text
stringlengths
19
132k
குச்சிப்புடி (தெலுங்கு: కూచిపూడి) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிபுடி என்னும் கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது. கருநாடக இசையோடு இவ்வகை நடனம் ஆடப்படுவத...
கதக்களி () இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதக்களி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை. இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன. கதக்க...
துபாய் அல்லது துபை (Dubai, , ) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் சீர்படுத்துவதற்காகச் வகையில் முதலாவது நகரமாகும். இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் ...
தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள். பாடலாசிரியர்கள் முதல் இருவரும் பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாம...
பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கப்படுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் (ஒரோவொருக்கால் துளை என்றும்) வழக்கப்படும். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளத...
சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் பொ.ஊ.மு. 500-இல் இருந்து பொ.ஊ. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் நிலையில் உள்ளோரும் பெண்களும், ந...
புஜைரா (Fujairah) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும். ஐக்கிய அரபு அமீரகம்
கோர்பக்கான், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களிலொன்றான சார்ஜாவின் ஒரு பகுதியாகும். இந்த நகரம், நாட்டின் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது. இதன் கடற்கரைப்பகுதிகள் கண்ணுக்கு அழகான காட்சிகளைக் கொண்டவை. மேற்குக்கரையிலுள்ள முக்கிய நகரங்களைப்போலன்றி, மலைப்பாங்கான நிலத்தோற்றத்தைக் கொண்டது இப்பகுதி. கோர்பக்கான் துறைமுகம் நாட்ட...
துபாய் கடைவல விழாவில், (Dubai Shopping Festival) "குளோபல் வில்லேஜ்" என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உலகக் கிராமம் ஒரு முக்கியமான அங்கமாகும். ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படுகின்ற பலவகையான உற்பத்திப் பொருட்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கே ஒரு சேரக் காட்சியளிக்கின்றன. ...
மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம், என்ற பெயர்களால் அழைப்பர். பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகு...
சங்கராபரணம் (அல்லது தீரசங்கராபரணம்) கருநாடக இசை முறையில் 29 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்துஸ்தானி இசையில் பிலாவல் தாட் என்றழைக்கப்படுகிறது. பண்டைய தமிழிசைப் பண்களில் பழம்பஞ்சுரம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது. இலக்கணம் பாண என்று அழைக்கப்படும் 5வது வட்டத்தில் (சக...
உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படும் கருநாடக இசையை வளர்த்து உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்ததிலும், தற்போது பேணி காத்து வருவதிலும் ஏராளமான இசைக் கலைஞர்களுக்குப் பங்கு உண்டு. சிலருடைய பெயர்கள் இசை வரலாற்றில் நின்று நிலைத்துள்ளன. வேறும் சிலருடைய பெயர்கள் போதிய பிரபலமில்லாது போயிருக்கலாம். இசை ரசிகர்களுடைய ம...
கம்பிக் கோலங்கள் பாம்புக் கோலம் தாமரைக் கோலம் புள்ளிக் கோலங்கள் நேர்ப்புள்ளிக் கோலங்கள் புள்ளிகளை இணைத்தல் தொட்டில் கோலம் புள்ளிகளிடையே வரைதல் தேர்க் கோலம் துளசி மாடம் குத்து விளக்குக் கோலம் ஊடுபுள்ளிக் கோலங்கள் புள்ளிகளை இணைத்தல் வில்வ இலைக் கோலம் பாகல் இலைக் கோலம் புள்ளிகளிடையே வரைதல் பிற புள்ளிக்கோ...
இது மிகப்பரவலாக அறியப்பட்டதும், பொதுவாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுவதுமான ஒரு கோலமாகும். மிகச் சிறிய ஐந்து புள்ளிக் கோலத்திலிருந்து, விரும்பியபடி எந்த அளவுக்கும் பெரிதாக்கிக் கொண்டு செல்லக்கூடிய இலகுவான கோலங்களில் இதுவுமொன்று. நிறப் பொடிகளால் நிரப்பி அழகு படுத்துவதற்கும் மிகவும் ஏற்றது. இவற்றையும் பார்க்கவும் கோலம் ...
சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும். இது பக்குவப்படுத்துதல் என்ற பொருள் கொண்ட சமை என்ற வினைச்சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும். குறுகிய பொருளில் இது, உணவுப்பொருளின் சுவை, தோற்றம், ஊட்டப்பண்புகள் போன்றவற்றை விரும்பத்தக்க வகையில் வெப்பத்தைப் பயன்படுத்தி மாற்றுவதாகும். மனிதன் நெருப்ப...
பாகல் இலைக் கோலம் பாகற்கொடியின் இலைகளை ஒத்த வடிவங்களைக் கொண்டு வரையப்படும் ஒரு கோலம் ஆகும். அருகில் உள்ள படம் 15 புள்ளிகளில் தொடங்கி, ஊடுபுள்ளிகளாக ஒன்றுவரை புள்ளிகள் இட்டு வரையப்பட்ட கோலம் ஒன்றைக் காட்டுகிறது. புள்ளிகள் நேர்கோடுகளாலும், வளைகோடுகளாலும் இணைக்கப்படுகின்றன. அடிப்படை அலகு இக் கோல வடிவத்தின் அடிப்படை அலகு,...
இது இவ்வகைக் கோலத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது கோயில்களில் பயன்படுத்தப்படுகின்ற தேரின் வடிவத்தைப் போல் வரையப்பட்டது. கோலம் போடுபவர்கள் தமது கற்பனை வளம், கால அவகாசம், இட வசதி என்பவற்றுக்கு அமைய இக் கோலத்தின் அளவு, வடிவம் என்பவற்றைத் தேவைக்கேற்ப மாற்றுவதன் மூலம் பல வகைத் தேர்க் கோலங்களை உருவாக்குகிறார்கள். இவற்...
அழகிய கோலம் குறைந்த நேரத்தில் இலகுவாக வரையக்கூடிய அழகிய கோலம். புள்ளிகளில்லாத வேறு குறியீடுகளை உபயோகப்படுத்தும் கோலங்களில் இதுவுமொன்று. அளவும், வடிவமும் வேண்டியபடி மாற்றிக்கொள்ளப்படக் கூடியது. இவற்றையும் பார்க்கவும் கோலம் கோலங்கள் - சில மாதிரிகள் மேற்கோள் கோலங்கள்
யாழ்ப்பாண மாவட்டம் (Jaffna District) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்று. இது நாட்டின் வடகோடியில் அமைந்துள்ளது. மேற்கில் மன்னார் வளைகுடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும் சூழப்பட்டுள்ளது. இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை இந்த ம...
பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து ...
மொழியியல் (Linguistics) என்பது மொழியை அறிவியல் முறைப்படி ஆராய்வதற்குரிய ஒரு துறையாகும். மொழியின் வடிவம், பொருள், சூழல் போன்றவற்றையும் மொழியியல் ஆய்வு செய்கிறது . பொதுவான சகாப்தத்திற்கு முன்திய 4 ஆம் நூற்றாண்டில் இந்திய இலக்கண அறிஞரான பானிணி சமசுகிருத மொழியைப்பற்றி ஒரு முறையான ஆய்வு விளக்கத்தை எழுதியுள்ளார் . மொழ...
எழுத்து முறைமை (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்கக்கூடிய வகையில் குறியீடுகள்மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். மிகப் பழைய வகை எழுத்துக்கள் ஓவிய எழுத்துக்கள் (pictographical) அல்லது கருத்தெழுத்துக்கள் (ideographical) ஆகும். பெரும்பாலான எழுத்து முறைமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: உருபனெழுத்து முறை (logograph...
மந்திரி மனை என்பது இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் ஆகும். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையு...
பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன. பனையிலிருந்து பல உப உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில்...
இந்தியக் கட்டடக்கலை வரலாற்றில் தமிழர் கட்டடக்கலை என்னும் தென்னிந்தியக் கட்டடக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய கர்நாடகப் பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ், அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய தமிழக கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியி...
வரலாற்றுக்கு முந்திய கட்டடக்கலை புதிய கற்காலக் கட்டடக்கலை பண்டைக்காலக் கட்டடக்கலை பண்டை எகிப்தியக் கட்டடக்கலை அசிரியக் கட்டடக்கலை பபிலோனியக் கட்டடக்கலை எட்ரஸ்கியக் கட்டடக்கலை மினோவன் கட்டடக்கலை மைசீனியக் கட்டடக்கலை பாரசீகக் கட்டடக்கலை சுமேரியக் கட்டடக்கலை மேற்குலகக் கட்டடக்கலை நவீனத்துவம் வரை செந்நெறிக் கட்டடக்கலை...
