title stringlengths 23 56 | content stringlengths 100 1.04k | explanation stringlengths 0 1.86k |
|---|---|---|
தெய்வயானையின் கணவன் (1-6) | உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . . . .(5) மறுவில் கற்பின் வாணுதற் கணவன் . . . .(1 - 6) | உலகம் விரும்பி மகிழ்ந்து வாழ்த்துமாறு வெயிலும் வெளிச்சமும் தரும் பொழுது உலகை வலம்வருகிறது. காலைக் கதிரவன் கடலை உழுவது கண்கொள்ளாக் காட்சி. அதன் கவின் பேர் அழகைப் பலரும் புகழ்கின்றனர். அதைப்போலத்தான் முருகன் இமைக்கிறான். மனன் ஏர்பு திரிதருகிறான். அருட்பார்வை வழங்குகிறான். அவனது அருள்ஒளி கட்டவிழ்ந்து பாய்கிறது. தடை இல்லாம... |
கடப்பமாலை புரளும் மார்பினன் (7-11) | கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .(10) உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன் . . . .(7 - 11) | சூலுற்ற மழைமேகங்கள் வானத்தில் வாள்போல் மின்னி வளம்தரும் மழைத்துளிகளைப் பொழியும். கோடைக்குப் பிறகு பெய்யும் அந்த முதன்மழையால் கானம் இருண்டு பசுமையாகும். வெண்கடம்பு மரங்கள் தழைத்துப் பூத்துக் குலுங்கும். அப்பூக்களே முருகன் மார்பில் புரளும் தார்மாலைகள். |
சூரர மகளிரின் இயல்பு (12-41) | மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி, கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள், கோபத் தன்ன தோயாப் பூந்துகில், . . . .(15) பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல், | பசுமையால் ஆசைமூட்டி மலையுச்சி இருண்டு கிடக்கும். அங்கே சூரர மகளிர் ஆடுவர். அவர்களுக்குக் கிண்கிணி (கொலுசு) கௌவிக் கிடக்கும் சிறிய அடிகள். கணையமரம்போல் உறுதியான கால்கள். வளைந்த இடுப்பு. பெருமை கொண்ட தோள். தொய்வு இல்லாமல் ஆடுவதற்கு வசதியாக அவர்கள் இடையில் உடுத்தியிருந்த வெல்வெட்டுப் பூந்துணி கோபம் என்னும் தம்பலப் பூச்சிப... |
காந்தளின் கண்ணி சூடிய சென்னியன் (42-44) | மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன். . . .(42 - 44) | முருகன் காந்தள் மலர் மாலையைத் தலையில் அணிந்திருப்பான். அந்தப் பூக்கள் மந்தியும் அறியாத மரமடர்ந்த மலையடுக்குப் பகுதியில் வண்டுகளும் மொய்க்க முடியாமல் மிகுதியாகப் பூத்துக் கிடப்பவை. (முருகனைக் காந்தளங் கண்ணிச் சென்னியன் என்று சொல்லிப் பாராட்டினர்) |
முருகன் சூரனைத் தடிந்த வகை (45-46) | பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச். . . .(45) சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல். . . .(45 - 46) | கடலின் உள்ளே சென்று சுடர்வீசும் இலைபோன்ற தன்வேலை வீசிச் சூரபனமனின் குல முதலையே கொன்றழித்த கொற்றவன் என்று போற்றினர். |
பேய்மகளின் துணங்கைக் கூத்து (47-56) | உலறிய கதுப்பின் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு. . . .(50) உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் | அஞ்சுவரு பேய்மகளின் அலங்கோலம் பரட்டையாய்க் கிடக்கும் தலைமயிர்.வரிசை மாறிப் பிறழ்ந்திருக்கும் பல்.பிளந்த வாய்.சுழலும் விழிகள்.பசுமை நிறக் கண்ணில் சுட்டெரிக்கும் பார்வை.கோட்டானும் பாம்பும் தொங்கும் முலை முகடுகள்.நீண்ட காதுகளும் முலை முகடுகளில் தொங்கின. அச்சம் தரும் நடையும் தோற்றமும் கொண்டவள். |
மாமரத்தை வெட்டிய வெற்றி (57-61) | இருபே ருருவின் ஒருபே ரியாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து . . . .(60) எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் . . . .(57 - 61) | முருகன் தன் ஒரே ஒரு பேருடம்பில் இருபேர் உருவங்களில் காட்சி தருபவன். ஒன்று ஆண்டிக் கோலம். மற்றொன்று ஆறுமுகக் கோலம். கவிழ்ந்த இலைகளையுடைய மாமரமாகி நின்ற அவுணர் கொட்டம் அடங்க அம்மாமரத்தை முருகன் வேரோடு வெட்டிச் சாய்த்தான். செவ்வேலை வீசிப் பெற்ற இக்கொற்றம் குறையாத புகழைக் கொண்டது. அவன் சேய். |
