Datasets:
text stringlengths 1.4k 2.05k | chunk_id int64 1 2.29k | author stringclasses 1
value | genre stringclasses 1
value | token_count int64 510 512 |
|---|---|---|---|---|
பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வன்சங்ககால அளவுகள்முதல் பாகம் - புது வெள்ளம்புது வெள்ளம் - அத்தியாயம் 1புது வெள்ளம் - அத்தியாயம் 2புது வெள்ளம் - அத்தியாயம் 3புது வெள்ளம் - அத்தியாயம் 4புது வெள்ளம் - அத்தியாயம் 5புது வெள்ளம் - அத்தியாயம் 6புது வெள்ளம் - அத்தியாயம் 7புது வெள்ளம் - அத்தியாயம் 8புது வெள்ளம் - அத்தியாயம் 9... | 1 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
அத்தியாயம் 56புது வெள்ளம் - அத்தியாயம் 57இரண்டாம் பாகம் - சுழற்காற்றுசுழற்காற்று - அத்தியாயம் 1சுழற்காற்று - அத்தியாயம் 2சுழற்காற்று - அத்தியாயம் 3சுழற்காற்று - அத்தியாயம் 4சுழற்காற்று - அத்தியாயம் 5சுழற்காற்று - அத்தியாயம் 6சுழற்காற்று - அத்தியாயம் 7சுழற்காற்று - அத்தியாயம் 8சுழற்காற்று - அத்தியாயம் 9சுழற்காற்று - அத்... | 2 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
அத்தியாயம் 9கொலை வாள் - அத்தியாயம் 10கொலை வாள் - அத்தியாயம் 11கொலை வாள் - அத்தியாயம் 12கொலை வாள் - அத்தியாயம் 13கொலை வாள் - அத்தியாயம் 14கொலை வாள் - அத்தியாயம் 15கொலை வாள் - அத்தியாயம் 16கொலை வாள் - அத்தியாயம் 17கொலை வாள் - அத்தியாயம் 18கொலை வாள் - அத்தியாயம் 19கொலை வாள் - அத்தியாயம் 20கொலை வாள் - அத்தியாயம் 21கொலை வாள... | 3 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
20மணிமகுடம் - அத்தியாயம் 21மணிமகுடம் - அத்தியாயம் 22மணிமகுடம் - அத்தியாயம் 23மணிமகுடம் - அத்தியாயம் 24மணிமகுடம் - அத்தியாயம் 25மணிமகுடம் - அத்தியாயம் 26மணிமகுடம் - அத்தியாயம் 27மணிமகுடம் - அத்தியாயம் 28மணிமகுடம் - அத்தியாயம் 29மணிமகுடம் - அத்தியாயம் 30மணிமகுடம் - அத்தியாயம் 31மணிமகுடம் - அத்தியாயம் 32மணிமகுடம் - அத்தி... | 4 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
அத்தியாயம் 28தியாக சிகரம் - அத்தியாயம் 29தியாக சிகரம் - அத்தியாயம் 30தியாக சிகரம் - அத்தியாயம் 31தியாக சிகரம் - அத்தியாயம் 32தியாக சிகரம் - அத்தியாயம் 33தியாக சிகரம் - அத்தியாயம் 34தியாக சிகரம் - அத்தியாயம் 35தியாக சிகரம் - அத்தியாயம் 36தியாக சிகரம் - அத்தியாயம் 37தியாக சிகரம் - அத்தியாயம் 38தியாக சிகரம் - அத்தியாயம் ... | 5 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
79தியாக சிகரம் - அத்தியாயம் 80தியாக சிகரம் - அத்தியாயம் 81தியாக சிகரம் - அத்தியாயம் 82தியாக சிகரம் - அத்தியாயம் 83தியாக சிகரம் - அத்தியாயம் 84தியாக சிகரம் - அத்தியாயம் 85தியாக சிகரம் - அத்தியாயம் 86தியாக சிகரம் - அத்தியாயம் 87தியாக சிகரம் - அத்தியாயம் 88தியாக சிகரம் - அத்தியாயம் 89தியாக சிகரம் - அத்தியாயம் 90தியாக சிக... | 6 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation
This Book was produced using LaTeX + Pandoc
சங்ககால அளவுகள்
1 காதம் = சுமார் 16 கிலோமீட்டர் (10 மைல்)
1 நாழிகை = 24 நிமிடம் (2½ நாழிகை = 1 மணிநேரம்)
1 முகூர்த்தம் = 3¾ நாழிகை = 90 நிமிடம்
1 ஜாமம் (சாமம்) = 2 முகூர்த்தம் = 7½ நாழிகை = 180 நிமிடம்
1 நாள் (பகல் ... | 7 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்... | 8 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
மாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான... | 9 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்... | 10 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்க... | 11 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
மீதிருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட்டாஞ்சோறு சாப்பிடு!” என்றாள்.