புல்லாங்குழல் () மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுக...
டொரிக் ஒழுங்கு என்பது கிரேக்கக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகள் அல்லது ஒழுங்கு முறைமைகளுள் ஒன்றாகும். அயனிக் ஒழுங்கு, கொறிந்தியன் ஒழுங்கு என்பன ஏனைய இரண்டு ஒழுங்குகளுமாகும். இவற்றுள் டொறிக்கே காலத்தால் முந்தியது. கி.மு 7 ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்பட்ட இது கி.மு 5 ஆம் நூற்றாண்டில் முதிர்ச்சி நிலையை எட்டியது. கிரே...
எப்பெசுடசு கோயில் ( Temple of Hephaestus ) கிரீஸ் நாட்டின் மத்திய ஏதென்ஸில் உள்ளது. உலகில், கூடிய அளவு நல்ல நிலையிலிருக்கும் பழங்காலக் கிரேக்கக் கோவில் இதுவே எனினும், இதன் அண்மையிலிருக்கும், பிரபலமான கோயிலான பார்த்தினனிலும் குறைவாக அறியப்பட்டதாகவே இது உள்ளது. எப்பெசுடத்தியம் என்றும் இது அழைக்கப்படுகின்றது. பைசண்டைன் கா...
பார்த்தினன் (Parthenon) என்பது கிரீசு நாட்டின் ஏதென்சு நகரத்திற்கு அண்மையிலுள்ள கோட்டையில் காவல் தெய்வம் கன்னி ஆதெனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்கால கிரேக்க கோயிலாகும். கிரீசு நாட்டில் எஞ்சியுள்ள கட்டிடங்களில் மிகவும் புகழ்பெற்றது இந்தப் பார்த்தினன் கோயில் ஆகும். உலகம் போற்றும் இப்பழைய கோயில் கட்டிடம் 2500 ஆண்டுகள...
பைசண்டைன் கட்டிடக்கலை என்பது, பைசண்டைன் பேரரசு காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பாணியாகும். கி.பி 330ல், கொன்ஸ்டண்டைன், உரோமப் பேரரசின் தலைநகரத்தை பைசண்டியத்துக்கு மாற்றியதுடன் பைசண்டைன் பேரரசு உதயமானது. இந்த பைசண்டியம் என்றபெயர் பின்னர் கொன்ஸ்டண்டினோப்பிள் என்று மாற்றப்பட்டது. தற்போது இதுவே இஸ்தான்புல் என வ...
ஹேகியா சோபியா (; , "புனித ஞானம்"; / Sancta Sapientia; ) துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது. முன்னர் கிழக்கத்திய மரபுவழிக் கிறித்தவப் பிரிவினரின் பெருங்கோவிலாக விளங்கிய இது, பின்னர் 1453 இல், மசூதியாக மாற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் இது ஒரு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டு, அயசோஃப்யா அருங்காட்சியகம் என அழைக்கப்பட...
கொலோசியம் அல்லது கொலிசியம் ( ) (Colosseum, Coliseum, அல்லது Flavian Amphitheatre) மேலும் ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் என்றும் அழைக்கப்படுவது, (இலத்தீன்: Amphitheatrum Flavium; இத்தாலியம்: Anfiteatro Flavio அல்லது Colosseo), என்பது, இத்தாலியின் ரோம் நகரத்தின் மையத்தில் ஒரு நீள்வட்ட இன்போஃபிடேட்டர் வகைக் கட்டடம், இது பைஞ்சுத...
தொல்பழங்காலம் என்பது கற்காலம் தொடங்கிய காலத்துக்கும், மனிதர்களுக்கு எழுதும் பழக்கம் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலம் எனக் கருதப்படுகிறது. இது ~3.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் கல் கருவிகள் பயன்படுத்தத் தொடங்கியது முதல் ~5300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதும் முறைமைகள் கண்டுபிடிக்கப்பட்டது வரையிலான காலம் என்று வரையறுக்க...
மில்லெனியம் டோம் இங்கிலாந்தின் தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ளது. மூன்றாவது ஆயிரவாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அமைந்த கண்காட்சியொன்றுக்காக இது கட்டப்பட்டது. அக்கண்காட்சி ஜனவரி 1, 2000 முதல் டிசம்பர் 31, 2000 வரை நடைபெற்றது. கட்டிடக்கலை தொடர்பான குறுங்கட்டுரைகள் இங்கிலாந்து
தாஜ் மகால் (Taj Mahal), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்ட...