ஆற்றுப்படுத்தல் (62-66) | சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும் செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப . . . .(65) இன்னே பெறுதிநீ முன்னிய வினையே . . . .(62 - 66) | அவனது திருவடிகளாகிய கொழுகொம்புகளைப் பற்றிக்கொண்டு படரும் உள்ளம் இருந்தால் அது நல்லதை விரும்பும் கொள்கையாகும். அதற்கு நீ உனது புல அறிவைப் பிரிந்து அவன் நினைவாகவே வாழ வேண்டியிருக்கும். அவன் குடிகொண்டுள்ள இடங்களுக்கு நீ செல்ல விரும்பினால் உன்னுடைய நெஞ்சத்தில் அந்த ஆசை நன்றாக வலுக்கட்டும். நினைத்ததை உடனே செயல் படுத்துவாயாக... |
திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல் (67-77) | செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயில் திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து . . . .(70) மாடமலி மறுகின் கூடற் குடவயின் | போரை விரும்பி ஆடவர் உயர்த்திய கொடிகள் மதுரையில் எப்போதும் பறந்துகொண்டேயிருக்கும். மகளிர் பந்தும் பாவையும் விளையாடிக் கொண்டிருப்பர். போரிட்டோரைத் தேய்த்துத் தேய்த்துப் போரிடுவர் இல்லாமல் போனதால் செல்வத் திருமகள் அரியணை ஏறி ஆண்டுகொண்டிருப்பாள். இப்படிப்பட்ட கடைத்தெருக்களும் மாடமறுகுகளும் கூடியிருப்பதுதான் கூடல் எனப்படும்... |
ஆறுமுகன் யானையின்மேல் ஏறி வருதல் (78-82) | வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல் வாடா மாலை ஓடையொடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்...... . . . .[80] கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு . . . .[78 - 82] | கூற்றம் போல் முருகனின் யானை விரைந்து நடக்கும். அப்போது இருமருங்கிலும் தொங்கும் மணி ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த வேழம் வலிமையில் புயல் காற்று கிளர்ந்து வீசுவது போன்றது. அம்பின் நுனி குத்தி ஆறிய வடுக்களைப் புள்ளிகளாகக் கொண்ட நெற்றியை உடையது. நெற்றியில் வாடா மாலையும், ஓடை என்னும் அணிகலனும் அதற்கு உண்டு. இத்தகைய யானைமேல்... |
ஆறு முகங்களின் இயல்புகள் (83-103) | ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப . . . .(85) | முருகன் தன் தலையில் முடி சூடிக்கொண்டிருந்தான். அந்த முடியில் ஐந்து முகப் பட்டை தீட்டிய திருமணி பதிக்கப்பட்டிருந்தது. பொன்முடியில் நீலநிற மணியின் ஒளி முரணியிருந்தது. (பொன்னிறத்தில் நீலநிறம் முரண்) இது அவன் தலைக்குப் பொலிவைத் தந்தது. (அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும். என்று இப்பாடலின் இறுதியில் வரும் வெண்பாவுக்குப் ... |
பன்னிரு கைகளின் தொழில்கள் (104-118) | ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின் செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு . . . .(105) வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் | சந்தனப் பூச்சோடு முத்தாரம் தொங்கும் அவன் மேனியில் செம்புள்ளிகள் காணப்பட்டன. அவை அவன் வாங்கிக் கொண்ட தழும்புகள். வளம் மிக்க அவனது இரண்டு தோள்களில் பன்னிரண்டு கைகள். |
அலைவாயில் ஆறுமுகன் வந்தருளியிருக்கும் காட்சி (119-125) | அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல . . . .(120) உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ, விசும்பஆ றாக விரைசெலல் முன்னி, உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று . . . .(119 - 125) | இப்படிப் பன்னிரண்டு கைகளும் பல்வேறு செயல்களைச் செய்து கொண்டிருக்கும்போது அவனைச் சுற்றிப் பல முழக்கங்கள் எழுகின்றன. கொம்பு சங்கு முரசம் முதலான பல்வேறு இசைக் கருவிகள் முழங்குகின்றன. அவனது கொடியிலிருக்கும் மயில் அகவுகிறது. இவற்றிற்கு இடையே திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூரிலிருந்து விசும்பு வழியாக விரைந்து செல்ல அவன் ... |