உடனே, பல இள நங்கைகள் நம் வாலிபப் பிரயாணியைப் பார்த்தார்கள். அவனுடைய தோற்றத்தைக் குறித்துத் தங்களுக்குள் இரகசியமாய்ப் பேசிக் கொண்டு கலகலவென்று சிரித்தார்கள். வந்தியத்தேவனை ஒரு பக்கம் வெட்கமும் இன்னொருபுறம் குதூகலமும் பிடுங்கித் தின்றன. அந்த மூதாட்டி சொற்பட... | 12 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
் தொடங்கினார்கள்.
வந்தியதேவனுக்கு இது ஒன்றும் விளங்கவில்லை, இந்த வீரர்கள் யார்? பின்னால் வரும் பாய் விரித்த படகுகளில் யார் வருகிறார்கள்? எங்கிருந்து வருகிறார்கள்? ஒருவேளை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பார்களோ?
ஏரிக்கரையில் கையிலே கோல் பிடித்து நின்ற பெரியவர் ஒருவரை வல்லவரையன் அணுகினான். “ஐயா! இந்த வீரர்கள் யாரைச... | 13 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
உரிமையும் அக்குலத்துக்கு உண்டு.
இப்போதுள்ள பழுவேட்டரையர் இருவரில் மூத்தவர் இருபத்து நான்கு போர்களில் ஈடுபட்டவர். அவருடைய காலத்தில் அவருக்கு இணையான வீரர் சோழ நாட்டில் யாருமில்லையென்று புகழ்பெற்றவர். இப்போது பிராயம் ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டபடியால் அவர் போர்க்களங்களுக்கு நேரில் செல்வதில்லை. ஆனால் சோழ நாட்டு அரசாங்கத்தில்... | 14 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
போகாமலிருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் வலுச் சண்டைக்கு இழுத்தாலும் நீ அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. உன்னுடைய வீரத்தை நான் நன்கறிவேன். எத்தனையோ தடவை நிரூபித்திருக்கிறாய், ஆகையால் வலிய வரும் சண்டையிலிருந்து விலகிக் கொண்டாலும் கௌரவக் குறைவு ஒன்றும் உனக்கு ஏற்பட்டு விடாது. முக்கியமாக, பழுவேட்டரையர்களிடமும் என் சிறிய தந்த... | 15 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
? அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார்கள்? எத்தனை நதிகள்? எத்தனை குளங்கள்? எத்தனை தௌிநீர் ஓடைகள்? கவிகளிலும் காவியங்களிலும் பாடப்பெற்ற பொன்னி நதியின் காட்சி எப்படியிருக்கும்? அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? நீரோட... | 16 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
இளவரசர் ஆதித்தர், ஒரு பெரிய முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்; ஒப்புவித்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு யாரிடமும் சண்டை பிடிக்கக் கூடாதென்று. அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதுதான் மிகவும் கடினமாயிருந்தது. ஏதோ இவ்வளவு தூரமும் பிரயாணம் செய்தபோது நிறைவேற்றியாகி விட்டது. இன்னும் இரண்டு நாளையப் பிரயாணம்தானே மிச்சமிருக்கிறது? அ... | 17 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