ஐக்கிய நாடுகள் தலைமையகம், நியூயார்க் நகரில் உள்ள தனித்துவமானதொரு கட்டிடத் தொகுதியாகும். இது 1952 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை அலுவலகமாகச் செயற்பட்டு வருகின்றது. இது மான்ஹட்டனின் கிழக்குப் பகுதியில், டர்ட்டில் பே (Turtle Bay) வட்டகையில், ஈஸ்ட் ஆற்றை நோக்கியிருக்கும் பரந்த நிலத்தில் அமைந்துள்ளது. இது ந...
சுவர்க்கக் கோவில் என்பது பீஜிங் நகரத்தில் உள்ள சமயக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம் கட்டும் பணி 1420-ல் தொடங்கியது. பீஜிங்கில் உள்ள நான்கு பெருமைக்குரிய கோவில்களின் இதுவே மிகவும் பெரியதாகும். குறுங்கட்டுரைகள் சீனக் கோயில்கள் சீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்
ஜப்பானிய மொழியில், அணுகுண்டுக் குவிமாடம் (Atomic Bomb Dome) எனப் பொருள்படும் கென்பாக்கு டோம் (原爆ドーム) என்னும் பெயர் கொண்ட ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஜப்பானின், ஹிரோஷிமா நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா இந்த நகரத்தின் மீது முதலாவது அணுகுண்டைப் போட்டது. இந்த அணுகுண்டால் இந்தக்கட்டடம் நேரடியாகப் பாதிக்கப்...
நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா, கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியால் நகரின் வரலாற்று முக்கியத்துவப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பசிலிக்கா ஆகும். இதன் கட்டிடம், கவனத்தை ஈர்க்கும் உலகின் சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்று எனலாம். இதன் உள் பகுதி பல நிறங்களைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. இதன் விதானம் (ceiling),...
பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும், ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சு...
பாபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின் தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பாபிலோனின் சுவர்களும் பண்டைய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுகாத்நேசர் (II|Nebuchadnezzar) தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பாபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படு...
அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் பௌத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது பண்டைய கெமீர் இனத்தை சேர்ந்த இரண்டாம் சூரியவர்மனால் (கி.பி.1113–1150) 12ஆம் நூற்றாண்டின் ப...
கல்வட்டம் என்பது வில்ட்ஷையர், இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். இது, பெருங்கற்கள் (megalith) என அழைக்கப்படும், வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் உள்ளடக்கும். இதன் காலம் பற்றி இன்னும் விவ...
அக்ரோபோலிஸ் (acropolis, ) என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களின் குறியீட்டு மையப்பகுதியைக் குறித்தது. சமயம் தொடர்பான கட்டிடங்களும், குடிமக்களுக்கான பொதுக் கட்டிடங்களும் இப்பகுதியில் ஒருங்கே அமைந்திருந்தன. அக்காலத்து ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு ஆகும். அக்ரோபோலிஸ் (Acropolis) என்னும் சொல்,...
சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) (長城 எளிதாக்கப்பட்டது: 长城 பின்யின்: (ச்)சாங் (ச்)செங், நேரடிக் கருத்து: "நீண்ட நகர் (கோட்டை)") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண...
எல் காஸ்ட்டிலோ பிரமிட் என்பது மெக்சிக்கோவின் மாநிலமான யுகட்டானிலுள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெசோஅமெரிக்க படிக்கட்டுப் பிரமிட் ஆகும். எல் காஸ்ட்டிலோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் ஸ்பானிய மொழிச் சொல்லாகும். 9 ஆம் நூற்றாண்டளவில், மாயன் நாகரீக மக்களால் கட்டப்பட்ட இது...
எவரெசுட்டு சிகரம் (அல்லது எவரெஸ்ட் சிகரம்), நேபாளத்தில் சாகர்மா என்றும், சீனாவில் சோமோலுங்குமா என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) ஆகும். இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் எவரெஸ்ட் மலை அமைந்து உள்ளது. மேலும், பூமியின்...
