Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
text
stringlengths
169
2.13k
chunk_id
int64
1
154
author
stringclasses
1 value
book
stringclasses
1 value
தோழர் காந்தி - மகாத்மாவின் சோசலிச உரையாடல்தோழர் காந்தி - மகாத்மாவின் சோசலிச உரையாடல்முன்னீடுகாந்தியின் நடைமுறைகாந்தியின் சோசலிசம் - தோற்றுவாய்பலவகை சோசலிசம்எது பாதைசர்வோதயாகாந்தியும் அரசும்காந்தியின் தொழிலாளிகாந்தி - லெனின்காந்தி - மாவோசோசலிச உரையாடல்பின்னூட்டம்WHO’s WHOஆதார நூல்கள்ஆசிரியரின் பிற நூல்கள்சிறு வெளியீடுகள...
1
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
This Book was produced using LaTeX + Pandoc முன்னீடு காந்தியடிகள் அவரது வாழ்நாட்களிலேயே மகாத்மாவாக பார்க்கப்பட்டவர். எந்த அளவிற்கு அவர் கொண்டாடப்பட்டாரோ-கொண்டாடப்படுகிறாரோ அந்த அளவிற்கு கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகி வந்தவர் - வருபவர். அனைத்து தரப்பினரின் விமர்சன பகுப்பாய்விற்கு அவர் உள்ளாக்கப்பட...
2
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
ின் மொழியில் அவரது நடைமுறை வாழ்வின் அடியொற்றிப் பார்த்தால் அதை விளங்கிக்கொள்வது கடினமான ஒன்றாக இருக்காது. ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினமானதாக இருக்கலாம். ஏனெனில் அது சோசலிசம் பேசக்கூடியவர் செய்யவேண்டிய நடைமுறையிலிருந்து - தன்னை மாற்றி தகவமைத்துக் கொள்வதிலிருந்து (transform) துவங்குகிறது. எனவே அந்த வகையில் அது கடினமான ...
3
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
ம் என்கிற இறுதிப்பகுதி தொகுப்பு என்ற அளவிலும், பிற்சேர்க்கை என்ற அளவிலும் அமைந்துள்ளதை படிக்கும்போது உணரலாம். இடையில் உள்ள அத்தியாயங்கள் காந்தியின் அரசு குறித்த பார்வை, சோசலிச உரையாடல்களை பதிவிடுகின்றன. காந்தி தொழிலாளர்களின் பாத்திரமாக எதை விரும்பினார் என்பது தனி அத்தியாயமாக வைக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் முன்னோடிகள் அ...
4
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
in the best sense of the term” அதே நேரத்தில் அவர் போனிக்ஸ் ஆஸ்ரம டால்ஸ்டாய் பண்ணை வாழ்க்கை குறித்து சோசலிஸ்ட்- கம்யூனிஸ்ட் வாழ்க்கை என்றெல்லாம் அழைத்துக்கொள்ளவில்லை. தனிநபர்- சமூக உறவுகள் குறித்து அவர் மிக நன்றாக அறிந்தவராக இருந்தார். அதே நேரத்தில் தனிநபரை அரசாங்கம் ஒடுக்கமுடியும் - அதை ஏற்கமுடியாது என்கிற உணர்வுகொண்ட...
5
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
சமூகத்தில் நிலவும் வர்க்கமோதல்களை- வேறுபட்ட வர்க்க நலன்களை- வர்க்கப்போராட்டத்தின் மூலம் தொழிலாளிகளுக்கு சாதகமாக தீர்க்க முயற்சித்தனர். முரண்பாடு தீர்க்கப்பட்டு இழப்பதற்கு ஏதுமற்றவர்களால் அமைக்கப்படும் சோசலிச சமூகம் தவிர்க்க முடியாதென பேசினர். தொழில் சமூகம்- வர்க்கமோதல்கள்- புரட்சிகர வன்முறை ஆயுதப்போராட்டம் மூலம் மாற்ற...
