text stringlengths 537 2.49k | author stringclasses 1
value | genre stringclasses 1
value | page int64 1 185 |
|---|---|---|---|
புதுமைப்பித்தன் சிறுகதை: பல ரித்த
,
ரு மிண்தொகுப்புத்திட்டட் எண;
பாகம் 4 , சிறுகதைகள் 61-90
putumaippittan
part 4, short stories 61-90
In Tamil script, unicodeutf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this
work.
This e-text has been prepared using Goog... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 1 |
projectmadurai org
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact 2
பாகம் 4 , சிறுகதைகள் 61-90
உள்ளடக்கம்
61. நொண்டி 76. சாப விமோசனம்
62. ஒப்பந்தம் 77. சாளரம்
63. ஒரு கொலை அனுபவம் 78. சாமாவின் தவறு
64. பால்வண்ணம் பிள்ளை 79. சாயங்கால மயக்கம்
65. பறிமுதல் 80. சமாதி
66. பாட்டியின்... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 2 |
ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, செளகரியமாகப் படுக்கையை
விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று
நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது
"ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது" என்றது
ஒரு குரல் 3
"அதற்கென்ன, நான் கெட்டியாகத்தான் ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 3 |
"
"செளகரியமாய்ப் போய்விட்டு வரணும்" என்று கும்பிட்டான்
"உன் உடம்பையும் பார்த்துக் கொள்" என்று ஒரு ரூபாயை அவன் கையில் கொடுத்து
விட்டுச் சிரித்தார் 4
அவனும் கதவைச் சாத்திக் கொண்டு போய்விட்டான்.
வந்தவருக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்திற்கு மேல் இராது; தலை பூராவும்
நரைத்துவிட்டது. கதர் உடைதான். நல்ல கறுத்து அடர்ந்த ம... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 4 |
அவரும் கொஞ்சம் யோசித்தார் "ஆமாம் ஸார், நாம் சென்னையில் நான்கு
வருஷங்களுக்கு முன் சந்தித்ததாக ஞாபகம்" என்றார் 5
"ஆமாம்! ஆமாம்! தாங்கள்தான் தொண்டர் ராமகிருஷ்ணனோ?"
"ஆமாம்! இந்தக் கால்கள் தடியடியில் போகும்வரை தொண்டனாக இருந்தேன்."
நினைவு வந்து விட்டது. நான்கு வருடங்களுக்கு முன் என்ன அழகு? என்ன வாலிபம்!
மெலிந்ததாயினும் நல்ல... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 5 |
இதைவிட வேறு மாதிரி என் மனது கதை திரிக்க ஆரம்பித்தது ஒரு வேளை அவன்
கால்களை இழக்குமுன் திருமணமாகியிருக்கலாம் காலிழந்த கணவனின் பத்தினிப் 6
பெண். அவனது சுகத்திற்காகவே தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் ஒரு பத்தினிப்
பெண்ணின் உருவம் எனது மனக் கண்ணின் முன் தோன்றலாயிற்று.
அவனுக்கு வாழ்க்கை, சுகமா அல்லது இன்னலா, அதை அறியும்படி ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 6 |
" 7
"மிஸ்டர் பார்வதி நாதனை..."
"தங்கள் காயங்கள்தான் அதற்குக் காரணம் என்றும்..." முகத்தை நன்றாகக்
கவனித்தேன். முகம் வெட்கத்தால் சிவந்தது.
தோற்றுப்போன கட்சியை தோற்றுவிட்டது என்று தெரிந்த பிறகும் வாதிப்பவர் போல்,
ஒரு பரபரப்புடன் பேசிக்கொண்டே போனார்.
"மிஸ்டர் பார்வதிநாதனுடைய பெயருடன் என்னையும் முடிச்சு போடுவது வெறும்
அபத்த... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 7 |
"மனோன்மணியம்மாளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா " என்று திடீரென்று
கேட்டேன் 8
"ஒரு பெண்ணும் இரண்டு ஆணும்; இவைகள் எல்லாம் அவர்களுக்குத்தான். அவள்
புருஷன் என்மேல் அதிகப் பிரியமாக இருக்கிறார்!"
