு கருதி வளர்க்கப்படுகின்றன. கிழங்குகள், கீரைகள், பழங்கள், மூலிகைகள் தரும் தாவரங்களும் உணவுக்காகவும் சாயங்களுக்காகவ... |
சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்... |
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இது மதுரை மாவட்டத்தின் தலைநகர் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில், இதுவும் ஒன்று. இது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், அடுத்த, நகர்புற பரப்பளவு அடிப்படையில், மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். மக்கள்தொகை அடிப்படையில், இந்... |
யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்... |
பிலிப்பே டி ஒலிவேரா 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையிலிருந்த போத்துக்கீசத் தளபதிகளுள் ஒருவர். 1619 இல் இவரின் தலைமையில் வந்த படையினரே யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி அதனைப் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். இதன் பின்னர் இப்பகுதியின் "கப்டன் மேஜரா"க ஒலிவேராவே நியமிக்கப்பட்டார். கடும் போக்குக் கத்தோல... |
சமசுகிருதம் (ஆங்கிலம்: Sanskrit), சமற்கிருதம் அல்லது சங்கதம் என்பது இந்தியாவின், மிகப்பழைய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழியையும் பாகத மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், உத்தராகண்ட மாநி... |
சிங்கப்பூர் அல்லது சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore, சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) என்பது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது.
சிங்கப்பூர் தீவை ஜொகூர் நீரிணை, மலேசியாவில் இருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீரிண... |
இராகம் () (சமஸ்கிருதம்: रागः, இந்தி: राग) என்பது இந்தியப் பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது.
இராகத்தின் அடிப்படை
"இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மைய... |
தேவநாகரி (Devanagari) என்பது சமசுகிருதம், இந்தி, மராட்டி, காசுமிரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறைமையாகும். தேவநாகரி அபுகிடா என்று அழைக்கப்படும் எழுத்து முறைமை வகையைச் சேர்ந்தது. அபுகிடா என்பது ஒவ்வொரு மெய்யெழுத்தும் உள்ளார்ந்த உயிரெழுத்தொன்றைக் (இங்கே "அ") கொண்டிருக... |
மானிடவியல் (Anthropology) மனித இனம் பற்றிய அறிவியல் கல்வித்துறை ஆகும். இது மனித குலத்தைச் சமூக நிலை, பண்பாட்டு நிலை, உயிரியல் நிலை போன்ற வேறுபட்ட நிலைகளில் கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக உள்ளது.
இது இரண்டு வகைகளில... |
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமசுகிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
அறம், பொர... |
தொல்லியல் (Archaeology) என்பது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும். இவ்வகைப் பொருள்சார் பண்பாட்டுத் தொல்லியல் ஆவணங்களில் கட்டிடக்கலை, தொல்பொருட்கள், தொல்லுயிர் எச்சம், மனித எச்சங்கள், சூழலியல் எச்சங்கள் ஆகியன உள்ளடங்கும். எனவே தொல்லியலை சமூகவிய... |
தாமரைக் கோலம் ஒன்றுடனொன்று 45 பாகை கோணத்தில் வெட்டும் 4 இரட்டைக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கோடுகளின் ஒன்றுவிட்டொரு முனைகளை வளை கோடுகளால் இணைத்து எட்டு இதழ்களுடைய தாமரை வடிவம் வரையப்பட்டுள்ளது.
எளிமையான கோலம்
எளிமையான கோலங்களிலொன்று. இதன் ஒரு வேறுபாடாக ஒற்றைக் கோடுகளை உபயோகித்தும் இத் தாமரை வடிவம் வரையப்படு... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.