முன் செல்லும் முனிவரது இயல்புகள் (126-137) | சீரை தைஇய உடுக்கையர் சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசுஅற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். . . . .(130) பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு க... | முனிவர்கள் காவியில் தோய்த்த மரநிற ஆடையை உடுத்திருந்தனர். அவர்களின் தலைமுடி வலம்புரி நிறம்போல சீராக வெளுத்திருந்தது. யாரையும் குற்றம் காணாத பார்வையும் யாரும் குற்றம் காண முடியாத உருவமும் கொண்டிருந்தனர். தைத்த மான்தோலை அணிந்திருந்த அவர்கள் ஊன் வற்றி எலும்பு தெரியும் மார்புடன் காணப்பட்டனர். நண்பகல் உணவும் பலநாள் இல்லாமல் ... |
மேவலர் இயல்பு (138-142) | புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் . . . .(140) நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர . . . .(138 - 142) | வெண்புகையை முகந்து வைத்தது போல் தூய ஆடையை மகளிர் உடுத்தியிருந்தனர். அவர்களின் நெஞ்சு முகடுகள் மொட்டுகள் போல் இல்லை. வாய் விரிந்த மொட்டைப் போல அவிழ்ந்து கிடந்தன. யாழின் திவவு காதைப்போல் வளைந்திருக்கும். அந்த யாழ்த்திவவு போல் அவர்களின் நெஞ்சு கூனியிருந்தது. அவர்கள் மென்சொல் நவில விரும்பினர். முடியவில்லை. யாழின் நரம்பு போ... |
பாடும் மகளிர் இயல்பு (143-147) | நோயின்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் . . . .(145) பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க . . . .(143 - 147) | நோயில்லாத உடலிலேயே இந்த நிலை. மேனி மாந்தளிர் போல் இருந்தது. அதில் பொன்னை உரைத்த கல்லைப் போலத் திதலைநிறம் பூத்திருந்தது. வாயிலே இனிய புன்சிரிப்பு. பணிந்து உயர்ந்த பெண்ணுறுப்பைப் பருமம் என்னும் ஆடை மூடியிருந்தது. இத்தகைய மாசு மறுவற்ற மகளிர் முருகனைச் சூழ்ந்து வந்தனர். |
திருமால், சிவன், இந்திரன், ஆகியோரின் இயல்புகள் (148-159) | கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் . . . .(150) புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு | பாம்புப் பல்லின் துளையில் நஞ்சு ஒடுங்கியிருக்கும். பாம்பு தீயைப் போல் பெருமூச்சு விடும். கண்டவுடன் மக்கள் அஞ்சி ஒதுங்கும் திறம் கொண்டது பாம்பு. இத்தகைய பாம்பை உணவுக்காகக் கொல்லும் திறம் படைத்ததாய்க் கழுத்தும் வயிறும் வெளுத்திருப்பது கருடப் பறவை. இதனைக் கொடியாகக் கொண்டவன் திருமால். |
பிரமனுக்காகத் திரண்டு வந்த தேவர்கள் (160-168) | நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய . . . .(160) உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவ ராக | திருமால், சிவன், இந்திரன், பிரமன் என்போர் நான்கு பெருந்தெய்வங்கள். திருவாவினன்குடியில் இவர்களுக்குக் கோயில்கள் இருந்தன. பலராலும் புகழப்படும் மேலே சொன்ன நால்வரும் ஒத்த கருத்துடையராய் உலகினைக் காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் தலைவர்கள். |
தேவர்கள் வருகின்ற காட்சி (169-174) | மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் . . . .(170) தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் . . . .(169 - 174) | |
முருகன் மடந்தையோடு வீற்றிருத்தல் (175-176) | தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் . . . .(175) ஆவினன்குடி அசைதலும் உரியன், அதான்று, . . . .(175 - 176) | அவனைக் காண வருவோர் பாகுபாடோ வேறுபாடோ இல்லாமல் ஒன்றாகக் கூடிக் கண்டு களித்தனர். முருகனும் பாகுபாடோ வேறுபாடோ இல்லாமல் காட்சி தந்து கொண்டிருந்தான். மக்களிடம் நால்வேறு இயற்கைப் பாங்குகள் உண்டு. (மனம், மொழி, செயல், இயல்பு - என்பன அவை.) 11 வகைத் தேவர் (மருத்துவர்), 18 வகைத் தேவர் என்னும் பாகுபாடுகளும் உண்டு. எல்லாருமே உயர்நி... |