அதற்குள் அந்தச் சிறு டன்னல் வழியாக ரயில் சென்று பிளாட்பாரத்தில் நின்றது.
அவருக்கு உதவி செய்யும்படி நான் எழுந்தேன். அதற்குள் ஒரு ம... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 8 |
ஒரு நாள் காலை பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை
முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக
ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என்று
தமது பத்தினியைக் கூப்பிட்டார் 9
"என்ன, நீங்களா கூப்பிட்டிய; இன்னா வாரேன்."
"நம்ம குட்டிக்கு" - பார்வதிந... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 9 |
அவுஹளும் அப்படித்தான்
என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ " 10
"இம்புட்டுத்தானே! சதி, சதி. பேச்செ விட்டுத் தள்ளு. நம்ம பேட்டைப்பிள்ளை
ஐயாயிரம் நகை மருக, கலியாணச் செலவு ஒரு ரெண்டாயிரம் யென்று சொன்னாரே!"
"ஆமா, பொண்ணு கறுப்பில்லியா? எதுக்கும் கேட்டுப் பாருங்களேன்."
"சதி, நீ என்ன சொல்லுதே?"
"பாத்தா என... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 10 |
இந்த மாதிரி தகப்பனார்
பேசியது இதுதான் முதல் தரம் முகம் வெட்கத்தால் சிவந்தது ஒன்றும் பேசாமல் 11
மெத்தைக்கு ஏறினவன். "நாளைக்குப் புறப்பட வேண்டும்" என்று சொல்லிவிட்டுச்
சென்றுவிட்டான்.
2
பெண்ணை எல்லாம் போய்ப் பார்த்துவிட்டு வந்தாகிவிட்டது. சங்கரலிங்கம்
பிள்ளையின் மனைவிக்கு சிங்கிகுளத்துப் பெண் பேரில் நோக்கம்.
சங்கரலிங்க... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 11 |
அம்மாளு ரெண்டு எலையைப் போடு "
என்று துரிதப்படுத்தினார் 12
அவருடைய தர்மபத்தினியும், "வாருங்க! சேவிக்கேன்!" என்று வரவேற்றுவிட்டு, அவசர
அவசரமாகப் பெருக்கிவிட்டு, ஜமுக்காளத்தை எடுத்து விரித்து, வெற்றிலைச்
செல்லத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
"நாங்கள் எல்லாம் காப்பி ஆச்சு. நீங்கள் ஆச்சா? இல்லவிட்டா முடிச்சுக்கொண்ட... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 12 |
நீங்க காலைத்
தேச்சா பிரயோசனமில்லை நல்ல இடம் பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு 13
வேலை. இனிசூபெக்டரு, தாசில்தாரா வரலாம் உங்க பெண்ணுக்கு ராஜயோகம்!"
என்று மத்தியஸ்தம் பேசினார் நாவன்னா.
"சதி! பொறவு நீங்க சொல்லுறப்பா என்னா?" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.
"வேறெ என்ன அய்யா? இப்பவே வெத்தலை பாக்கு கைமாறிடுத்து. வர
வியாழக... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 13 |
அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச்
சம்மதித்தாள் இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள் 14
அந்தச் சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன்
வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு
இரண்டு மணி நேரம் சரிதானே?
மணிக்கொடி, 05-08-1934
63. ஒரு ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 14 |
ஏன் விளக்கு அணைய
வேண்டும் இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு குடி
முழுகிவிடும்போல் இருக்கிறது 15
அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது. ஏன்
இப்படி நடக்கவேண்டும்? ஆசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி. கிட்ட
நெருங்கட்டும். அதைத்தான் பார்ப்போம். இதென்ன அதிசயம்? அவனும் நான் தான்.... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 15 |
நெருங்கிவிட்டான்
"அய்யோ கொல்கிறானே ' 16
மூன்றும் என் குரல். எல்லாம் இருள். ஒன்றையும் காணோம்!
விழித்தேன். பக்கத்தில் எனது நண்பன். 'பகலில் என்ன தூக்கம்?' என்று முதுகைத்
தட்டிக்கொண்டிருந்தான். எதிரே எழுதுகோல், காகிதம், இத்யாதி. துப்பறியும் நாவல்
எழுதுவது என்றால் லேசா? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல
வேண்டும். பிற... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 16 |
இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிற
தென்றார் இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரிக் கூறுகிறதென்றார் 17
பால்வண்ணம் பிள்ளை தமது கட்சியை நிரூபிப்பதற்காக வெகு வேகமாக வீட்டிற்கு
வந்தார்.
பால்வண்ணம் பிள்ளைக்கும் அவருடைய மனைவியாருக்கும் கர்ப்பத் தடையில்
நம்பிக்கை கிடையாது. அதன் விளைவு வருஷம் தவறாது ஒரு குழந்தை. த... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 17 |
பால்வண்ணம்
பிள்ளையின் மனைவிக்கும் அதே நிலை ஏற்பட்டது
பிள்ளையவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது, அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில்
உபயோகித்த பூகோளப் படம் எங்கு இருக்கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா, அல்லது
அரங்கிலிருக்கும் மரப் பெட்டியிலா என்று எண்ணிக் கொண்டு வந்தார் 18
வீட்டிற்குள் ஏறியதும், "ஏளா! அரங்குச் சாவி எங்கே?" என்று கேட... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 18 |
"ஏளா " என்று கூப்பிட்டார் 19
மனைவி சிரித்துக் கொண்டே - உள்ளுக்குள் பயம் தான் - வந்தாள்.
"மாடு எப்பொழுது வந்தது? யார் வாங்கிக் கொடுத்தா?" என்றார்.
"மேலவீட்டு அண்ணாச்சி வாங்கித் தந்தாஹ. பாலு ஒரு படி கறக்குமாம்!" என்றாள்.
"உம்" என்றார்.
அன்று புதுப்பால், வீட்டுப் பால் காப்பி கொண்டு வந்து வைத்துக் கொண்டு
கணவரைத் தேடினாள். ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 19 |
நாளைக்கு விடியன்னே பிடிச்சிக்கிறேன் " என்றார்
சுப்புக்கோனார் 20
"உம் இப்பவே?"
மாட்டையவிழ்த்தாய் விட்டது.
மனைவி 'மாடு எழுபது ரூபாயாயிற்றே, குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று
தடுத்தாள். மேலும் வரும்படி வேறு வருகிறதாம்.
"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக் கிடும்" என்றார் பிள்ளை.
சுப்புக் கோனார் மாட்டை அவிழ்த்துக் க... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 20 |
அதன் வழியாகப் பெரிய பூனை நுழையலாம் ஆனால்,
புரட்சிக்காரர்கள் பூனை வடிவம் எடுக்கக்கூடும் என்று பயந்தோ என்னவோ அதிலும்
இரும்புக் கம்பி 21
இந்தத் தனிமையில் ஒருவனுக்குப் பித்துப் பிடிக்காமலிருந்தால் அவன் மன உறுதியை
என்னவென்று கூறுவது!
வாரத்திற்கு ஒரு முறை - தவறுதலாகவோ என்னவோ - அவனது சிநேகிதியைப் பார்க்க
அனுமதித்தார்கள். அது... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 21 |
அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது 22
ஜெயில் ஆஸ்பத்திரியில் மருந்து போட்டார்கள். தூக்குத் தண்டனை
ஒத்திவைக்கப்பட்டது.
அன்று சிநேகிதியைக் காண அனுமதிக்கவில்லை.
2
'நல்லார்... அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது ஒரு தத்துவப்
பிரமை. இதற்கு எதிர்மறையாக, 'தீயார், அவர் பொருட்டாகச் சிலரை வலுவாகச்
சிறைசெய்ய வேண்டிய... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 22 |
அப்பொழுது நீ வந்தாய்
இருளில் ஜோதிப் பிழம்பாக இருந்தாய் 23
நீயார்?
முகத்தை ஏன் மறைக்க வேண்டும்?
முத்தமிட்டுவிடுவேன் என்று பயமா? ஆனால் நீ என்னைத்
தழுவலாமோ?
உனது ஸ்பரிசம் என்னைப் புனிதனாக்கிவிட்டது.
நீயார்?...
இன்று நீயேன் வரவில்லை? இன்று நிலவு காய்கிறது.
நிலவுக்கு நீ அவசியமில்லையா? அல்லது உனக்கு நிலவு
அவசியமில்லையா?
இன்... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 23 |
அழித்தால்
என்ன கிடைத்துவிடுகிறது அழித்துத்தான் ஆக வேண்டுமா 24
புது உலகத்தை சிருஷ்டிப்பவனை, இன்று உடலை அழித்துவிடலாம். அவன் பிரம்மா!
அவனை அழிக்க முடியுமா? சமூகம் அசட்டுத்தனம் செய்யும்.
அரசாங்கம் எப்பொழுதும் இப்படித்தான். நமது அரசாங்கமாக இருந்தால் என்ன?
அந்நியனுடையதாக இருந்தால் என்ன? சரித்திரத்தில் எங்கும் இப்படித்தான்.... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 24 |
அவரைப் பார்க்க வேண்டும் அனுமதி இல்லாவிட்டால் வழியுண்டு " 25
"பார்க்கக் கூடாது! வீணாக நீயும் அகப்பட்டுக் கொள்ளாதே! போய்விடு! நீ சிறுமி!"
"நான் பெண்ணுமல்ல, சிறுமியுமல்ல. எங்கள் சமுதாயத்தின் அடிமை; தொண்டர்."
"நம்முடைய சமுதாயமில்லையா?" என்று சிரித்தார்.
"நீ ஒரு துரோகி. உனக்கு அங்கு இடம் கிடையாது!" என்றாள்.
அவள் கையில் தொங... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 25 |
"பறிமுதல் செய்யப்பட்ட சிறு காகிதக் குப்பை, கைதி 43-ம் நெம்பரின் பைத்தியக்கார
உளறல்களாக இருந்ததால் அழிக்கப்பட்டது" என்று எழுதிவிட்டு நாற்காலியில்
சாய்ந்தார்
எது பறிமுதலானது
மணிக்கொடி, 19-08-1934 26
66. பாட்டியின் தீபாவளி
"குத்து விளக்கேற்றி கோலமிட்டு பாரேனோ.
சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியின் வ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 26 |
குவிந்த சாம்பலில் மங்கி
மடியும் கங்கு அதைக் கரண்டியில் கொண்டுவந்து அதன் உதவியால் நெருப்புக்
குச்சியைப் பற்ற வைத்து விளக்கை ஏற்றுகிறாள் விளக்கின் மங்கிய தீப ஒளி, குச்சிலில் 27
இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களைப் பேய் சாயையாகக் காண்பிக்கின்றன.
அசைந்தாடும் தீபவொளி பொருள்களை அசைக்கின்றன. மூலையிலும் மோட்டிலும்
பம்முகின்ற ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 27 |
என்ன
சுகம் 28
"பாட்டி! பாட்டி!" என்று நெஞ்சில் குழைகிறது. நெஞ்சிடையே நெளிந்து, வளைந்து
குமைகிறது.
"பாட்டி, பாப்பா வெச்சு விளையாடலாமா?"
"வாடியம்மா? மரப்பாச்சி எடுத்துண்டு வரட்டா?"
குழந்தையுடன் ஒரு மூலைப் பக்கம் திரும்புகிறாள். குழந்தை எட்டி ஒரு பொம்மையை
எடுக்கிறது. கையொடிந்த மரப்பாச்சி.
"பாட்டி! நீதான் அம்பி மாமாவாம். ந... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 28 |
"
"அம்புன்னா என்ன பாட்டீ " 29
"அம்புன்னா..."
"பாட்டீ ஒரு பாட்டு சொல்லு பாட்டீ!"
கிழவி பாடுகிறாள்.
"பார்க்குமிடத்திலெல்லாம் நந்தலாலா - நின்றன்
ஆசை முகம் தோன்றுதடா நந்தலாலா"
"பாட்டீ நான் ஓடறேன் பிடிப்பையோ?"
"சமத்தாட்டம் ஓடு! பிடிக்கிறேன்."
குழந்தை குதித்துக்கொண்டு வாசல் பக்கம் ஓடுகிறது. வெளியில் இருக்கும் இருள்
திரையை நோ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 29 |
ஊழியன், 09-11-1934 30
67. பித்துக்குளி
மாவேலிக் கரை என்றால் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம்
குவிகின்றன. இயற்கை அன்னைதன் எழில்களை எல்லாம் அந்த மேற்கு மலை
மறைவிலே கொட்டிக் குதூகலித்து விளையாடுகிறாள். வாலிபனுக்குக் காதல்
தோன்றும். கவிஞனுக்குக் கனவு தோன்றும். அறிவில் முதியவனுக்குச் சாந்தி
தோன்றும் அந்த இடத்திலே.
சுற்ற... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 30 |
31
இருளிலே படகு வரும் சப்தம்.
மார்த்தாண்டவர்மன் ஒரு மூலையில் மணையில் உட்கார்ந்திருக்கிறான்.
இருட்டு.
அவள் வந்தாள். தீபத்தை ஏற்றினாள்.
மூலையிலிருந்த கரியடுப்பில் பாலைக் காய்ச்சினாள்.
அதைக் கையில் எடுத்துக்கொண்டு அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
மார்த்தாண்ட வர்மன் நினைவற்றவன்போல் இருந்தான்.
பால் கிண்ணம் அவனது வாயண்டை... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 31 |
என்ன நம்பிக்கை அவள் கடைக்கண்ணில் சுடர்விட்ட இரண்டு துளிகள் எதை
நினைத்தனவோ 32
ஆமா... சகுந்தலா... என்னுடைய... சகுந்தலா... அவள் என்னுடையவள்... அவள்
கழுத்து, அந்தப் பிளவுபட்ட கேசம் எவ்வளவு அழகாக... இப்படியே என் பக்கத்தில்...
எப்பொழுதுமே... ஆமாம். எப்பொழுதுமே... அதை அவள் கழுத்தில் அப்படியே
சுற்றினால்...
அவனது கரங்கள் இருகூ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 32 |
அன்று இரவு அவள் நீங்கவில்லை
உயிர் இருந்தால்தானே
மணிக்கொடி, 30-09-1934 33
68. பொய்க் குதிரை
"வாழ்க்கையே பிடிப்பற்றது; வாழ்வாவது மாயம்!" என்றெல்லாம் நினைவு
ஓடிக்கொண்டிருந்தது விசுவத்திற்கு; ஏனென்றால், அன்று ஆபீஸில் அவனுக்கும்
சம்பளம் போடவில்லை. வீட்டிலே சாமான் கிடையாது; வாடகைக்காரன்
நெருக்குகிறான். மனைவி கமலத்தின் துயர... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 33 |
34
வழி நடை தெரியவில்லை; திருவல்லிக்கேணிவரை உற்சாகமாக நடக்கிறான்.
கமலா, பாவம் தனியாகக் கொட்டுகொட்டென்று உட்கார்ந்திருப்பாள். நவராத்திரிக்
கொலு வைக்கக் கூடாத... என்ன ஜன்மம்... என்ன பிழைப்பு... அவளுக்கு அந்தச் சிறு
சந்தோஷத்தையாவது கொடுக்க முடியாத பேடி...
மெளண்ட் ரோட்டைத் தாண்டி திருவல்லிக்கேணிப் பக்கம் நெருங்கிவிட்டான்.
வ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 34 |
என்ன, சொல் பார்ப்போம் "
என்றுகொண்டே கொடிப்பக்கம் திரும்பிச் சட்டையைக் கழற்றினான் 35
கமலத்தின் முகத்தில் ஒரு சமாதானம், மகிழ்ச்சி பொங்கியது.
விசுவம் அதைக் கவனிக்கவில்லை. அவசர அவசரமாக, "கமலா, இன்று சம்பளம்
போடவில்லை. அதற்கென்ன நாளை போடுவார்கள். நான் உனக்கு என்ன
கொண்டுவந்திருக்கிறேன், தெரியுமா?" என்றான். குரல், அவன் மனத்தி... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 35 |
" என்று அவன் அதரத்தில்
முத்தமிட்டாள் முத்தம் அந்த மலர்ந்த முல்லையின் ஸ்பரிசம் போலும், கனவின் நிலவு
போலும் மென்மையாக இருந்தது 36
விசுவம் அவளை அணைத்து, முகத்திலும் அதரத்திலும் முத்தமிட்டான். சோர்ந்தவள்
போல் அவன் தோள்களில் சாய்ந்த அவள் மெதுவாகக் கையை நீக்கி விலக்கிவிட்டு,
"சாயங்காலம் உங்கள் நண்பர் அம்பியும், லட்சுமியும் ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 36 |
" என்று அவளை மடிமீதிருத்திக் கொண்டு, "கண்ணாடியில் பார் "
என்று சிரித்தான் 37
"போங்கள், உடை கசங்கிவிட்டால்?..." என்று எழுந்திருக்க முயன்றாள். அவள்
எவ்வளவு விடுவித்துக்கொள்ள முயன்றும் அவன் அவள் அதரங்களை முத்தமிட்டு
விட்டான்.
"பாருங்கோ! கசங்கிவிட்டதே!" என்றாள் கமலம்.
இருவருக்கும் கண்ணாடியில் சிறு பாகத்தைத் தவிர மற்றதெல்லா... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 37 |
"வாருங்கோ " என்று சிரித்துக்கொண்டு கமலத்தின் கையைப் பிடித்து
இழுத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றான் 38
"அம்பி எங்கே?" என்றான் விசுவம்.
"அவர் மச்சில்லே இருக்கார்!" என்று கூறிவிட்டு உள்ளே இழுத்துச் சென்றுவிட்டாள்
லட்சுமி.
"அதார் விசுவமா? வாடா! ஏண்டா இவ்வளவு நேரம்? யூஸ்லெஸ் பெல்லோ! அப்படி
என்ன ஆபீஸ் கேடு? வா உயர!" என்று கத... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 38 |
அதற்குள் கீழேயிருந்து வீணையின் தொனி கேட்க ஆரம்பித்தது பிறகு கமலத்தின்
குரல் - 'சாந்தமுலேக' என்ற தியாகராஜ கீர்த்தனம் 39
"அடே, உன் 'ஒய்ப்' (மனைவி) பாடுகிறாள்டா! கேளு!" என்று கத்திக்கொண்டு
ஆர்ப்பாட்டம் செய்தான் அம்பி.
திடீரென்று பாட்டு பாதியில் நின்றது. "அம்மாமி கொஞ்சம் ஜலம்" என்ற தனது
மனைவியின் குரல் விசுவத்தின் காதில் ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 39 |
ஆனால், களைப்பைக் காண்பிக்கவும் முடியவில்லை மரியாதைக்
குறைவல்லவா 40
அம்பி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "நேரமாகிவிட்டதே! எனக்காக இல்லாவிட்டாலும்
உன் நண்பர்களுக்காகவாவது கொஞ்சம் போஜனத்தைப் பற்றிக் கிருபை செய்யக்
கூடாதா?" என்றான்.
உடனே மங்களம் பாடி முடித்துவிட்டு, மற்றப் பெண்கள் எல்லாரும் ஏதேதோ
சாக்குகளுடன் தாம்பூலம் வாங்... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 40 |
அவள் கைகள் நடுங்கின இருவர் கண்களும் கலந்தன கை நடுக்கத்தில் 41
விழுந்த இரண்டு துளிகளுடன் ஒரு கண்ணீர்த் துளியும் கலந்தது. கமலம் ஜாடையாகச்
சமாளித்துக் கொண்டாள். மற்றவர்கள் கவனிக்கவில்லை. எப்படி முடியும்?
இதற்குள் லட்சுமி பப்படத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்.
"என்னடா விசுவம். சுத்த அசடனாக இருக்கிறாய்! அவளுக்கு ஏதாவது டோ லக்... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 41 |
"பின் என்னவோ துக்கம் "
"இன்றைக்கு மனசே ஒரு நெலை கொள்ளல்லெ " 42
"சீ! நான் செய்தது முட்டாள்தனம்! கமலா!" என்று அவள் அதரத்தில் முத்தமிட்டான்.
கண்ணீரின் ருசி உப்பு மட்டும் கரிக்கவில்லை.
'ஆறு கதைகள்', தொகுப்பு -1941
69. 'பூசனிக்காய்' அம்பி
எந்தப் பெற்றோராவது தன் குழந்தைக்கு இப்பெயரைத் துணிந்து வைத்திருப்பார்கள்
என்று நான் கூ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 42 |
மாவடியா பிள்ளை வளைவு கட்டிட வேலைக்குப் பெயர் போனதல்ல
'பூசனிக்காய்' அம்பியைத் தவிர அந்த வளைவில் ஒரு அபூர்வமும் கிடையாது
வருங்காலத்தில் அதிக நம்பிக்கை வைக்கும் சூதாடிக்குக் கூட அம்பியை விட வேறு 43
ஒன்றைப் புதிதாகப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை வராது. அந்த வளைவின் நடு
மத்தியில் ஒரு கிணறு. அங்கு பகலில் வண்ணானைக் கூடத் ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 43 |
கடைசியாக, பெருத்த கூக்குரலுடன் அவர்கள்
வளைவைவிட்டு ஓடுவதுதான் 'பூசனிக்காய்' அம்பியின் வெற்றி இது எப்பொழுதும்
தவறாது நடக்கும் இயற்கை
பாரதியார், 'தனிமை கண்டதுண்டு அதிலே சாரமிருக்குதம்மா' என்று பாடிவிட்டுப் 44
போனார். 'பூசனிக்காய்' அம்பியும் அந்தச் சாரத்தை மிகவும் அனுபவித்திருப்பான்
போல் தெரிகிறது. அளவிற்கு மிஞ்சினால் அ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 44 |
இலக்கியத்தில் இருக்கும் காலி கொஞ்சம் பெரியது
என்றும், தமிழ்நாடு அதனால் கண்ணுறங்காமல் வாடிக்கொண்டிருக்கிறது என்றும்
கேள்விப்பட்ட நான், ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தில் இந்தக் காலியை நிரப்பும்
வேலைக்குத் தத்தம் செய்திருந்தேன் வேலை பெரிய வேலையல்லவா ரஷ்யர்கள்
போடுகிற ஐந்து வருஷ திட்டங்களைப் பற்றி எல்லாம் படித்த நானும் ஒரு... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 45 |
எனது அறைக்குச் சென்று பார்த்தேன்
பழக்குலை மாயமாக மறைந்துவிட்டது என்று கண்டுகொண்டேன் 'பூசனிக்காய்' 46
வேலைதான். அவனைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் என் மனம் கொதித்தது.
அவனைப் பார்த்தவுடன் துப்பறியும் நாவலில் கடைசி அத்தியாயத்தில் நடக்கிறபடி
'அடே, பூசனிக்காய், வாழைப்பழக்குலைத் திருட்டிற்காக உன்னைக் கைது
செய்கிறேன்' என்று... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 46 |
உன்னை ஜெயிலுக்குப் பிடித்துப்
போகப் போகிறேன்" என்றேன்
சொல்லி முடிப்பதற்கு முன் ஆசாமி கம்பி நீட்டிவிட்டான் அப்படிச் செய்வான் என்று 47
எனக்குத் தெரியும். இப்பொழுது இந்தப் பக்கமே வருவதில்லை. யாருக்காவது அவன்
இருக்குமிடம் தெரிந்தால், அவனிடம் விளையாட்டிற்குச் சொன்னேன் என்று
சொல்லுங்கள். இப்பொழுது அவன் இல்லாது மாவடியா பிள்... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 47 |
கார்ல் மார்க்ஸ் பாராயணமும் கொஞ்சம்
உண்டு சுருங்கச் சொல்லுகிறேனே - வெகு தீவிரம் 48
குசலப் பிரச்னங்களுடன் பரஸ்பர போலீஸ் காவல், சிறையில் கசையடி,
இடைமறிக்கப்பட்ட கடிதங்கள், சமீபத்தில் வெளியான விக்டர் கொலான்ஸின்
தீவிரவாத கிரந்தம் - சுங்க அதிகாரிகள் கண்ணில் பிஸ்கோத்து டின் மாதிரி
இந்தியாவிற்குள் நுழைந்தது - எல்லாம் சேர்த்து... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 48 |
" 49
"அவரைப் பார்க்க உங்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்குமே? பாவிப்பயல்கள்
என்னை மாத்திப் போட்டானே!" என்று பரிதவித்தார் புரட்சி மோகன லாகிரியில்
சிக்கிய என் நண்பர்.
"மூவ்மெண்ட் டயம்ல என்ன செய்தார் தெரியுமா... செப்டம்பர் நடுராத்திரி ரூம்ல
டார்ச்கூட இல்லை. வெளியிலே சடபுடவென்று கதவு தட்ற சப்தம் கேட்டது - என்ன
செய்தார... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 49 |
உப்பங்காற்று மட்டிலும் வீசும் சமுத்திரக் கரைக்குப் போகும் பொழுதுதான்
விஷமத்தனமான என் கசப்பு என்னைவிட்டு அகன்றது
அப்பொழுது அங்கு வந்தான் ஸ்ரீ பாலு; மெஸர்ஸ் பீபரிவாலா ஹாக்கும் சந்த் அண்ட்
சன்ஸ் கம்பெனியின் பல ஜோலி குமாஸ்தா கம்பெனியில் காப்பிக் கொட்டை
கேஸ்களுக்கு ஆணியடித்து விலாசம் ஒட்டுவது முதல் வரவு செலவு கணக்கு
தயாரி... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 50 |
" என்று ஒரு மூச்சு பேசி முடித்தான்
நான் எப்பொழுது ஓயப் போகிறதோ என்று கேட்டுக் கொண்டே இருந்தேன் 51
"ஏன் சும்மா ஒரு மாதிரி இருக்கேள்? கொஞ்சம் வெத்திலெயேப் போடுங்களேன்" என்று
விதேசி டப்பி நாசூக் வெற்றிலைச் செல்லத்தை என்னிடம் நீட்டிவிட்டு, "நீங்கள் என்ன
நினைக்கிறேள் - எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சால் உடம்புக்கு நல்லதா சார்?"... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 51 |
பார்த்திருக்கையா" என்றேன் 52
"புரட்சிக் கைதி! அவரையா... நான் எப்படிப் பார்த்திருக்க முடியும்?"
"இல்லெ பாக்கணும்னு ஆசை இருக்கா?"
"ஆசையா! மனசு அப்படியே துடிதுடிக்கிறது. ஆமாம்; புரட்சிக்காரரா? எப்படி
இருப்பார்? ரொம்பத் தீவிரமாக இருப்பாரோ?"
"பாக்கணும்ன்னா கூட்டிண்டு போறேன்" என்று புதிய சிஷ்யன் சேர்த்துக்கொடுக்கும்
சேவையில்... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 52 |
வேனிற்கால ஆரம்பமாகையால் இரண்டாவது அறுவடை சமீபித்துவிட்டது பயிர்கள்
பொன்னிறம் போர்த்து, காற்றில் அலை போல் நிமிர்ந்து விழுந்து, ஆகாயத்தில்
நடக்கும் இந்திர ஜாலங்களுக்குத் தகுந்த, அசைந்தாடும் பொற்பீடமாக விளங்கியது 53
அகன்ற மார்பில் யக்ஞோபவீதம் போல் ஆற்றில் நீர் பெயருக்கு மட்டிலும்
ஓடிக்கொண்டிருந்தது. நீர், ஸ்படிகம்போல் கள... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 53 |
End of preview. Expand in Data Studio
Tamil சிறுகதை Dataset by புதுமைப்பித்தன்
Description
This dataset contains Tamil சிறுகதை texts by புதுமைப்பித்தன், processed for language model pretraining.
Contents
- 185 text passages
- Author: புதுமைப்பித்தன்
- Genre: சிறுகதை
- Total characters: 266401
Usage
This dataset is suitable for language model pretraining tasks.
from datasets import load_dataset
dataset = load_dataset('Naveen934/tamil_data_puthumaippittan_short_stories_na')
- Downloads last month
- 8