சுதந்திர தேவி சிலை (Statue of Liberty அல்லது Liberty Enlightening the World) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரடெரிக் ஆகஸ்ட் பா...
விக்டோரியா அருவி அல்லது விக்டோரியா நீர்வீழ்ச்சி, உலகின் மிக அழகிய அருவிகளுள் ஒன்று. இது ஸாம்பிசி ஆற்றில், சாம்பியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் (17°55′1″S, 25°51′0″E) அமைந்துள்ளது. இது அண்ணளவாக 1.7 கிலோமீட்டர் (1 மைல்) அகலமும், 128 மீட்டர் (420 அடிகள்) உயரமும் கொண்டது. டேவிட் லிவிங்ஸ்டன் என...
ரோடொஸின் கொலோசஸ் (Colossus of Rhodes) கிரேக்கத் தீவான ரோடொசில் ஈலியோஸ் கடவுளுக்காக எழுப்பப்பட்ட மாபெரும் சிலையாகும். 34 மீட்டர் உயரமாகவிருந்த இச்சிலை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகும். Chares of Lindos இனால் கி. மு. 292 - கி. மு. 280 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இச்சிலை 56 ஆண்டுகளே நிலைத்திருந்தது. கி. மு. 224 இல் ஏற்பட...
கிசாவின் பெரிய பிரமிடு அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு (Great Pyramid of Giza) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிடுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும். இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவர...
ஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில...
சி. என். கோபுரம்(CN Tower () ), 553.3 மீட்டர் உயரம் (1,815.3 அடி) உயரம் கொண்ட கோபுரமானது கனடாவின் டோரண்டோவில், ஒன்றாரியோ மாகணத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றாகும். 1973 ஆம் ஆண்டு, பெப்ரவரி 6 ஆம் திகதி தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 1976 ஆண்டு பூர்த்தியாயின. 1976 ஆம் ஆண்டு, ஜூன் 26 ஆம் தேதி ம...
செஞ்சதுக்கம் (Red Square, ) உருசிய நாட்டின் மாசுக்கோவிலுள்ள ஒரு புகழ் பெற்ற சதுக்கமாகும். இது முன்னைய அரசர் காலத்துக் கோட்டையும், தற்போதைய உருசிய சனாதிபதியின் வசிப்பிடமும் ஆகிய கிரெம்லினை "கித்தாய்-கோரோட்" எனப்படும் வரலாற்றுப் புகழ் மிக்க வணிகப் பகுதியில் இருந்து பிரிக்கிறது. இங்கிருந்து விரிந்து செல்லும் முக்கியமான ...
கோல்டன் கேட் பாலம் (Golden Gate Bridge) பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலம...
ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை (Statue of Zeus at Olympia) கிமு 433 இல் பீடியசு என்னும் கிரேக்கச் சிற்பியால் கிரீஸ் நாட்டில் செதுக்கப்பட்டது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிபி 394 இல், இது கொன்ஸ்தந்தினோப்பிள் (தற்கால இஸ்தான்புல்) நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும், அங்கு தீக்...
'அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் 1600 ஆம் ஆண்டு பல நிகழ்வுகளைக் கண்டுள்ளது. அவற்றுட் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. நிகழ்வுகள் டிசம்பர் 31 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது. டடூசாக், பிரான்ஸின் முதலாவது வர்த்தக நிலையம் தலைநிலமான நியூ பிரான்சில் (இப்பொழுது கனடா) நிறுவப்பட்டது. வில்லியம் கில்பர்...
மனித-வலுப் போக்குவரத்து என்பது ஆட்களையும் பொருட்களையும் மனிதர்கள் தங்கள் சொந்த வலுவையோ அல்லது பிற மனிதர்களுடைய வலுவையோ பயன்படுத்தி ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்த்துவதைக் குறிக்கும். இதுவும், விலங்கு-வலுப் போக்குவரத்துமே இயந்திரங்களுக்கு முற்பட்டகாலப் போக்குவரத்து முறைகளாகும். சில இயந்திரங்கள் மனித-வலு இயக்கத்த...
கணிதம் அல்லது கணிதவியல் () (Mathematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளைப் பிரதிபடுத்துகின...
