Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
text
stringlengths
0
2.1k
Extracted from: /content/Puthumai Pithan Sirukathaikal.pdf
Total pages extracted: 185
==================================================
--- Page 1 ---
பல ரித்த , Project Madurai ரு மிண்தொகுப்புத்திட்டட் எண; புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு பாகம் 4 , சிறுகதைகள் 61-90 Collection of short stories of putumaippittan part 4, short stories 61-90 In Tamil script, unicodeutf-8 format Acknowledgements: Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned P...
========================================
--- Page 2 ---
2 புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு பாகம் 4 , சிறுகதைகள் 61-90 உள்ளடக்கம் 61. நொண்டி 76. சாப விமோசனம் 62. ஒப்பந்தம் 77. சாளரம் 63. ஒரு கொலை அனுபவம் 78. சாமாவின் தவறு 64. பால்வண்ணம் பிள்ளை 79. சாயங்கால மயக்கம் 65. பறிமுதல் 80. சமாதி 66. பாட்டியின் தீபாவளி 81. சமாதி 67. பித்துக்குளி 62. சாமியாரும் குழந்தையும் சீடையும் ...
========================================
--- Page 3 ---
3 அதற்கென்ன, நான் கெட்டியாகத்தான் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்றது மற்றொரு குரல். கதர்குல்லாய் அணிந்த தலை, பிறகு இரும்புக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இரு கைகள். மெதுவாகத் தடித்த சரீரத்தை அப்படியே உயர இழுக்கும்பொழுது, மரக்கட்டைகள் ரயில் வண்டியின் படிகளில் இடிபடும் சப்தம் கேட்டது. மனிதனின்...
========================================
--- Page 4 ---
4 அவனும் கதவைச் சாத்திக் கொண்டு போய்விட்டான். வந்தவருக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்திற்கு மேல் இராது; தலை பூராவும் நரைத்துவிட்டது. கதர் உடைதான். நல்ல கறுத்து அடர்ந்த மீசை. திடீரென்று வந்த ஊனத்தினால், உழைப்பு நின்றுவிட அதனால் ஏற்பட்ட உடல் பருமன். வந்தவர் முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு, பீடி குடித்தால் ...
========================================
--- Page 5 ---
5 ஆமாம்! ஆமாம்! தாங்கள்தான் தொண்டர் ராமகிருஷ்ணனோ? ஆமாம்! இந்தக் கால்கள் தடியடியில் போகும்வரை தொண்டனாக இருந்தேன். நினைவு வந்து விட்டது. நான்கு வருடங்களுக்கு முன் என்ன அழகு? என்ன வாலிபம்! மெலிந்ததாயினும் நல்ல கட்டுள்ள உடல். அவரைப் பற்றி நினைவிருக்க வேண்டிய காரணங்கள் உண்டு. ஆமாம், அவரைப் பற்றிய ஒரு காதல் விஷயம் நன்றாக நின...
========================================
--- Page 6 ---
6 பெண். அவனது சுகத்திற்காகவே தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் ஒரு பத்தினிப் பெண்ணின் உருவம் எனது மனக் கண்ணின் முன் தோன்றலாயிற்று. அவனுக்கு வாழ்க்கை, சுகமா அல்லது இன்னலா, அதை அறியும்படி ஒரு சிறிய அவா வரவரப் பெரிய ஆசையாகிவிட்டது. நான் பேசிக் கொண்டுதான் இருந்தேன். மனது அதிவேகமாக வேறு பக்கம் ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்கு மூன...
========================================
--- Page 7 ---
7 மிஸ்டர் பார்வதி நாதனை... தங்கள் காயங்கள்தான் அதற்குக் காரணம் என்றும்... முகத்தை நன்றாகக் கவனித்தேன். முகம் வெட்கத்தால் சிவந்தது. தோற்றுப்போன கட்சியை தோற்றுவிட்டது என்று தெரிந்த பிறகும் வாதிப்பவர் போல், ஒரு பரபரப்புடன் பேசிக்கொண்டே போனார். மிஸ்டர் பார்வதிநாதனுடைய பெயருடன் என்னையும் முடிச்சு போடுவது வெறும் அபத்தம். நான...
========================================
--- Page 8 ---
8 ஒரு பெண்ணும் இரண்டு ஆணும்; இவைகள் எல்லாம் அவர்களுக்குத்தான். அவள் புருஷன் என்மேல் அதிகப் பிரியமாக இருக்கிறார்! அதற்குள் அந்தச் சிறு டன்னல் வழியாக ரயில் சென்று பிளாட்பாரத்தில் நின்றது. அவருக்கு உதவி செய்யும்படி நான் எழுந்தேன். அதற்குள் ஒரு மனிதனின் இரண்டு கரங்கள், திறந்த கதவின் வழியாக நீட்டப்பட்டன. அந்த மனிதனுக்குப் ப...
========================================
--- Page 9 ---
9 என்ன, நீங்களா கூப்பிட்டிய; இன்னா வாரேன். நம்ம குட்டிக்கு - பார்வதிநாதனின் செல்லப் பெயர் - பொண்ணு பார்க்க வேண்டாமா? எனக்கென்ன தெரியும்? நீங்க சொல்லுதது சதி. நம்ப சிங்கிகுளத்துப் பொண்ணெப் பாத்தா என்ன? பொண்ணு நல்ல செவத்த பொண்ணு; கண்ணும் முளியும் அப்படியே பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆனா, புள்ளையவாளுக்குப் பிடிக்குமோ என்னம...
========================================
--- Page 10 ---
10 இம்புட்டுத்தானே! சதி, சதி. பேச்செ விட்டுத் தள்ளு. நம்ம பேட்டைப்பிள்ளை ஐயாயிரம் நகை மருக, கலியாணச் செலவு ஒரு ரெண்டாயிரம் யென்று சொன்னாரே! ஆமா, பொண்ணு கறுப்பில்லியா? எதுக்கும் கேட்டுப் பாருங்களேன். சதி, நீ என்ன சொல்லுதே? பாத்தா என்ன? நானும் அக்காளும் போயிட்டுத்தான் வாரமே! என்றாள். சதி, நாளைக்கு மேக்கெ சூலம். நாளைக் கழ...
========================================
--- Page 11 ---
11 மெத்தைக்கு ஏறினவன். நாளைக்குப் புறப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். 2 பெண்ணை எல்லாம் போய்ப் பார்த்துவிட்டு வந்தாகிவிட்டது. சங்கரலிங்கம் பிள்ளையின் மனைவிக்கு சிங்கிகுளத்துப் பெண் பேரில் நோக்கம். சங்கரலிங்கம் பிள்ளைக்கு இப்பொழுது மகனுக்கு வேலையாகி விட்டதால் ரேட்டை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம். நகை வழ...
========================================
--- Page 12 ---
12 அவருடைய தர்மபத்தினியும், வாருங்க! சேவிக்கேன்! என்று வரவேற்றுவிட்டு, அவசர அவசரமாகப் பெருக்கிவிட்டு, ஜமுக்காளத்தை எடுத்து விரித்து, வெற்றிலைச் செல்லத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள். நாங்கள் எல்லாம் காப்பி ஆச்சு. நீங்கள் ஆச்சா? இல்லவிட்டா முடிச்சுக்கொண்டு வந்துவிடுங்கள் என்றார் நாராயண பிள்ளை. நான் எல்லாம் ஆச்சு...
========================================
--- Page 13 ---
13 வேலை. இனிசூபெக்டரு, தாசில்தாரா வரலாம் உங்க பெண்ணுக்கு ராஜயோகம்! என்று மத்தியஸ்தம் பேசினார் நாவன்னா. சதி! பொறவு நீங்க சொல்லுறப்பா என்னா? என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை. வேறெ என்ன அய்யா? இப்பவே வெத்தலை பாக்கு கைமாறிடுத்து. வர வியாழக்கிழமை நல்ல தினம். அன்னைக்கி திருமங்கிலியத்திற்குப் பொன்னுருக்கி விடுகிறது. சரிதானே பிள...
========================================
--- Page 14 ---
14 அந்தச் சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் சரிதானே? மணிக்கொடி, 05-08-1934 63. ஒரு கொலை அனுபவம் இருள். எங்கு பார்த்தாலும் கரியவிருள். ரோட்டில் வெளிச்சம் மங்கியது. ஒற்றை விளக்கு. அந்த இருட்டிலே ஒரு மனிதன் ...
========================================
--- Page 15 ---
15 அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது. ஏன் இப்படி நடக்கவேண்டும்? ஆசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி. கிட்ட நெருங்கட்டும். அதைத்தான் பார்ப்போம். இதென்ன அதிசயம்? அவனும் நான் தான். முதல் வந்த ஆசாமிதானா அவன்? தலைதான் கம்பத்தின் மேல் தெரிகிறதே. எனக்குப் பைத்தியமா? அல்லது பிரம்மாவிற்குத்தான் ...
========================================
--- Page 16 ---
16 மூன்றும் என் குரல். எல்லாம் இருள். ஒன்றையும் காணோம்! விழித்தேன். பக்கத்தில் எனது நண்பன். பகலில் என்ன தூக்கம்? என்று முதுகைத் தட்டிக்கொண்டிருந்தான். எதிரே எழுதுகோல், காகிதம், இத்யாதி. துப்பறியும் நாவல் எழுதுவது என்றால் லேசா? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல வேண்டும். பிறகு துப்பறிவோனாகக் கண்டுபிடிக்க வேண்டும்....
========================================
--- Page 17 ---
17 பால்வண்ணம் பிள்ளை தமது கட்சியை நிரூபிப்பதற்காக வெகு வேகமாக வீட்டிற்கு வந்தார். பால்வண்ணம் பிள்ளைக்கும் அவருடைய மனைவியாருக்கும் கர்ப்பத் தடையில் நம்பிக்கை கிடையாது. அதன் விளைவு வருஷம் தவறாது ஒரு குழந்தை. தற்பொழுது பால்வண்ண சந்ததி நான்காவது எண்ணிக்கை; பிறகு வருகிற சித்திரையில் நம்பிக்கை. இப்படிப்பட்ட குடும்பத்தில் பால...
========================================
--- Page 18 ---
18 வீட்டிற்குள் ஏறியதும், ஏளா! அரங்குச் சாவி எங்கே? என்று கேட்டுக்கொண்டே மாடிக்குச் சென்று ஷெல்பை ஆராய்ந்தார். அவர் மனைவி சாவியை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தாள். அவளுக்குப் பால் நெருக்கடியை ஒழிக்கும் மாட்டுப் பிரச்னையை அவரிடம் கூற வேண்டும் என்று உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. ஆனால் மெக்ஸிகோ பிரச்னையில் ஈடுபட்டிருக்...
========================================
--- Page 19 ---
19 மனைவி சிரித்துக் கொண்டே - உள்ளுக்குள் பயம் தான் - வந்தாள். மாடு எப்பொழுது வந்தது? யார் வாங்கிக் கொடுத்தா? என்றார். மேலவீட்டு அண்ணாச்சி வாங்கித் தந்தாஹ. பாலு ஒரு படி கறக்குமாம்! என்றாள். உம் என்றார். அன்று புதுப்பால், வீட்டுப் பால் காப்பி கொண்டு வந்து வைத்துக் கொண்டு கணவரைத் தேடினாள். அவர் இல்லை. அதிலிருந்து பிள்ளையவ...
========================================
--- Page 20 ---
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
3