அங்கே விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மூன்றே பேர்தான் என்பதைப் பார்க்க அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. ஆனால் விவாதத்தில் ஈடுபட்டவர்கள் மூன்றே பேர்தான் என்றாலும், கூட்டத்திலிருந்தவர்கள் பலர் அவ்வப்போது அவரவர்களுக்கு உகந்த வாதக்காரரின் கட்சியை ஆதரித்துக் கோஷங்களைக் கிளப்பினார்கள். அதனாலேதான் அவ்வளவு சத்தம் எழுந்தது என்பதை வ... | 18 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
அத்வைத சந்நியாசி தலையிட்டுக் கூறியதாவது: “நீங்கள் இருவரும் எதற்காக வீணில் வாதம் இடுகிறீர்கள்? சிவன் பெரிய தெய்வமா, விஷ்ணு பெரிய தெய்வமா என்று எத்தனை நேரம் நீங்கள் வாதித்தாலும் விவகாரம் தீராது. இந்தக் கேள்விக்குப் பதில் வேதாந்தம் சொல்கிறது. நீங்கள் கீழான பக்தி மார்க்கத்தில் இருக்கிற வரையில்தான் சிவன் - விஷ்ணு என்று சண்... | 19 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
!’ என்று ஆர்ப்பரித்தனர்.
அப்போது அத்வைத சுவாமிகள், “அப்பனே! நிறுத்திக் கொள்! தடி உன்னுடைய கையிலேயே இருக்கட்டும். அப்படியே நீ உன் கைத்தடியால் என்னை அடித்தாலும் அதற்காக நான் கோபங்கொள்ள மாட்டேன். உன்னுடன் சண்டைக்கு வரவும் மாட்டேன். அடிப்பதும் பிரம்மம்; அடிபடுவதும் பிரம்மம். என்னை நீ அடித்தால் உன்னையே அடித்துக் கொள்கிறவனாவ... | 20 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
இருவரையும் விவாதத்தில் உற்சாகப்படுத்தி வந்தவர்கள் தாங்களும் கைகலக்க ஆயத்தமாகி ஆரவாரம் செய்தார்கள்.
இந்த மூடச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வல்லவரையன் மனதில் உண்டாயிற்று.
அவன் நின்ற இடத்திலிருந்து சற்றும் முன்னால் வந்து, “எதற்காக ஐயா நீங்கள் சண்டை போடுகிறீர்கள்? வேறு வேலை ஒன்றும் உங்களுக்கு இல்லையா? சண்டைக்குத... | 21 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
ார்கள்.அவர்களுடைய உயரம் ஒன்றாகவே இருந்தது. ஆயினும் ஐயத்துக்கு இடமின்றி என் கையினால் முழம் போட்டு இருவர் உயரத்தையும் அளந்து பார்த்தேன்…”
“அட பிள்ளாய்! பரிகாசமா செய்கிறாய்?” என்று ஆழ்வார்க்கடியான் கர்ஜனை செய்தான்.
கூட்டத்தினர், “சொல்லு, தம்பி! சொல்லு!” என்று ஆர்ப்பரித்தார்கள்.
“அளந்து பார்த்ததில் இருவரும் சமமான உயரமே இரு... | 22 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
! வழி விடுங்கள்!” என்று இடிமுழக்கக் குரலில் கட்டியம் கூறுதல் கேட்டது.
இவ்வாறு கட்டியம் கூறியவர்கள் முதலில் வந்தார்கள். பிறகு முரசு அடிப்பவர்கள் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பனைமரக் கொடி தாங்குவோர் வந்தார்கள். பின்னர், கையில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் கம்பீரமாக நடந்து வந்தார்கள். இவர்களுக்குப் பின்னால் வந்த அலங்... | 23 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
அருகில் எதையோ யாரையோ பார்த்துவிட்டுத்தான் அந்த மாது ’கிறீச்’சிட்டு விட்டுச் சிவிகைத் திரையை மூடிக் கொண்டாள் என்று அவன் உள்ளுணர்ச்சி சொல்லிற்று. எனவே, சுற்றுமுற்றும் பார்த்தான். ஆழ்வார்க்கடியான் தனக்குச் சற்றுப் பின்னால் ஒரு புளிய மரத்தில் சாய்ந்து கொண்டு நிற்பதைக் கண்டான். அந்த வீர வைஷ்ணவ நம்பியினுடைய முகம் சொல்ல முடிய... | 24 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
தான் இதன் மேல் ஏறவேண்டும்!” என்று அவன் சமத்காரமாய்ப் பேசியதைக் கேட்டு மற்ற வீரர்கள் நகைத்தார்கள்.
ஏனென்றால், தஞ்சாவூர் முத்தரையர் குலம் நசித்துப் போய் நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சோழர்களின் புலிக்கொடி தஞ்சாவூரில் பறந்து கொண்டிருந்தது.
“குதிரையின் எண்ணம் அவ்விதம் இருக்கலாம். ஆனால், என்னைக் கேட்டால், செத்துப் போன தஞ... | 25 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
. பழுவூர் வீரர்கள் பெருங்கூட்டமாயிருந்தனர். அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்குப் போவதில் பொருள் இல்லை. அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக் காத்திருக்கவும் இல்லை. குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு, அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள். குதிரை போன திசையை நோக்கி வந்தியத்தேவன் சென்றான். அது கொஞ்ச தூரம் ஓடிவிட்... | 26 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
தென் மேற்குப் பக்கம் போவேன்!” என்றான் வந்தியத்தேவன்.
“அதையெல்லாம் நான் கேட்கவில்லை இன்று ராத்திரி எங்கே தங்குவாய் என்று கேட்டேன்.”
“நீ எதற்காக அதைக் கேட்கிறாய்?”
“ஒருவேளை கடம்பூர்ச் சம்புவரையர் அரண்மனையில் நீ தங்குவதாயிருந்தால், எனக்கு அங்கே ஒரு வேலை இருக்கிறது..”
“உனக்கு மந்திரதந்திரம் தெரியுமா, என்ன? நான் கடம்பூர் அ... | 27 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
பெரிய விருந்து நடைபெறும். விருந்துக்கு பிறகு களியாட்டம், சாமியாட்டம், குரவைக் கூத்து எல்லாம் நடைபெறும். குரவைக் கூத்துப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை!
“அப்படியிருந்தாலும் நான் உன்னை எப்படி அழைத்துப் போக முடியும்?”
“என்னை உன் பணியாள் என்று சொன்னால் போகிறது.”
வந்தியத்தேவனுக்கு முன்னால் ஏற்பட்ட சந்தேகம் வலுப்பட்டது.... | 28 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
மகான்.”
“நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஓரே கூட்டமாயிருக்கிறதே! கோயிலில் ஏதாவது விசேஷ உற்சவம் உண்டோ?”
“ஆம்; இன்று ஆண்டாள் திருநட்சத்திரம்.ஆடிப் பதினெட்டாம் பெருக்கோடு ஆண்டாளின் திருநட்சத்திரமும் சேர்ந்து கொண்டது; அதனால்தான் இவ்வளவு கோலாகலம். தம்பி! ஆண்டாள் பாசுரம் ஏதாவது நீ கேட்டிருக்கிறாயா?”
“கேட்டதில்லை.”
“கேட்காதே! ... | 29 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும் பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த... | 30 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
பரந்து திரிகின்றனவே!”
இவ்விதம் பாடி வந்தபோது ஆழ்வார்க்கடியானுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகித் தாரை தாரையாய் அவன் கன்னத்தின் வழியாக வழிந்தோடியது. வந்தியத்தேவன் அப்பாடல்களைக் கவனமாகவே கேட்டு வந்தான்.அவனுக்குக் கண்ணீர் வராவிட்டாலும் உள்ளம் கசிந்துருகியது. ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவன் முன்னர் கொண்டிருந்த கருத்தும் ம... | 31 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
தேடிச் சேகரித்து வரப்போகிறார். அப்பாசுரங்களை அவருடைய சீடர்கள் இசையுடன் பாடி நாடெங்கும் பரப்பப் போகிறார்கள்.
நாதமுனிகளின் பேரராக அவதரிக்கப்போகும் ஆளவந்தார் பல அற்புதங்களைச் செய்தருளப் போகிறார்.
இந்த இருவரும் அவதரித்த க்ஷேத்திரத்தைத் தரிசிக்க, உடையவராகிய ஸரீ ராமானுஜரே ஒரு நாள் வரபோகிறார். வரும்போது வீரநாராயண ஏரியையும் அத... | 32 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
வேறு யாராவது இத்தகைய வார்த்தையை என்னிடம் சொல்லியிருந்தால்…”
“தம்பி! படபடப்பு வேண்டாம்! உன்னால் முடியாது என்றால் மகாராஜனாய்ப் போய் வா! ஆனால் எனக்கு மட்டும் இந்த உதவி நீ செய்திருந்தால், ஏதாவது ஒரு சமயத்தில் உனக்கும் என் உதவி பயன்பட்டிருக்கும் பாதகமில்லை; போய் வா!”
வந்தியத்தேவன் பிறகு அங்கே ஒரு கணம்கூட நிற்கவில்லை. குதிர... | 33 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
போவதுதான் உசிதம் என்றும் அந்த வீர வாலிபன் எண்ணினான். அந்த எண்ணத்தை உடனே காரியத்தில் நிறைவேற்றினான். ஆனால் என்ன ஏமாற்றம்? குதிரை கோட்டை வாசலை அணுகியதும் வேல் பிடித்த வீரர்கள் இருவர் தங்கள் வேல்களைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்தார்கள். இன்னும் நாலு பேர் வந்து குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒரு... | 34 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
த்திற்கு வீண் வம்பு? திரும்பிப் போய் விடலாமா? அல்லது, இளவரசர் ஆதித்த கரிகாலரின் முத்திரை பதித்த இலச்சினையை இவர்களிடம் காட்டிவிட்டு உள்ளே போகலாமா?” என்ற யோசனை தோன்றி இருந்தது. வடதிசைப் படையின் மாதண்ட நாயகராகிய இளவரசரின் இலச்சினையைப் பார்த்துவிட்டுத் தன்னைத் தடுக்கக்கூடியவர்கள் வடபெண்ணையிலிருந்து குமரிமுனை வரையில் யாரும்... | 35 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
கையிலிருந்த வாளைச் சுழற்றிக் கொண்டே, “கந்தமாறா! கந்தமாறா! உன் ஆட்கள் என்னைக் கொல்லுகிறார்கள்!” என்று கத்தினான்.
இதைக் கேட்டதும் அவனைச் சூழ்ந்திருந்த வீரர்கள் திடுக்கிட்டுச் சிறிது தயங்கி விலகி நின்றார்கள்.
அச்சமயம் மாளிகையின் மேல்மாட முகப்பிலிருந்து, “அங்கே என்ன கூச்சல்? நிறுத்துங்கள்!” என்ற ஒரு இடி முழக்கக் குரல் கேட்... | 36 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
உலக்கைக் கொழுந்துதான்!” என்றான் கந்தமாறன்.
கந்தமாறன் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போனான். அவனுடைய கால்கள் தரையில் நில்லாமல் குதித்துக் கொண்டேயிருந்தன. அவனுடைய உள்ளமும் துள்ளிக் குதித்தது. யௌவனப் பிராயத்தில் உண்மையாக உள்ளம் ஒன்றுபட்ட ஒரு நண்பன் கிடைத்தால் அதைக்காட்டிலும் ஒருவனைப் பரவசப்... | 37 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
அமர்த்தியிருக்கும் மூடர்கள்!” என்றான் கந்தமாறவேள்.