எண் (Number) என்பது எண்ணுதல், அளவிடுதல் மற்றும் சிட்டையிடுதலுக்குப் பயன்படும் ஒரு கணிதப் பொருளாகும். கணிதத்துறையில் பலவகையான எண்கள் உள்ளன. எண்களுக்கான இயல் எண்கள் (1, 2, 3, 4, ...) எண்களுக்கான அடிப்படை எடுத்துக்காட்டாகும். எண்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடானது எண்ணுரு எனப்படும். மனிதன் தோன்றிய காலத்தி...
இது எண்களைப் பற்றிய கட்டுரைகளின் ஒரு பட்டியலாகும். விகிதமுறு எண்கள் முழு எண்கள் இயற்கை எண்கள் குறிப்பிடத்தக்க முழு எண்கள் கணித இயல்புகளுக்காகவோ அல்லது பண்பாட்டுக் காரணங்களுக்காகவோ குறிப்பிடத்தக்க ஏனைய எண்கள்: -1 127 137 144 222 255 273 360 496 666 720 1001 1729, இராமானுசன் எண் 32767 2147483647 ஏனைய...
முக்கோணம் அல்லது முக்கோணி (Triangle) என்பது மிகச் சிறிய எண்ணிக்கையுள்ள நேர்கோடுகளால் ஒரு பரப்பை அடைக்க வல்ல ஓர் அடிப்படையான வடிவம். வடிவக்கணித (கேத்திர கணித) அடிப்படை வடிவங்களில் ஒன்று. பெயருக்கு ஏற்றாற் போல் இவ்வடிவம் மூன்று கோணங்களையும் மூன்று உச்சிகளையும் நேர்கோடுகளாலான மூன்று பக்கங்களையும் கொண்ட, ஒரு தட்டையான இரு ப...
வடிவவியலில் முக்கோண எண் (triangular number) என்பது வடிவ எண்களில் ஒரு வகையாகும். படத்தில் உள்ளவாறு, ஒரு முக்கோண எண் என்பது ஒரு சமபக்க முக்கோண வடிவில் ஒழுங்குபடுத்தத்தக்க ஒரு எண்ணாகும். (மரபின்படி, முதலாவது முக்கோண எண் 1 ஆகும்.) n -ஆம் முக்கோண எண் என்பது ஒரு பக்கத்திற்கு n புள்ளிகளெனக் கொண்ட சமபக்க முக்கோணத்துக்குள் அமை...
கணிதத்தில், ஒரு பல்கோண எண் (Polygonal number) என்பது, ஒழுங்கான பல்கோண வடிவில் ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு எண்ணாகும். பண்டைய கணிதவியலாளர்கள், எண்கள் கற்கள், விதைகள் போன்றவற்றால் குறிக்கப்படும்போது, அவற்றைக் குறிக்கப்பட்ட விதங்களில் ஒழுங்குபடுத்த முடியும் எனக் கண்டறிந்தனர். எடுத்துக்காட்டாக எண் 10 ஐ, ஒரு முக்கோணமாக ஒழுங்கு...
தமிழ் அரிச்சுவடி (Tamil script) என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகின்றன. தமிழில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துகளுமாக மொத்தம் 24...
எண்ணுரு அல்லது எண்குறி (Numeral) என்பது, ஒரு எண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சொல், குறியீடு அல்லது குறியீடுகளின் சேர்க்கையாகும். "1, 2, 3, 4, 5,..." என் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணுருக்கள் அராபிய எண்ணுருக்கள் எனப்படுகின்றன. இவை "I, II, III, IV, V, ..." என எழுதப்படும் ரோம எண்ணுருக்களிலிருந்து வேறுபட்டிரு...
அராபிய எண்ணுரு முறைமை அல்லது இந்து-அரபு எண்ணுரு முறைமை (Hindu–Arabic numeral system) எனப் பொதுவாக அழைக்கப்படும் எண்ணுரு முறைமையே, எண்களைக் குறிக்க மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் குறியீட்டுமுறை. அராபிய எண்ணுரு முறைமை இடஒழுங்கிலமைந்த, அடி 10 ஐக் கொண்ட ஒரு எண்ணுரு முறைமையாகும். இதில் 10 இலக்கங்களைக் குறிக்க 10 வெவ்வேறான...