6
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
கல்யாணங்களும் அரண்மனை குடும்ப நிகழ்வுகள் போலவே செலவைக்கண்டன. வீட்டு பொருளாதார சூழல் சோசலிச சித்தாந்தத்தை அவருக்கு கொண்டுவந்து சேர்ப்பனவாக இருந்திருக்கமுடியாது. ரொமெயின் ரோலந்த் எழுதும்பொது காந்தியின் தந்தை சொத்து பற்றி அலட்டிக்கொள்ளதவராக இருந்தவர்- வீட்டிற்கென பெரிதாக அவர் விட்டுச் செல்லவில்லை என்பதைக் குறிப்பிடுகிறார...
7
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
நலன்கள் என்பதும் தனிநபர் நலன்கள் என்பதும் பொருந்திப்போக வேண்டியவையே என்கிற எண்ணத்தை வடிவமைத்ததாக சொல்லலாம். இந்திய கிராமப்புற மக்களின் எளிய வாழ்வு குறித்த தேர்ந்த பார்வை காந்தியிடம் இருந்ததை தென்னாப்பிரிக்காவில் அவருடன் வாழ்ந்து பணியாற்றிய போலக் குறிப்பிட்டார். உயர்ந்த சாதி என்கிற மனப்பாங்கு இல்லாத இன்னொரு இயல்பும் சி...
8
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
உணவு இருந்தால் , ஏழைகளுக்கு இறைச்சி உணவை வாங்க முடியாத பொருளாதார சூழல் இருந்ததை காந்தி சுட்டிக்காட்டியிருந்தார். லண்டன் வாழ்க்கையில் அவரிடம் ஏற்பட்ட முக்கிய மாற்றம் இனி ஆடம்பரவாழ்க்கையில் செல்லக்கூடாது என்பதே. தன் செலவுகளை குறைக்க கற்றுக்கொண்டார். சில மாணவர்கள் சேரிப்பகுதியிலிருந்து வந்தார்கள்- அவர்களின் வாழ்க்கை எளிமை...
9
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
குறைத்துக்கொள்ள தெரிந்துகொள்ளவேண்டும். சலுகைகளை கோராததுடன் அனுபவிக்க விழையாத மனம் உடையவர்களாகவும் இருக்கவேண்டும். காந்தியிடம் கையகப்படுத்தாமை என்கிற குணம் ஆழத்தோய்ந்திருந்தது. “I have to reduce myself to the level of poorest of poor- non acquisitiveness or renunciation of privileges if possesed are the essence of a so...
10
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் கண்ணியமான வாழ்விற்கு செய்யவேண்டியவை குறித்த செயலில் இறங்கினார் காந்தி. லூயி பிஷர் எழுதினார் ‘That bitter night at Maritzburg the germ of social protest was born in Gandhi’. ஆமாம் அது இருபது ஆண்டுகள் நீடித்தது. அவரின் போராட்டம் ‘சமத்துவம், சகோதரத்துவம், ஃபெலோசிப்’ என்பதற்கான அடையாளங்...
11
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
அப்படியே சொத்திருந்தாலும் அது சமூகத்திற்குரியது- அதன் டிரஸ்டிதான் நாம் என்கிற மனோபாவம் வளர்ந்தால் ஆரோக்கியமான சமதையான மனிதர்களின் சமூக உருவாக்கம் ஏற்படும் என்கிற நம்பிக்கை அவரிடத்தில் திடமாகத் துவங்கியது. வாழ்வின் ஆரம்பகாலத்தில் மூன்று அம்சங்களால் காந்தி ஆகர்சிக்கப்பட்டார். பெரும் வியாபாரி ராய்சந்த்பாய் அவர்களின் வாழ்...
12
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
மற்றொன்று உடல் உழைப்பின் மேன்மை. காந்தியிடம் idea of cooperative labour என்ற தாக்கத்தை இப்புத்தகம் உருவாக்கியது என்பதை வின்சென்ட் ஷீன் கூற்றில் நாம் பார்க்கலாம். ஒருவகை ‘அக்ரேரியன் கம்யூனிசம்’- விவசாய கம்யூனிசம் என்றார் ஜாப்ரே ஆஷ். காந்திக்கு இக்கருத்துக்கள் முன்பே தெரிந்தவையாக இருந்தன. ரஸ்கின் அதை திடப்படுத்தினார் என ...