“இருந்தாலும் இன்றைய தினம் பார்த்து, அதுவும் இருட்டி அரை ஜாமத்திற்குப் பிறகு, இவன் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்திருக்க வேண்டியதில்லை!” என்றார் சம்புவரையர்.
கந்தமாறவேளின் முகம் சுருங்கிற்று; மேலும் தந்தையுடன் வாதமிட அவன் விரும்பவில்லை. வந்தியத்தேவனை அப்பால் அழைத்துச் செ... | 38 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
ச் சீக்கிரம் உணவு அளித்து எங்கேயாவது ஒரு தனி இடத்தில் படுக்கச் சொல்லு! நீண்ட பிரயாணம் செய்து களைத்துப் போயிருக்கிறான்” என்றார். மாறவேள் கோபத்துடன் தலையை அசைத்து விட்டுப் போனான்.
பிறகு மாறவேள் வந்தியத்தேவனை அந்தப்புரத்துக்கு அழைத்து சென்றான். அங்கே பெண்கள் பலர் இருந்தார்கள். மாறவேளின் அன்னைக்கு வந்தியத்தேவன் நமஸ்காரம் ச... | 39 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
கோபுரங்கள், ஸ்தூபி கலசங்கள், குதிரை லாயங்கள் ஆகியவற்றை வந்தியத்தேவனுக்குக் கந்தமாறன் காட்டிக் கொண்டு சென்றான்.
இடையில் வந்தியத்தேவன், “கந்தமாறா! என்னை அந்தப்புர வாசலில் நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம்? உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அ... | 40 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
அது ஒன்றுமில்லை உண்மைக் காரணத்தை நான் சொல்லட்டுமா, கந்தமாறா? பெண்கள் எப்போதும் சற்று பொறாமை பிடித்தவர்கள். உன் வீட்டுப் பெண்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லுகிறேன் என்று நினைக்காதே! பெண் உலகமே இப்படித்தான்! உன் குடும்பத்துப் பெண்கள் கருநிறத்து அழகிகள். பழுவேட்டரையரின் ஆசை நாயகியோ செக்கச் செவேலென்று பொன்னிறமாயிருக்கிறாள்.... | 41 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
உனக்குத் தெரிந்தது?” என்றான்.
"கடம்பூர் மாளிகையின் கரிய பெரிய மத்தகஜத்தின் மீது பழுவேட்டரையர், எருமைக்கடா மீது யமதர்மன் வருவது போல் வந்து கொண்டிருந்தார்! என்னுடைய ஞாபகமெல்லாம் அவர் மேலேதானிருந்தது. ஒரு காலத்தில் அவரைப் போல் நானும் ஆகவேண்டும் என்று மனோராஜ்யம் செய்து கொண்டிருந்தபோது, அடுத்தாற்போல், ஒரு மூடுபல்லக்கு வந்த... | 42 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
இது! நீ குரவைக் கூத்து பார்க்க விரும்புகிறாயா? அல்லது சீக்கிரம் உணவு அருந்திவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்குகிறாயா?”
ஆழ்வார்க்கடியான் குரவைக் கூத்தைப் பற்றிக் குறிப்பிட்டது அச்சமயம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. “குரவைக் கூத்து நான் பார்த்ததேயில்லை; கட்டாயம் பார்க்க வேண்டும்” என்றான். அந்த நண்பர்கள் இன்னும் சில... | 43 | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் | 512 |
End of preview. Expand in Data Studio
Tamil பொன்னியின் செல்வன் Dataset by கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
Description
This dataset contains Tamil பொன்னியின் செல்வன் texts by கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, processed for language model pretraining.
Contents
- 2290 text chunks
- Author: கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
- Genre: பொன்னியின் செல்வன்
- Total chunks: 2290
Usage
from datasets import load_dataset
dataset = load_dataset("Naveen934/tamil_data_kalki_Fiction")```
- Downloads last month
- 15