பாபிலோனிய எண்குறிகள் (Babylonian numerals) அல்லது பபிலோனிய எண்ணுருக்கள் ஆப்புவடிவத்தில் ஆப்புநுனி எழுத்துளியால் மென்மையாக பொறித்து களிமண் இலச்சினைகள் செய்து அவற்றை வெயிலில் உலர்த்தி நிலையான ஆவணங்களாக உருவாகீயன ஆகும். வானியல் நோக்கீடுகளிலும் கணக்கீடுகளிலும் பெற்றிருந்த வல்லமைக்காக பாராட்டப்படும் பாபிலோனியர்கள், (மணிச்...
வெவ்வேறுவகை எழுத்து முறைமைகளின் விபரங்களுக்கு எழுத்து முறைமை கட்டுரையைப் பார்க்கவும். வித்தியாசமாக இருப்பின் மொழியின் பெயர், அதை எழுதப் பயன்பட்ட எழுத்தின் பெயரைத் தொடர்ந்து தரப்பட்டுள்ளது. Logographic எழுத்து முறைமை Hieroglypics - பண்டை எகிப்திய எழுத்து முறைமை ஹான்சி (சீனம்) டொங்பா (நக்சி) வியட்நாமிய வரிவடிவம் (நொம், ...
சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம் என்பது, சிந்துவெளி நாகரிக அழிபாடுகளிடையே கிடைத்த ஆயிரக்கணக்கான முத்திரை குத்துவதற்கான அச்சுக்களிலும், அவற்றின்மூலம் முத்திரை குத்தப்பட்ட பல களிமண் வில்லைகளிலும் காணப்படுகின்ற வரிவடிவங்கள் ஆகும். இவை அக்காலத்தில் சிந்துவெளி மக்களால் பேசப்பட்ட மொழிக்கான வரிவடிவங்களாகக் கருதப்படுகின்றன. கிடைத்த...
கருங்குழி (Black Hole) அல்லது கருந்துளை என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்...
ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு நீள வானியல் அலகு ஆகும். இது விண்வெளியில் உள்ள விண்மீன்கள் முதலான விண்பொருட்ளுக்கு இடையேயான தொலைவுகளை அளக்க வானியலில் பயன்படுத்தும் அலகு. வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. விண்மீன்கள், விண்மீன்களின் கூட்டங்களாகிய விண்மீ...
சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வதற்கு உதவுவதே சட்டம் என்ற திட்டத்தின் நோக்கமாகும். சட்டத...
ரோலண்ட் ஹில் (Rowland Hill, டிசம்பர் 3, 1795 - ஆகஸ்ட் 27, 1879), நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர். ரோலண்ட் ஹில், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்...
பென்னி என்பது ஒரு நாணய அலகாகும். ஆங்கிலம் பேசப்படும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு பென்னி 1971 இன் பின்னரான பிரித்தானியப் பயன்பாட்டின்படி 1 பவுண்ட் ஸ்ரேர்லிங் = 100 பென்ஸ் (பென்னிகள்) பெப்ரவரி 15, 1971 இன் முன்னர் ஒரு பிரித்தானிய பவுண்டு = 240 பென்ஸ் ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் ஒரு சத நாணயம் (...
அரசர்கள் அசோகச் சக்கரவர்த்தி சிவாஜி பாண்டியன் நெடுஞ்செழியன் கரிகால் சோழன் இராஜராஜ சோழன் இராஜேந்திர சோழன் சேரன் செங்குட்டுவன் முதலாம் நரசிம்ம பல்லவன் மகேந்திர பல்லவன் திருமலை நாயக்கர் அக்பர் அரசியல் தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் அம்பேத்கர் பெரியார் கௌடில்யர் ராணி லட்சுமிபாய் லோகமான்ய திலகர் பிபின்...
{{dablink|பெரியார் என்ற பட்டப்பெயரின் ஏனைய பயன்பாடுகளுக்கு பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்) பக்கத்தைப் பாருங்கள்.}} பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கடப்பா இராமசாமி , , செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகள...
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா...
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, , அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் க...
இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா கா...
ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிரு...
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர்களில் ஒருவராக கருதப்படுவதோடு, இதுவரை வாழ்ந்த இயற்பியலாளர்களில் தல...
புகழ்பெற்ற ஆரம்பகால இயற்பியலாளர்கள் 18 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள் மேலும் பார்க்க இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் இயற்பியல்
{{Infobox scientist | name = சர் ஐசக் நியூட்டன்Sir Isaac Newton | image = GodfreyKneller-IsaacNewton-1689.jpg | alt = | caption = ஐசக் நியூட்டன் (வரைந்தவர்: காட்பிரி கெல்லர், 1689) | birth_date = 25 டிசம்பர் 1642 | birth_place = வூல்சுதோர்ப், லிங்கன்சயர், இங்கிலாந்து | death_date = | death_place = கென்சிங்டன், மிடில்...