13
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
நடத்தப்பட்டார். டிக்கிற்கு பிறகு வந்த ஷெல்சின் ஆனாலும் போலக் ஆனாலும் அவரின் குடும்ப உறுப்பினர்களாக இருந்தனர். போலக்கின் திருமணத்தில் காந்திக்கு முக்கிய பங்கிருந்தது. அத்தம்பதியினருக்கு பிறந்த குழந்தையை சீராட்டுவதிலும் காந்தி கவனம் செலுத்தினார். காந்தி மேம்பட்ட புரிதல் பாசம் கொண்ட சகோதரர் என திருமதி போலக் எழுதினார். பெர...
14
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
அவர்களே பழகிக்கொண்டனர். காந்தியும் பெண்களுக்கான சட்டை தைப்பதில் பழகியிருந்தார். உழைப்பு அங்கு எங்களுக்கு டானிக்- புத்துணர்ச்சி என்று நினவு கூர்ந்தார் காந்தி. ஒரே சமையலில் ஒரே வகைப்பட்ட உணவை பரிமாறும் கூடமாகவும் டால்ஸ்டாய் பண்ணை விளங்கியது. எளிய ஏழை மக்கள் வாழ்வைப்போல் வாழப்பழகுதல் என்பது பயிற்சியானது. ரம்ஜான் மாதங்களி...
15
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
of high level debate among erudite politicians; it was a matter of self less service in defence of people’s interests and identifying oneself with everything that is of the people” கோகலே அறிவுறுத்திய இக்காலத்தை காந்தி இந்திய பொதுவாழ்க்கைக்கான தனது பயிற்சி பழகுநர் நாட்களாக மாற்றிக்கொண்டார். போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை ப...
16
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
ஏழை எளிய உழைப்பாளர்களை உணர்ந்து அதைப்போல் வாழ முயற்சித்த ஒருவரின் உள்ளத்திலிருந்துதான் இவ்வுரை வரமுடியும். ஆனால் அவர் பாதியில் நிறுத்தப்பட்டார். அவரது உரை பலருக்கு அசெளகரியங்களை உருவாக்கியது. உயர் அதிகாரதட்டும் பெரும் சமஸ்தான பணக்காரர்களும் இருந்த அவையில் எழுந்த சோசலிசக் குரல் என இதை நாம் புரிந்துகொள்ளலாம். சென்னையில் ...
17
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
விவசாயிகளை விடுவிக்கவேண்டியதாயிற்று. பீகாரில் அவர் பார்த்த கிராமங்கள் புழுதிபடிந்து அழுக்காக இருந்தன. கிணற்றை சுற்றி சேறும் சகதியும் இருந்தது. தோல் வியாதியால் பலர் பீடிக்கப்பட்டிருந்தனர். கஸ்தூர்பாய் துணையுடன் அங்குள்ள பெண்கள் நிலையையும் காந்தி அறிந்தார். ஒற்றை சேலையுடன் இரு தமக்கைகள் இருக்கும் நிலைக்கூட உணரப்பட்டது. ம...
18
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
917ல் நடந்த சோவியத் அக்டோபர் புரட்சி இந்தியாவிலும் பெரும் தாக்கங்களை உருவாக்கியது. AITUC பிறப்பதற்கு முன்பாக மதராசில் பெரம்பூர் தொழிலாளர் மத்தியில் பேசிய திலகர் டிசம்பர் 23, 1919 இனி வரும்காலத்தில் தொழிலாளர் அமைப்புகள் வளரும்- ஆட்சிக்கு கூட தொழிலாளர் வருவர் எனப் பேசி சென்றார். நேரு உட்பட பலர் சோவியத் பெருமிதங்களில் சிந...
19
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
க காந்தியும் செயல்படலானார். ரெளலட் சட்டம்- ஜாலியன்வாலாபாக் படுகொலை, கிலாபத் நேரத்தில் காந்தி இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுத்தார். சாத்தான் ஆட்சிமுறை என்கிற விமர்சனம் அவரிடமிருந்தது. ஆகஸ்ட் 1 1920ல் அவர் வைஸ்ராய் செம்ஸ்போர்டிற்கு எழுதிய கடிதத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் குறித்து ‘cruelty and inhumanity almost unparell...
20
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
ஜாம்பவான்கள் இருந்தபோதும் ‘மகாத்மா காந்திக்கு ஜே’ போன்ற முழக்கங்களை காணத்துவங்கியது. அவர் மக்களுடன் - அவர்களின் ஒருவராக கரையத்துவங்கியதை காட்சிகள் காட்டின. தாகூர் மனதின் சித்திரமாக ரொமெயின் ரோலந்த் இதை சரியாகத் தருகிறார். “இல்லாதவர்களின் இருப்பிடத்தில் அவர் இருந்தார். அவர்களைப் போல் உடையணிந்தார். அவர்களின் மொழியில் உர...
21
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
ை நோக்கி அழைத்து சென்றார். காங்கிரசை மக்கள்மயப்படுத்துவது - அமைப்பிற்கும் மக்களுக்கும் நெருக்கத்தை உருவாக்குவது என்பதை அவர் கடமையாக்கிக்கொண்டார்- காங்கிரஸ் அமைப்பை ‘class organ to mass organ’ என்றாக்கியதில் அவருக்கு அளப்பரிய பங்கிருந்தது. காந்தியின் பிரிட்டிஷ் நண்பர் ஹொரேஸ் அலெக்சாண்டர் தனது பதிவில் இதை சரியாகச் சொல்கி...
22
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
சொல்லிக்கொண்டிருந்தார். அப்போதிருந்த காங்கிரஸ் தலைவர்களுள் நேரு, நேதாஜி ஆகியவர்களை நீக்கிப்பார்த்தால் இடதுசாரிகளுடன் தோழமையுடன் விவாதிக்கக் கூடியவராக காந்தி மட்டுமே இருந்தார் என்பதை பார்க்கமுடியும். மீரத் சதி வழக்கு, லாகூர் சதிவழக்கு என்பதில் எல்லாம் கூட குண்டுவீசுவது தவறு என்கிற பார்வையை விட்டுவிடாமல் அத்தோழர்கள்பாற் ...
23
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
வேறு. தினம் ரூ 700 பெறுகிறீர்கள். இங்கிலாந்தின் பிரதமர் தினம் ரூ 180 வீதம் மாதம் ரூ 5400 பெறுகிறார்.. இவ்வளவு சம்பளம் தங்களுக்கு தேவைப்படாது. ஆனால் இந்த ‘சிஸ்டம்’ அப்படித்தருகிறது. இதை ஒழிக்கவேண்டும்”என்று அவர் வைஸ்ராய்க்கு எழுதினார். காந்தி ஏன் உப்பு என்பதை இவ்வளவு பெரிய விஷயமாக பேசுகிறார் என்பது புதிராக பலருக்கு தெரி...
24
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
வந்தது. வரிவிதிப்பில் பெறும் வருவாய்க்கு ஏற்ப, அரசாங்க ஊழியர்களின் வருவாயை குறைத்தல் உள்ளிட்டவையும் பேசப்பட்டிருந்தது. காந்தியடிகள் பேசும்போது சுயராஜ்யம் பெற்றபின் என்ன செய்யவிருக்கிறோம் என்பதை உலகோர் இத்தீர்மானங்கள் மூலம் அறியமுடியும் என்றார். கராச்சி தீர்மானங்கள் அசமத்துவம் நீக்கும் நோக்கோடு உழைப்பவர்க்கான நியாயமான ...
25
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
பணம்படைத்தவர், நிலப்பிரபுக்கள், ஜமீன்கள் வாழ்க்கையின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவருகிறார்கள். இதுகாறும் ஒடுக்கப்பட்டுள்ள, புறக்கணிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேசிய அரசாங்கம் செயல்படவேண்டும். இதற்கு மேற்சொன்னவர்களின் உதவியும் தேவைப்படும். பிரிட்டிஷாருக்கும் அரசு வேலைகளுக்கும் சேவகம் செய்து சிலர் நில...
26
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
பொதுவாக ஏற்கப்பட்டிருந்தது. இங்கோ சமத்துவ சமுதாயம் என்பது பொருளாதாரக் காரணியை மட்டும் கொண்டில்லாமல் ஏற்றத்தாழ்வு படிநிலை தன்மைகொண்ட சாதி முறையிலிருந்து அடிநிலையில் இருப்போரை சமூகரீதியாக உயர்த்தும் பெரும் பிரச்னையாகவும் இருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசத்தில் அடிமையானவன் சரியானவற்றைக் கூட செயலாற்ற இயலாதவனாக இருக்...
27
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
தும் இருக்கக்கூடாது என்பதையும் சிறை அதிகாரிகளிடம் உறுதிமொழியாகப் பெற்றார். இந்து தலைவர்கள் பம்பாய் மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றியதையும் நாம் பார்க்கமுடிகிறது. “This conference resolves that henceforth amongst Hindus, no one shall be regarded as an untouchable by reason of his birth, and those who have been s...
28
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
என்கிற அவரது அறிவிப்பை இதில் நாம் பார்க்கமுடிகிறது. அதேநேரத்தில் அவர்களின் வர்க்கப்போராட்டம், தனியார் சொத்தை பறித்தல் போன்றவை காங்கிரஸ் இயக்கத்தில் வலுப்பெற்றால் தன்னால் காங்கிரசில் தொடரமுடியாது என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். காங்கிரஸ் சோசலிஸ்ட்களிடம் விவாதித்தபோது இந்தியத் தன்மைக்கேற்ற நடைமுறை சாத்தியம்கொண்ட திட்...
29
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
மாட்டேன்” அவர் சோசலிஸ்ட் என்றே அழைத்துக்கொள்வதையும் அந்த வார்த்தை மீது ஈர்ப்பு இருப்பதையும் வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். ஆனால் சோசலிஸ்ட்கள் பேசுகின்ற முறையில் அதை பரப்புரை செய்வதில்லை என அவர் சொல்வதை மேற்கண்ட பத்தி நமக்கு விளங்கச் செய்யும். ஒருமுறை பம்பாயில் தொழிலாளர் கூட்டம் பேசும்போது கம்யூனிசம் பற்றிப் பலர் பேசுகி...
30
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
முன்வைத்தார். ஜமீன்தார்கள் செய்திடும் தீங்கை விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நின்று சரி செய்யமுடியும். வேலை செய்ய அனைவரும் மறுத்துவிட்டால் ஜமீன்தார் என்ன செய்யமுடியும். உழைப்பாளரின் ஒற்றுமையால் முதலாளிகளிடமும்- ஜமின்களிடமும் மனமாற்றத்தைக் கொணரமுடியும் என்கிற நம்பிக்கையை அவர் எதன் பொருட்டும் கைவிடாமல் இருந்தார். “If th...
31
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
படித்தார் என்கிற பதிவை ஒரிஸ்ஸா உட்கல் பல்கலை பேராசிரியர் பேணுதார் பிரதான் தருகிறார். மார்க்சின் காபிடல் நூலை வாசித்துவிட்டு என்னை வசிகரிக்கவில்லை என்ற கருத்தை மட்டுமில்லாது I would have written it better என்றும் சொல்கிறார். அப்போது அவருக்கு வயது 74 என்பதையும் சேர்த்து நாம் பார்க்க வேண்டும். எதையும் எழுச்சிகர மனநிலையில...
32
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
சிலர் செல்வத்தில் புரள்வதும் கோடிக்கணக்கானவர் உணவிற்கு ஏங்குவதுமான சமூகத்தில் ராமராஜ்யம் எழாது. அவரவர் ஜீரண சக்திக்கு உணவு என்பது போல் தேவைக்கேற்றவை கிடைக்க செய்தல் என்பதான சமத்துவ விநியோகம்”இது ஏறக்குறைய மார்க்சிய புரிதலான To each according to his need என்பதுடன் ஒத்துப்போவதைப் பார்க்கலாம். எவருக்கும் சரிவிகித உணவு, உ...
33
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
எறிந்துவிடுவதாலேயே லட்சக்கணக்கானவர் அவருக்கு இணையான வாழ்க்கையை பெற்றுவிடமுடியாது. உண்மையான நடத்தைகள் மூலம் தான் உண்மையை அடையமுடியும். அகிம்சை வழியை மேற்கொள்ளும் தூய்மையான இதயம் கொண்ட சோசலிஸ்ட்களால் மட்டுமே இந்தியாவிலும் ஏன் உலகத்திலும் கூட சோசலிச ராஜ்யத்தை கொணரமுடியும் என்கிற தன் நம்பிக்கையை கனவை காந்தி வெளியிட்டார். ஹ...
34
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
முறைமைக்கு ஏற்றதாக இருக்கமுடியாது என காந்தி நினைத்தார். பேணுதார் பிரதான் தன் ஆய்வில் காந்தியை அவர் அகிம்சை சார் புரட்சியாளர் என்பதற்கு மேலாக அவரை அகிம்சை சார்ந்த கம்யூனிஸ்ட் என்றே புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார். காந்தியின் சோசலிசம் - தோற்றுவாய் மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கை வழிப்பட்ட சோசலிசம் பொதுவாக விஞ்ஞா...
35
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
களையே வைத்திருந்தாலும் விஞ்ஞான சோசலிசம் மட்டுமே பாதை என்கிற பார்வை அவரிடம் தொற்றவில்லை. மத அடிப்படையிலான நன்னெறிகள் என்பதை அடித்தளமாக கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைக்கும் அரசியல் சமூக செயல்பாடுகள் என்பதை காந்தி அமைத்துக்கொண்டார். வைஷ்ணவ சிந்தனைகள், ஜைன புத்தமத சிந்தனைகள், பகவத்கீதை, உபநிடதங்கள், மலைப்பிரசங்கம்,...
36
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
இல்லா தவனாய்க் காம க்ரோதம் களைந்தவனாய், தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத் தரிசிப் பவரின் சந்ததிகள் சுபமடைவார்கள்; எழுபத் தோராம் தலைமுறை வரையில் சுகமுறுவர்; அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும் அலைகடல் நீந்திக் கரைசேர்வார். இதற்கு தனியாக பொருளுரைக்க தேவையில்லை. அதில் பேசப்பட்டுள்ள உயர் குணங்களை அடைய காந்தியடிகள் முயற்சித்த...
37
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
நீங்கிடின் வன்முறை நாட்டம் இராது. அகிம்சையும் உண்மையும் தொழிற்படும் என அவர் கருதினார். உண்மையை நெருங்குவதற்கான சிறந்த வழி அன்புதான் என்றார். உண்மை எனும் கடலில் நீந்தவேண்டும் என்றால் ஒருவர் தன்னை பூஜ்யமாக்கிக்கொள்ளவேண்டும். அன்பும் அகிம்சையும் வேறானவையல்ல - ஒன்றேதான் . அகிம்சையின்பாற்பட்ட சமுதாயத்தின் செல்திசை சமத்துவ ச...
38
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
னார். எவ்வளவு கீழான மனிதர் என்று பார்க்கப்படுபவருக்கும் வாழ்வுண்டு என்பதை உணர்த்தியவர் புத்தர். விதைப்பது எதுவோ அதையே அறுவடை செய்வோம் என புத்தர் சொல்லியதை அழகாக காந்தி எடுத்துச் சொன்னார். . காந்தியின் சர்வோதாய சிந்தனையில் அகிம்சை அனுசரிப்பில் புத்த சிந்தனையின் தாக்கத்திற்கு இடமுண்டு. ஏசுவின் மலைபிரசங்கம் அவரின் இதயத்தி...
39
ஆர். பட்டாபிராமன்
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
End of preview. Expand in Data Studio

Tamil தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல் Dataset by ஆர். பட்டாபிராமன்

Description

This dataset contains Tamil தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல் texts by ஆர். பட்டாபிராமன், processed for language model pretraining.

Contents

  • 154 text chunks
  • Author: ஆர். பட்டாபிராமன்
  • Genre: தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
  • Total chunks: 154

Usage

from datasets import load_dataset

dataset = load_dataset("Naveen934/tamil_data_na_thozhar_gandhi")```
Downloads last month
6