இரு பிறப்பாளரின் இயல்பு (177-182) | இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . . .(180) மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல, . . . .(177 - 182) | |
அந்தணர் வழிபடும் முறை (183-189) | ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ, உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து . . . .(185) ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று, . . . .(183 - 189) | இருபிறப்பாளர் வழிபாடு இங்குச் சிறப்பு மிக்கது. இவர்கள் அறுவகைப்பட்ட சமய நெறிகளிலிருந்து வழுவாதவர்கள். சிவன் பெருமாள் என்று இருவரை வழிபடும் பல்வேறு தொல்குடியைச் சேர்ந்தவர்கள். 48 ஆண்டு இளமையை இல்லறத்தில் கழித்த பின்னர் அவர்கள் அறம் சொல்லி முத்தீ வளர்க்கும் கொள்கையில் மூன்று வகைக் குறிக்கோள் உண்டு. இறந்தோருக்கும் இறைவனுக... |
குரவைக் கூத்து (190-197) | பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் . . . .(190) அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர் நீடமை விளைந்த தேக்கள் தேறல் . . . .(195) குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர . . . .(190 - ... | வேலன் (அடி 190) என்பவன் சாமியாடி அவன் பூக்கண்ணியைத் தலையில் அணிந்திருந்தான். பூக்கூடையில் கொண்டுவந்த குளவி வெண்கூதாளம் ஆகிய பூக்களுக்கிடையே நறைக்காயை இடையிலே வைத்துத் தொடுத்த கண்ணி அது. மார்பில் சந்தனம் அணிந்திருந்தான். இனிப்புக் கள்ளாகிய தேறலைத் தன் குன்றகச் சிறுகுடியிலுள்ள சுற்றத்தாருடன் சேர்ந்து உண்ட களிப்போடு தொண்ட... |
குன்றுதோறும் ஆடல்புரியும் தன்மை (198-217) | விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் . . . .(200) முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு . . . .(205) | வேலனுடன் சேர்ந்து மகளிரும் குரவை ஆடினர். அவர்கள் தம் கூந்தலை விரல்களால் கோதி உலர்த்திக் கொண்டனர். காட்டிலும் சுனையிலும் பூத்த பூமாலைக் கண்ணியைத் தலையில் சூடிக் கொண்டிருந்தனர். அணைத்துப் பின்னிய அவர்களின் கூந்தலானது பூங்கோதை இணைத்துப் பின்னப்பட்டிருந்தது. குல்லாத்தழை பூத்திருக்கும் வெண்கடம்பு, மரத்தளிர், மாந்தழை ஆகியவற்... |
முருகன் இருப்பிடங்கள் (218-226) | சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், . . . .(220) ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும், வேலன் தைஇய வெறியயர் களனும், காடும் காவும் கவின்பெறு துருத்தியும், யாறும் குளனும் வேறுபல் வைப்பும், சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும், . . . .(225) மன்றமும் பொதியிலும் ... | பழமையான முதிர்ந்த மலைசார் சோலைகள் தினையையும் மலரையும் கலந்து தூவி கடா அறுத்து சேவல்கொடி கட்டி ஆங்காங்கே ஊருக்குஊர் கொண்டாடும் சிறப்புமிக்க விழா. ஆர்வம் கொண்டோர் புகழ்வதை விரும்பி அவர்களுக்குக் காட்சிதரும் நிலை வேலன் வெறியாட்டம் நிகழும் களங்கள் இயற்கையான காடுகள் நட்டு வளர்த்த காடுகள்(கா) ஆறு வளைவதால் துருத்தித் கொண்டிரு... |
குறமகளின் வெறியாட்டு (227-244) | மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர நெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் . . . .(230) செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் . ... | இந்த விழாவின்போது செய்யும் சடங்குகள் வெண்சிறு கடுகை நெய்யில் கலந்து முருகேறிய பெண்ணின்மேல் அப்பி மெனமையாகத் தேய்ப்பர்.(மசாஜ்) குடந்தம் என்னும் சொல் உடலை நன்றாக வளைத்துக் கூப்பிய கைகளால் வணங்குதலையும் மேருதண்ட முத்திரையையும் குறிக்கும். கைகளில் நான்கு விரல்களையும் மடக்கிப் பெருவிரலை உயர்த்திப் பிடித்துக் காட்டுவது தண்ட ... |
முருகனை வழிபடுதல் (245-249) | ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் . . . .(245) கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே . . . .(245 - 249) | எதிரொலி கேட்கும் மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட அந்த முருகன் வீட்டை(குன்றுதோறாடல் என்னும் படைவீட்டை)வாழ்த்திப் பாடுவார்கள். மணப்புகை காட்டிக் குறிஞ்சிப்பண் பாடுவார்கள். அங்கே அருவி ஒலியுடன் இசைக்கருவி முழக்கமும் கேட்கும். அச்சம் தரும் பூக்களைத் தூவுவார்கள். செந்தினையில் குருதி கலந்து நடுக்கம் தரும் வகையில் பரப்புவார்கள். ... |
முருகனைக் கண்டு துதித்தல் (250-277) | ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக . . . .(250) முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக் கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி, 'நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ! . . . .(255) ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே! வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ! இழையணி ச... | ஆங்காங்கே அவன் முந்துறக் கண்டால் அவன் புகழைச் சொல்லி ஏத்தவேண்டும். கையால் தொழுது பரவ்வேண்டும். அவன் காலில் விழுந்து வணங்கவேண்டும். இமயமலையில் நீலம் பூத்திருக்கும் சுனையாகிய சரவண பொய்கையில், ஐவருள் ஒருவராகிய வருணன் (இந்திரன் ?) தன் உள்ளங்கையில் ஏற்றுக்கொள்ள, முருகன் பிறந்தான். வானத்து விண்மீன்களில் கார்த்திகை மீனாக இணைந... |
கருதி வந்ததை மொழிதல் (278-281) | 'நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்!'எனக் . . . .(280) குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன் . . . .(278 - 281) | முருகனுக்கு விழாவெடுக்கும் வெறிக்களத்தில் கூளியர் தமது தலைவனுக்கு விழா என்னும் பெருமிதத்தோடு தோன்றினர். அவர்கள் முருகனிடம் பரிந்துரை செய்தனர். முருகா ! உன்னிடம் வேண்டும் இவன் இரங்கத் தக்கவன். மழைபோல் அருள் பொழியத் தக்கவன். முதிர்ச்சி பெற்ற வாயால் ஏதோ சொல்லி இரக்கிறான். இரந்தாலும் இரக்காவிட்டாலும் உன் புகழைக் கேட்டு நயந... |
சேவிப்போர் கூற்று (282-286) | வேறுபல் உருவின் குறும்பல் கூளியர் சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி, 'அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன் பெரும!நின் வண்புகழ் நயந்'தென . . . .(285) இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் . . . .(282 - 286) | |
முருகன் அருள்புரிதல் (287-295) | தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி, . . . .(290) 'அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர'வென அன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ யாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்கும்;அதி பலவுடன... | தெய்வத்து இளநலத்துடன் காட்சி தரும்படி வேண்டல் முருகன் தெய்வநலஞ் சான்ற அழகொழுகும் உருவினனாய் வானம் தோயும் நெடியவனாய் வந்து காட்சிதர வேண்டும். மனங்கவரும் உயர்ந்த நிலையில் தழுவிக் கொள்ள வேண்டும். பண்டை நாள் தொட்டு கமழும் மணமாக அவன் விளங்குபவன். தெய்வமாக விளங்குபவன். இளமைக் கோலமாக விளங்குபவன். நலத்தின் வெளிப்பாடாக விளங்குப... |
அருவியின் காட்சியும் இயற்கைவளமும் (296-317) | வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து ஆர முழுமுதல் உருட்டி வேரற் பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல. . . . .(300) ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வா... | பழமையால் முதிர்ச்சி பெற்ற சோலை அருவிப்பழம் முதிர்ந்த சோலை அருவி அடித்துக்கொண்டு வரும் பல்வேறு பழப் பொருள்களாவன. அருவி துணிக்கொடியைப் போல் அசைந்தாடிக் கொண்டு வருகிறது. சந்தன மரத்தை வேரோடு உருட்டிக் கொண்டு வருகிறது. சிறுமூங்கிலைப் பூவோடும் புதரோடும் சாய்த்துக் கொண்டு வருகிறது. உயர்ந்த மலை முகடுகளில் பாறைப்பொந்துகளில் சூர... |
README.md exists but content is empty.
- Downloads last month
- 9