கலீலியோ கலிலி (Galileo Galilei; இத்தாலிய ஒலிப்பில்: கலிலேயோ கலிலே; 15, பிப்ரவரி 1564 – 8, சனவரி 1642), ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை", ...
கூட்டுத் துணிக்கைகள் மூலக்கூறுகள் என்பன ஒரு பதார்த்தத்தின் பௌதீகப் பண்பு மாறாமல் அப் பதார்த்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படக்கூடிய மிகச் சிறிய துணிக்கையாகும். ஒவ்வொரு வித மூலக்கூறும் ஒரு குறிப்பிட்ட வேதியியற் சேர்வையை ஒத்திருக்கும். CAS பதார்த்தத் தரவுத்தளம் 23 மில்லியன் சேர்வைகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. மூல...
தனிம அட்டவணை என்பது வேதியியற் தனிமங்களின் அணு எண், எதிர்மின்னி அமைப்பு, மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய (நேர்மின்னிகளின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் திமீத்ரி மெண்டெ...
இங்கிலாந்து, லிங்கன்ஷயர் என்னுமிடத்திலுள்ள வூல்ஸ்தோர்ப் மனோர் (Woolsthorpe Manor), சர். ஐசாக் நியூட்டன் பிறந்தவீடாகும். இவர் 1642, டிசம்பர் 25ல் (பழைய காலக்கணிப்பு) இங்கே பிறந்தார். அக்காலத்தில் இது செம்மறி ஆடுகளை வளர்க்கும் ஒரு பண்ணையாக இருந்தது. இதன் காரணமாகவே "வூல்" (கம்பளி) என்ற சொல் இப் பெயரில் உள்ளது. "தோர்ப்" என...
கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன்...
இங்கிலாந்தின், கேம்பிரிட்ஜிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியே திரித்துவக் கல்லூரி ஆகும். கேம்பிரிட்ஜிலுள்ள கல்லூரிகளில் மிகப் பெரியது இதுவே. அத்துடன் ஒக்ஸ்பிரிட்ஜ் கல்லூரிகளில் அதிக நிதி வளம் கொண்டதும் இதுவேயாகும். £700 மில்லியன்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இதன் கட்டிடங்களுக்குப் ...
கோள் (planet) விண்மீனைச் சுற்றிவரும் வான்பொருளாகும் இது. தனது ஈர்ப்பு விசையாலுருண்டையாகத் திரளத் தக்க அளவு பொருண்மை மிக்கதாகும்; வெப்ப அணுக்கருப் பிணைவு நிகழ்வை உருவாக்க இயலாத அளவு பொருண்மை கொண்டதாகும்; மேலும் இது தன் வட்டணையின் வட்டாரத்தில் கோளெச்சம் ஏதும் அமையாமல் நீக்கியிருக்கவேண்டும். கோள் எனும் சொல் வரலாறு, கணி...
புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும்போது இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும். இதற்கு இயற்கை நிலவுகள் எதுவும் அறியப்படவில்லை. இந்தக் கோளுக்கு ...
வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும்.. சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்றெல்லாம் ...
புவி (), கதிரவனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் , எனவும் குறிப்பிடுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்தப் புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக ...
செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்...
வியாழன் (Jupiter) என்பது கதிரவனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோளும் கதிரவ அமைப்பிலேயே மிகப்பெரிய கோளும் ஆகும். இதன் நிறை கதிரவனின் நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே ஆகும். எனினும் அது கதிரவ அமைப்பில் உள்ள மற்ற கோள்களை இணைத்தால் கிடைக்கும் நிறையை விட இரண்டரை மடங்கு அதிகமானதாகும். வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் ...
சனி (Saturn) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சனி கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும். இதன் சராசரி ஆரம் புவியினுடையதை விட ஒன்பது மடங்காகும். புவியி...
இராகு (Uranus) சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் இயுரேனசின் நினைவாகப் பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ...
நெப்டியூன் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும். நெப்டியூன்(Neptune) என்பதன் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும். சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற...